அவகோடா பழத்தின் விதையிலிருக்கும் ஆரோக்கிய நன்மைகள்!

Avocado seed
Avocado seedhttps://tamil.boldsky.com
Published on

வெண்ணைப் பழம் எனக் கூறப்படும் அவகோடா பழத்தில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், மக்னீசியம், பொட்டாசியம், நல்ல கொழுப்புகள் போன்ற பல ஊட்டச் சத்துக்கள் நிறைந்துள்ளது அனைவரும் அறிந்தது. அதேபோல், அவகோடா பழத்தின் விதையில் இருந்தும் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்த விதைகளில் ஒளிந்திருக்கும் ஊட்டச்சத்துக்கள் என்னென்ன என்பது குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.

அவகோடா பழத்தின் விதையில் பாலிபினால், ஃபிளவனாய்ட்ஸ் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன. இவை நம் உடலில் முன்கூட்டிய முதிர்ச்சி நிலை மற்றும் பல்வேறு வியாதிகள் வருவதைத் தடுக்கவும், உடலில் ஃபிரீ ரேடிக்கல்களின் அளவை சமநிலைப்படுத்தி வைக்கவும் உதவும்.

இதில் டயட்டரி ஃபைபர் அதிகம் உள்ளது. இவை உடலில் அதிகப்படியாய் உள்ள கொழுப்பின் அளவைக் குறைத்து, இதய நோய் வரும் அபாயத்தைத் தடுக்கும். இது செரிமானம் சிறப்பாக நடைபெற உதவி புரிந்து, குடல் இயக்கம் நார்மலாகச் செய்யும். உடலில் உண்டாகும் வீக்கங்களைக் குறைக்கவும் இது உதவுகிறது.

ஆலிவ் ஆயிலில் இருப்பது போன்ற ஓலிக் ஆசிட் உள்ளிட்ட மோனோ அன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் அவகோடா விதைகளில் அதிகம் உள்ளன. இவை இதய ஆரோக்கியம் காக்கவும் உடலுக்கு வேறு பல நன்மைகளையும் தரக்கூடிய நற்குணங்கள் கொண்ட கொழுப்புகள் ஆகும்.

இதையும் படியுங்கள்:
10 அடி நீள தந்த மூக்கு கொண்ட அரிய வகை நார்வால் திமிங்கலத்தின் சிறப்புகள்!
Avocado seed

இந்த விதைகளில் வைட்டமின் C, E, பொட்டாசியம், மக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன. இவை தசைகள் சரிவர இயங்கவும், சரும ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும், நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும் உதவுகின்றன.

இந்த விதைகளை வறுத்துப் பொடித்து அல்லது துருவி எடுத்து சூப், சாலட் மற்றும் கிரேவி போன்ற பல வகை உணவுகளிலும் சேர்த்து உண்ணலாம். இதனால் பலவித ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com