

பள பள என ஜொலிக்கும் நகங்கள்தான் லேட்டஸ்ட் டிரெண்ட். இன்றைய ஃபேஷன் உலகில் உடுத்தும் சாரி, ஹேண்ட் பேக், செருப்புக்கு மேட்ச் ஆக நெயில் பாலிஷ் போடுவது ட்ரெண்ட்டாகி உள்ளது. வேலைக்கு செல்பவர்கள் வீட்டில் உள்ளவர்கள் என அனைத்து தரப்பினருக்கும் நெயில் பாலிஷ் என்பது அத்தியாவசியமான பொருளாகிவிட்டது.
ஜெல் நெயில் பாலிஷ் என்பது நீண்ட காலம் நீடிக்கும், பளபளப்பான பூச்சு வழங்கும் ஒரு பிரபலமான தயாரிப்பாகும். இது வழக்கமான நெயில் பாலிஷிலிருந்து வேறுபட்டு UV அல்லது LED விளக்கு ஒளியின் கீழ் சில வினாடிகள் வைக்க வேண்டும்.
ஜெல் நெயில் பாலிஷின் நன்மைகள்:
நெயில் ஆர்ட் உலகில் தற்போது சூப்பர் ஸ்டாராக இருக்கும் 'ஜெல் நெயில் பாலிஷ்' பார்க்க பளபளப்புடன், நீண்ட நாட்கள் நீடித்தும் இருப்பதால் பலரும் இதை விரும்பிப் போடுகிறார்கள். இந்த ஜெல் பாலிஷ் சரியாக பயன்படுத்தினால் மூன்று வாரங்கள் வரை நீடிக்கும்.
இது வழக்கமான பாலிஷை விட மிகவும் பளபளப்பான(glossy) மற்றும் மென்மையான பூச்சை வழங்குகிறது. உலர்ந்த பிறகு இது ஸ்மட்ஜ் ஆகாது. இதனால் நகங்கள் அழகாக இருக்கும். ஒவ்வொரு கோட்டும் UV/LED விளக்கு ஒளியின் கீழ் விரைவாக காய்ந்துவிடும். இதனால் காத்திருக்கும் நேரம் குறைகிறது.
எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா?
வீட்டிலேயே ஜெல் நெயில் பாலிஷை எளிதாகப் பூசலாம். நகங்களில் பாலிஷை பயன்படுத்துவதற்கு முன்பு, முதலில் நகங்களில் உள்ள பழைய பாலிஷை அகற்றி, நகங்களின் மேற்பரப்பில் உள்ள இயற்கையான பளபளப்பை லேசாக தேய்த்து அகற்றவும். நகங்களை ஆல்கஹால் அல்லது டீஹைட்ரேட்டர் கொண்டு சுத்தம் செய்யவும். மெல்லிய அடுக்கில் அடிப்படை கோட் தடவி, UV/LED விளக்கில் உலர்த்தவும். மெல்லிய அடுக்குகளில் வண்ண பாலிஷைத் தடவவும். ஒவ்வொரு பூச்சையும் உலர்த்தவும். நகத்தின் முனையை மூடுவதை உறுதி செய்யவும். பூச்சு மேலும் நீடிப்பதற்கு மேல் கோட் தடவி உலர்த்தவும். நகங்களில் பாலிஷ் பட்டிருந்தால், அதை உடனடியாக சுத்தம் செய்யவும்.
சில ஜெல் பாலிஷ்களில் பயன்படுத்தப்படும் TPO (Trimethylolpropane Triacrylate) என்னும் ஒருவகை ரசாயனம் ஐரோப்பிய யூனியனில் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே TPO இல்லாத பாலீஷ்களைத் தேர்ந்தெடுத்து பயன்படுத்தலாம்.
பல புகழ்பெற்ற பிராண்டுகள் உயர்தர ஜெல் நெயில் பாலிஷ்களை வழங்குகின்றன. இந்தியாவில் பிரபலமான Lakme பிராண்ட் பலவிதமான ஷேட்களை கொண்டுள்ளது. Colorbar இதுவும் இந்தியாவில் நன்கு அறியப்பட்ட ஒரு பிராண்ட் ஆகும். Venalisa இது ஒரு சிறந்த தரமான வளைந்த பிரஷ் கொண்ட ஜெல் பாலிஷ் என்று அதை பயன்படுத்து பவர்கள் விரும்பி வாங்குகின்றனர்.