கொழு கொழு கன்னமே, நீ எனக்கு வேணுமே!

Cheeks
Cheekscredits : Shutterstock
Published on

ஒருவரின் அழகை மேலும் கூட்டுவதில் கன்னங்களுக்கு பெரும் பங்கு உண்டு. நாம் சிரிக்கும் போது அந்த சிரிப்பை அழகாக காட்டுவது கன்னங்கள் தான். ஒரு முறை கண்ணாடியை பார்த்து சிரித்து பாருங்கள். நீங்களே உணர்வீர்கள்! அதிலும் நல்ல கொழு கொழு கன்னம் உடையவர்கள் சிரிக்கும் போது பார்ப்பதற்கு கவர்ச்சியாகவும் அழகாகவும் இருக்கும். இதனாலே அதிக நபர்கள் கொழு கொழு கன்னம் வேண்டும் என்று விரும்புவர்.

ஆனால் சிலருக்கு முகத்தில் கன்னங்கள் ஒட்டி போய் காணப்படும். பொதுவாகவே, கன்னங்கள் முகத்தில் எலும்புடன் ஒட்டி இருந்தாலோ, வறண்டுபோய் காணப்பட்டாலோ வயதான தோற்றம் இருப்பது போன்று தெரியலாம். கவலை வேண்டாம்! உங்கள் கன்னங்களை கொழு கொழு என இயற்கை முறையில் மாற்றி, எப்படி இளமை தோற்றம் பெறுவது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

நீங்கள் கொழு கொழு கன்னங்களை பெற விரும்பினால், அவற்றை பாதுகாப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் கன்னங்கள் ஆரோக்கியமாக இருக்க முக யோகா செய்யுங்கள். அதோடு சில  வீட்டு வைத்தியங்களையும் பின்பற்றுங்கள்.

கொழு கொழு கன்னங்களுக்கான வீட்டு வைத்தியங்கள்:

ஆப்பிள்

ஆப்பிளில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. இது உங்கள் சருமத்திற்கு மிகவும் நல்லது. ஆப்பிளில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உங்கள் சரும செல்களை குணப்படுத்துவதோடு, சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களையும் குறைக்கிறது. அதுமட்டுமின்றி, இதன் உபயோகத்தால் கன்னம் மென்மையாகவும், குண்டாகவும் மாறும். 

கற்றாழை

கற்றாழையில் உள்ள பண்புகள் உங்கள் சருமத்தை இறுக்கமாக வைத்திருக்க உதவும். கற்றாழை ஜெல் மூலம் உங்கள் முகத்தை சுமார் 10 நிமிடங்கள் மசாஜ் செய்து 20 நிமிடங்களுக்கு பின், உங்கள் முகத்தை வெதுவெதுப்பான நீரால் கழுவவும். இதை ஒரு நாளைக்கு இரண்டு முறை பயன்படுத்தினால் சில நாட்களில் வித்தியாசத்தை நீங்கள் காணத் தொடங்குவீர்கள்.

இதையும் படியுங்கள்:
அவகோடா பழத்தின் விதையிலிருக்கும் ஆரோக்கிய நன்மைகள்!
Cheeks

வெந்தயம்

வெந்தயம் பல வகையான பிரச்னைகளை நீக்கக் கூடியது. ஒரு பாத்திரத்தில் 1 தேக்கரண்டி வெந்தயப் பொடியை எடுத்துக் கொள்ளவும். அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து உங்கள் முகத்தை மசாஜ் செய்யவும். அதன்பின் சிறிது நேரம் கழித்து உங்கள் முகத்தை சுத்தமான தண்ணீரில் கழுவவும். இதைப்போன்று வாரத்திற்கு 2 முதல் 3 முறை மசாஜ் செய்வதன் மூலம் உங்கள் கன்னங்களில் ஏற்படும் மாற்றத்தை நீங்கள் உணரலாம்.

ஷியா வெண்ணெய்

ஷியா வெண்ணெய் பயன்படுத்தினால் உங்கள் கன்னங்கள் பளபளப்பாக மாறும். இதில் வைட்டமின் ஈ உள்ளது. இது சருமத்தை இறுக்கமாக வைத்திருக்க உதவும். ஷியா வெண்ணெய் கொண்டு உங்கள் கன்னங்களை 5 நிமிடங்கள் மசாஜ் செய்து சுமார் 10 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். வாரத்திற்கு இரண்டு முறை இவ்வாறு செய்தால், உங்கள் ஒட்டிய கன்னங்களை குண்டாக மாற்றலாம்.

ஆலிவ் எண்ணெய்

ஆலிவ் எண்ணெய் கன்னங்கள் குண்டாக மிகவும் உதவியாக இருக்கும். இந்த எண்ணையை பயன்படுத்துவதன் மூலம் வறண்ட சரும பிரச்னையில் இருந்தும் எளிதில் நிவாரணம் பெற முடியும். முதலில் 1 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெயை எடுத்து, அதில் 1 வைட்டமின் ஈ காப்ஸ்யூல் சேர்க்கவும். இப்போது இந்த கலவையால் உங்கள் கன்னங்களை மசாஜ் செய்து, 10 நிமிடம் கழித்து சுத்தமான நீரில் முகத்தை கழுவவும். இதை பயன்படுத்துவதன் மூலம் உங்கள் கன்னங்கள் கொழு கொழுவென்று மாறுவதை நீங்கள் உணர முடியும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com