வைட்டமின்கள் நிறைந்த பூக்கள்: சருமத்தை இளமையாக்கும் எளிய டிப்ஸ்!

beauty tips in tamil
Simple skin tips
Published on

பொதுவாக சூழலில் காணப்படும் ஒவ்வொரு பூக்களும் ஒவ்வொரு தனித்துவமான நன்மைகளை கொண்டுள்ளது. இதிலுள்ள சில ஊட்டசத்துக்கள் மனித உடலில் நிறைய பாகங்களை மேம்படுத்த உதவுகின்றது. அத்துடன் பூக்களில் ஏராளமான வைட்டமின்கள், ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் உள்ளன. இதனால் சருமத்தை இளமையாக மாற்றுவதோடு, மினுமினுப்பாகவும் வைக்க உதவுகிறது. அந்த வகையில் முக அழகை எவ்வாறு பூக்கள் பராமரிக்கின்றது என்பதனை தொடர்ந்து பார்க்கலாம்.

சாமந்தி பூ

இந்த பூவிலுள்ள ஊட்டசத்துக்கள் கோடைக்காலத்தில் ஏற்பட்ட களைப்பு மற்றும் கருமையை போக்குகின்றது.

தேவையான பொருட்கள்:

சாமந்தி பூக்கள் 3

பால் 1 தேக்கரண்டி

யோகர்ட் - 1 தேக்கரண்டி

துருவிய கேரட் -2 தேக்கரண்டி

செய்முறை:

முதலில் ஒரு மிக்ஸி சாரில் துருவிய கேரட், சாமந்தி பூ இதழ்கள் ஆகிய இரண்டையும் ஒன்றாக சேர்த்து மைப்போல் அரைத்து கொள்ளவும். பின்னர் அந்த கலவையை ஒரு பவுலில் போட்டு அத்துடன் பால் மற்றும் யோகர்ட் கலந்து நன்றாக முகத்தில் அப்ளை செய்ய வேண்டும். சரியாக 15 நிமிடங்கள் முகத்தில் வைத்து விட்டு கழுவினால் முகம் பளபளப்பாகும். இதனை தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு செய்தால் போதும்.

ரோஜா பூ

ரோஜா பூவில் இருந்துதான் பன்னீர் தயாரிக்கப்படுகிறது. இந்த பன்னீரை தான் நாம் முகம் கழுவ என அனைத்திற்கும் பயன்படுத்துகிறோம். ரோஜா பூ பொதுவாக அழுக்குகளை நீக்கும் தன்மையுடையது.

தேவையான பொருட்கள்:

ரோஜாப் பூ- 1

பால் - 1 தேக்கரண்டி

கோதுமை தவிடு - 1 தேக்கரண்டி

இதையும் படியுங்கள்:
பொலிவு மாறாத நகங்கள்: ஜெல் நெயில் பாலிஷின் அற்புதங்கள்!
beauty tips in tamil

செய்முறை:

முதலில் ரோஜாப் பூவின் இதழ்களை தனியாக எடுத்து நன்றாக அரைத்துக்கொள்ளவும். அத்துடன் கோதுமை தவிட்டையும் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கொள்ளவும். பால் கலந்து அரைத்த கலவையை முகத்தில் அப்ளை செய்து மசாஜ் செய்ய வேண்டும். சரியாக 15- 20 நிமிடங்கள் முகத்தில் வைத்துவிட்டு கழுவவேண்டும். இவ்வாறு வாரத்திற்கு இரண்டு தடவையாவது செய்ய வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com