சில உடைகளை அணியும்போது, சாதாரணமாக இருப்பதை விட சற்று அதிகமாக அந்த உடை நம்மை Chubby ஆக காட்டும். அதனால் நம் உடல்வாகுக்கு ஏற்றவாறு உடைகளை தேர்வு செய்து அணிவதன் மூலம் கூட நம் உடலை ஸ்லிம்மாக இருப்பது போல காட்ட முடியும். அதை பற்றித்தான் இந்த பதிவில் காண உள்ளோம்.
1. உடைகளில் என்ன நிறம் பயன்படுத்துகிறோம் என்பது மிகவும் முக்கியம். கருப்பு நிறத்தை பயன்படுத்துங்கள். அது உங்கள் உடலை மிகவும் ஸ்லிம்மாக காட்டும். Pastel colours, baby pink, light colours ஆடைகளை அணிவதை தவிர்ப்பது நல்லது.
2. Deep neck, Deep V, Deep U போன்று கழுத்து பகுதிகள் Elongated ஆக இருக்கும் ஆடைகளை தேர்ந்தெடுத்து அணிவது சிறந்தது. Closed neck, turtle neck போன்ற ஆடைகளை அணிய வேண்டாம்.
3.Horizontal stripes இல்லாமல் Vertical stripes உள்ள எந்த உடையை வேண்டுமானாலும் அணியலாம். ஆனால் இந்த உடைகளில் Patterns mismatch செய்யாதீர்கள். அதாவது மேலே ஒரு விதமான Pattern கீழே பேன்ட் ஒருவிதமான Pattern ல் மாற்றி போடக்கூடாது. Small geometrical prints இருப்பது போன்ற ஆடைகள் அணிவதும் நன்றாக இருக்கும்.
4. உங்கள் இடுப்புப் பகுதியை நன்றாக எடுப்பாக காட்டுவதற்காக பெல்ட் ஒன்றை அணிந்துக் கொள்வது சிறப்பாக இருக்கும். இதை அதிகமாக மேக்ஸி, மிடி போன்ற உடைகள் அணியும் போது போட்டுக் கொள்ளுங்கள். இது நீங்கள் ஸ்லிம்மாக இருப்பது போன்ற தோற்றத்தை தரும்.
5. கடைசியாக, உங்கள் இடுப்புப் பகுதியை அழகாக காட்டக்கூடிய உடைகளான Wrap-around, A-line, Peplum dresses போன்றவை பயன்படுத்தும்போது மிகவும் அழகாக தெரிவீர்கள்.
பெண்களின் எல்லா உடல்வாகுமே அழகானதுதான். Chubby ஆக இருப்பது அழகில்லை என்ற பொருளில்லை. இதெல்லாம் பெண்களுக்கு தேவைப்படும்போது அவசரத்திற்கு பயன்படுத்த சொல்லப்படும் குட்டி டிப்ஸ்கள். பெண்களே, எப்போதுமே உடைகள் என்பது நம்முடைய வசதிக்கு ஏற்றவாறு அணிவதற்குத்தான் என்பதை மறக்க வேண்டாம்.