Food for Hair Growth: முடி வளர Diet-ல் இவற்றை சேர்த்துக்கொள்ளுங்கள்!

Hair Growth Diet
Hair Growth Diet

கூந்தலும், முகச்சருமும் எப்போதும் ஆரோக்கியமாக இருக்க நாம் பராமரிப்பு வழிகளை மட்டுமே நம்பியிருக்கக் கூடாது. அதற்கு பதிலாக உணவு வழியாகவும் சிலவற்றை எடுத்துக்கொண்டு கூந்தலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டும்.

உடல் ஆரோக்கியத்திற்கு எப்படி நாம் சில காய்கறிகளை அன்றாடம் எடுத்துக் கொள்கிறோமோ? அதேபோல் முடி ஆரோக்கியத்திற்கும் சில உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியமாகும். குறிப்பாக ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வதால், இவை செல்களினால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்த்து, முடி மற்றும் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

அந்தவகையில், அடர்த்தியாகவும், நீளமாகவும் முடியை வளர்க்க ஆன்டி ஆக்ஸிடண்ட்கள் இருக்கும் உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியம்.

டார்க் சாக்லேட்:

70 சதவீதத்திற்கும் அதிகமான கொக்கோ கொண்ட சாக்லேட்டுகளில் அதிகளவு பொட்டாசியம், இரும்பு, மெக்னிசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. அதேபோல் அவற்றில் 5 அவுன்ஸ் ஒன்றுக்கு 15 mmol ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. ஆகையால், இவை முடி வளர்ச்சியை ஆதரிக்கும். முடி உதிர்வு அபாயத்தையும் குறைக்கும்.

மஞ்சள்:

முடி வளர உதவும் ஆன்டி ஆக்ஸிடண்ட்கள் மஞ்சளில் அதிகம் உள்ளதால், இதனை பாலில் கலந்து குடியுங்கள். மஞ்சள் சருமத்திற்கு மட்டுமல்ல, முடி ஆரோக்கியத்திற்கும் மிகவும் பயனுள்ளதாகும்.

நட்ஸ்:

இவை பாலிபினால்கள் எனப்படும் ஆக்ஸிஜனேற்றங்களால் நிரம்பியுள்ளன. இந்தக் கொட்டைகள் துத்தநாகம், வைட்டமின்கள் ஏ, சி, மற்றும் ஈ போன்றவற்றால் நிறைந்துள்ளன. இவை சருமம், முடி மற்றும் நகங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.

கேரட்:

கேரட் அதிக பீட்டா கரோட்டின் உள்ள காய்கறிகளில் ஒன்றாகும். வைட்டமின் ஏ செயல்பாட்டின் மூலம் இது ஆரோக்கியமான முடி பராமரிப்பை அளிக்கிறது. மேலும் இது உச்சந்தலை ஆரோக்கியத்தை மேம்படுத்துவதன் மூலம் முடி வேரோடு உதிர்வதைத் தடுக்கிறது.

கீரைகள்:

கீரைகள் நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றவது நம் அனைவருக்குமே தெரியும். கீரைகளில் லுடின், பீட்டா கரோட்டின், கூமரிக் அமிலம் மற்றும் ஃபெருலிக் அமிலம் போன்ற அதிக அளவு ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. மேலும் இவற்றில் ஃபோலேட், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் உள்ளன. கீரைகளில் இருக்கும் சத்துகள் கூந்தல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது.

இதையும் படியுங்கள்:
நாட்டாமை படத்தில் கடைசி நேரத்தில் நடந்த ட்விஸ்ட்! 30 வருடம் கழித்து மனம் திறந்த கே.எஸ்.ரவிக்குமார்!
Hair Growth Diet

பெர்ரி பழங்கள்:

ஸ்ட்ராபெர்ரி, ராஸ்பெர்ரி, ப்ளாக்பெர்ரி போன்ற அனைத்து பெர்ரிகளுமே ஆரோக்கிய நன்மைகளை அளிக்கின்றன. அவுரிநெல்லிகள் அதிக அளவு ஆக்ஸிஜனேற்றத்தை வழங்குகின்றன. இவை செல்களை சேதப்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவுகின்றன. மேலும் இவற்றில் சிவப்பு பெர்ரியில் வைட்டமின் சி, மாங்கனீசு, பொட்டாசியம் மற்றும் ஃபோலேட் போன்றவை உள்ளன.

இவை ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் மற்றும் வீக்கத்தை எதிர்த்துப் போராட உதவுகின்றன. ப்ளாக் பெர்ரியில் இருக்கும் ஆந்தோசயனின்கள், எலாஜிக் அமிலம் மற்றும் குவெர்செடின் போன்றவை முடி உதிர்தலை குறைக்கச் செய்கிறது. இதில் வைட்டமின் சி உள்ளதால் கொலாஜனை அதிகரிக்கிறது. இதனால் முடி கொட்டும் அபாயம் குறையும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com