தற்போது பெண்களுடைய ஃபேஷன் டிரெண்டில் ஹிப் பெல்ட் மிகவும் பிரபலமாக உள்ளது. ஹிப் பெல்ட்டை புடவை, குர்த்தி என்று அனைத்து விதமான உடை களுடனும் அணிந்துக் கொள்ள முடியும். ஆடைக்கு ஏற்றார் போல சிம்பிள் மற்றும் கிராண்டான ஹிப் பெல்ட்கள் இருக்கின்றன. அவற்றை பற்றி விரிவாக இந்தப்பதிவில் காண்போம்.
1.முதலில் நாம் ஹிப் பெல்ட் போடும் பொழுது அது நம்முடைய Waist ஐ define செய்துக் காட்டுவதால் நம்முடைய உடல் வடிவமைப்பு அழகாக தெரியும்.
2.ஹிப் பெல்ட் போட்டுக் கொள்வதற்கான காரணம், நாம் எவ்வளவு வேலைப் பார்த்தாலும் புடவைக் கலையாமல் அதே இடத்திலேயே இருக்கும்.
3.பர்பெக்டாக Pleats எடுத்துக் கட்டப்பட்ட புடவையை அப்படியே பலமணி நேரம் பாதுகாப்பாக கலையாமல் அழகாக பார்த்துக் கொள்ளவும் ஹிப் பெல்ட் உதவும்.
4.பட்டுப்புடவை கட்டும் பொழுது காம்பிளிமெண்டரி நிறத்தில் அதிக வேலைப்பாடுகள் உடைய ஹிப் பெல்ட்டை போடுங்கள். இதுவே, சாதாரண புடவைகள் கட்டும் பொழுது சிம்பிளான, அழகான ஹிப்பெல்ட்டை பயன்படுத்துங்கள். இப்படி ஹிப்பெல்ட் அணியும் பொழுது கண்டிப்பாக அது உங்கள் லூக்கை உயர்த்திக் காட்டும்.
5.ஹிப்பெல்ட் என்பது புதிதாக வந்த ஃபேஷனெல்லாம் கிடையாது. திருமண நிகழ்ச்சியில் ஒட்டியாணம் அணிந்துக்கொள்வோம். ஆனால், அதை எல்லா நாட்களிலும் அணிந்துக்கொள்ள முடியாது என்பதால் அதற்கு மாற்றாக ஹிப்பெல்ட் வந்துவிட்டது. சாதாரணமாக புடவைக் கட்டி அதற்குமேல் லெதர் பெல்ட்டைக்கூட அணிந்துக் கொள்கிறார்கள்.
6. இந்த பெல்ட்டில் பல வகைகள் உள்ளன. லெதர் பெல்ட், ஸ்டீல் பெல்ட், துணியிலேயே எம்ராய்டரி செய்யப்பட்டு புடவைக்கு ஏற்ற வண்ணம் விற்பனை செய்யப்படுகிறது. பாரம்பரியமான புடவையுடன் ஃபேஷனான ஹிப்பெல்ட்டையும் சேர்த்து அணியும்போது அதுமேலும் பெண்களின் அழகை மெறுகேற்றிக் காட்டுகிறது.
7.தற்போது இந்த ட்ரெண்டை பல பிரபலங்கள் பின்பற்றுவதால், பெண்கள் மத்தியிலே ஹிப் பெல்ட் மோகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
8.ஹிப்பெல்ட்டை சரியான விதத்தில் அணியும்போது அது நமக்கு Hourglass எபெக்டைக் கொடுக்கும்.
9. இதில் ஒரு வசதி என்னவென்றால், நமக்கு பிடித்தது போல Customize செய்துக்கொள்ள முடியும். ஹிப்பெல்ட்டை குட்டி செயின் போன்ற மாடலிலும் போட்டுக்கொள்ளலாம் அல்லது துணிகளில் எம்ராய்டரி செய்து அணிந்துக் கொள்ளலாம். பலவித டிசைன், நிறம், மெட்டீரியல் பயன்படுத்தி புடவையுடன் மேட்ச் செய்துக்கொள்ளலாம்.