தோள்பட்டை மற்றும் முதுகில் இருக்கும் பருக்களை நீக்க உதவும் ஐந்து பொருட்கள்!

Pimples
Pimples

இளம் வயதில் தோள்பட்டை மற்றும் முதுகு பகுதிகளில் பருக்கள் வருவது சகஜம்தான். ஆனால், சில உடைகள் போடும்போது அவை அசிங்கமாக தெரியும். ஆகையால், இந்தப் பருக்களை நீக்க உதவும் பொருட்களைப் பற்றி பார்ப்போம்.

முகத்தில் வரும் பருக்களை சரி செய்வதே மிகப்பெரிய போராட்டமாக இருக்கிறது. இதில் முதுகிலும் கழுத்துக்குக் கீழும் பருக்கள் ஏற்பட்டால் என்னதான் செய்வது? முழு நேர போராட்டமாக இருக்குமே என்று எண்ண வேண்டாம். இந்தப் பொருட்கள் இருந்தால், எளிதாக அந்த இடத்தில் இருக்கும் பருக்களை குறைத்துவிடலாம்.

மஞ்சள்:

1 டீஸ்பூன் மஞ்சள் எடுத்து, அதைப் பேஸ்ட்டாக மாற்றுவதற்கு தேவையான பால் அல்லது தண்ணீர் சேர்த்து கலக்க வேண்டும். இதனை அந்தப் பகுதிகளில் தேய்த்து 30 நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும். பின்னர் குளிர்ந்த நீரில் கழுவினால் நல்ல ரிசல்ட் தரும். வாரம் 2 முறை இதனை செய்து வந்தால் நல்ல பலன் தரும்.

தக்காளி:

தக்காளியை இரண்டாக வெட்டி, அதில் சர்க்கரை அல்லது மஞ்சள் சேர்த்துத் தடவி 30 நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும். இதையும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் அல்லது வாரம் இரண்டு முறை பயன்படுத்துவது சிறந்தது.

கற்றாழை:

கற்றாழை ஜெல்லை பருக்கள் உள்ள இடத்தில் நேரடியாக தடவி லேசாக மசாஜ் செய்யவும். பின், அதை 20 நிமிடங்கள் அப்படியே விட்டு, காய்ந்ததும் குளிர்ந்த நீரால் கழுவிக் கொள்ளவும். இது பருக்களால் ஏற்படும் சிவப்பு மற்றும் வீக்கம் ஆகியவற்றையும் குறைக்கிறது. இதை வாரத்தில் 3 முறை விடாமல் செய்து வர, வெகு சீக்கிரத்திலேயே பருக்களில் இருந்து விடுதலை பெறலாம்.

டீ ட்ரீ ஆயில்:

1 ஸ்பூன் டீ ட்ரீ ஆயிலை எடுத்து தினமும் இரவு படுக்கச் செல்வதற்கு முன்பு முதுகு மற்றும் தோள்பட்டையில் தடவிக் கொள்ளவும். இதை மறுநாள் காலையில் குளிர்ந்த தண்ணீர் கொண்டு கழுவிக் கொள்ளவும். தொடர்ந்து இதை பின்பற்றி வர சிறந்த ரிசல்ட் கிடைக்கும்.

இதையும் படியுங்கள்:
அடிக்கடி மொட்டை அடித்தால் அடர்த்தியாக முடி வளருமா? உண்மை இதோ!
Pimples

தேன்:

3 ஸ்பூன் தேனுடன் 1 ஸ்பூன் பட்டை தூள் சேர்த்து பேஸ்ட்டாக்கி கொள்ளவும். இதை இரவில் தூங்க செல்வதற்கு முன் முதுகு மற்றும் தோள்பட்டையில் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து, அடுத்த நாள் காலையில் கழுவிக் கொள்ளவும். இதனால் சரியாக தூங்கமுடியாது என்று நினைப்பவர்கள்,

3 ஸ்பூன் தேனுடன் 1 ஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து பருக்கள் உள்ள இடத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவி கொள்ளவும். இதை வாரத்திற்கு 2 முறை செய்து வரலாம்.

இந்த ஐந்து பொருட்களில் ஒன்றை மட்டுமாவது தொடர்ந்து செய்துப் பாருங்கள். அப்போதுதான் பருக்கள் குறைவது நன்றாகவே தெரியும்.

 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com