மினுமினுக்கும் சருமம் வேண்டுமா? இந்த வெந்தய ஃபேஸ் பேக் போதும்!

Beauty tips in tamil
fenugreek face pack
Published on

ம் சமையலறையில் உணவாக நாம் எடுத்துக்கொள்ளும் வெந்தயத்தை ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, சரும அழகை மேம்படுத்தவும் பயன்படுத்தலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? இரும்புச் சத்தும், நார்ச்சத்தும் மிகுந்தது வெந்தயம். நம்முடைய சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்கி சருமத்தின் பொலிவையும் தன்மையையும் மேம்படுத்தும்!

கூந்தல் பராமரிப்புக்கு மட்டுமல்லாது முகத்தின் அழகிற்கும், சருமத்தை பளபளப்புடனும் பிரகாசத்துடனும் வைத்துக்கொள்ளவும் வெந்தயம் பயன்படும் என்பது பலர் அறியாதது!

நம் முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள், தழும்புகள், கருந்திட்டுக்கள் ஆகியவற்றைக் குறைக்கும் மிகச்சிறந்த ஆற்றல்கொண்டது. இதில் மிகுந்திருக்கும் ஆன்ட்டி ஏஜிங் தன்மையால் நம் முகத்தின் இளமையை தக்க வைத்துக் கொள்ளலாம்.

வேதிப்பொருள்கள் எதுவும் இல்லாத - எளிமையான  இந்த வெந்தய ஃபேஸ் (fenugreek face pack) பேக்கை எப்படிச் செய்வது என்று பார்ப்போம்!

தேவையான பொருட்கள்:
வெறும் வாணலியில் வறுத்தரைத்த வெந்தயப் பொடி - 1 ஸ்பூன், கற்றாழை ஜெல் - 2 ஸ்பூன், பாதாம் எண்ணெய் - 1 ஸ்பூன். ஒரு சிறிய கிண்ணத்தில் கற்றாழை ஜெல், பாதாம் எண்ணெய் இரண்டையும் சேர்த்து, விடாமல் தொடர்ந்து கலக்கிக்கொண்டே இருக்கும்போது, இக்கலவை க்ரீம் போன்ற பதத்திற்கு வந்துவிடும். அடுத்து, வெந்தயப் பொடியைச் சேர்த்து நன்கு கலக்கவும்.
அவ்வளவுதான்...  வெந்தயம் ஃபேஸ் பேக் ரெடி.

உபயோகிக்கும் முறை:

இந்தக் க்ரீமை ஒரு சிறிய பிரஷ்ஷில் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து, கழுத்து மற்றும் முகத்தில் கீழிருந்து மேலாக பூசவும். சுமார் 15 நிமிடங்களில் உலர்ந்தபின் முக சருமத்திற்கு ஓர் இறுக்கம் கிடைக்கும். உடனே, தண்ணீர் தெளித்து முகம் மற்றும் கழுத்தை மசாஜ் கொடுப்பது போலத் தேய்த்து, சுத்தமான துணியால் அழுந்தத் துடைத்து பேக்கை நீக்கவும். குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவவும். அவ்வளவுதான்!

இது நம் சருமத்தை மிருதுவாகவும், பளிச்சென்றும் ஆக்கும். குறிப்பாக கழுத்து கருமையாக இருப்பவர்கள் இந்தப் பேக்கை தொடர்ந்து பயன்படுத்த கருமை மறைவதைப் பார்க்கமுடியும்.  முகப்பருக்களைக் கட்டுப்படுத்தும் ஆற்றலும் இந்தப் பேக்கிற்கு உண்டு. கற்றாழையும் பாதாம் எண்ணெயும் கலப்பதால் அனைத்து வகை சருமம் கொண்டவர்களுக்கும் ஏற்றது.

இதையும் படியுங்கள்:
அழகுக்கு உதவும் மரத்துப் பிசின்கள்! சருமத்திற்கு ஒரு இயற்கை வரம்!
Beauty tips in tamil

* குறிப்பு: இந்த  ஃபேஸ் பேக்கை போடுவதற்கு முன்பு சருமத்துளைகளுக்குள் அடைபட்டிருக்கும் வியர்வை, எண்ணெய், அழுக்குகளை நீக்குவதற்காக - பால் மற்றும் ரோஸ் வாட்டர் ஆகிய  இரண்டையும் கலந்து பஞ்சு உருண்டைகளை நனைத்து முகத்தை அழுந்தத் துடைத்து 'க்ளென்ஸ்' செய்வது.
* வெந்தயப்பொடியுடன் எலுமிச்சைச் சாறு, வெள்ளரிச்சாறு, பன்னீர் என பல்வேறு வகையான ஃபேஸ் மாஸ்க்குகளை நீங்கள் விருப்பம்போல பூசிக்கொள்ளலாம்.
* வெந்தயம் குளிர்ச்சி தரக்கூடியது என்பதால் இந்த ஃபேஸ் பேக்கை  வாரத்தில் ஒரு முறை பயன்படுத்தலாம்.

* குளிர்ச்சி ஒத்துக்கொள்ளாதவர்கள்  இந்தப் பேக்கைத் தவிர்த்துவிடவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com