பளபளப்பான சருமத்திற்கு அன்னாசிப் பழத்தின் சூப்பர் டிப்ஸ்!

Natural beauty tips
For glowing skin
Published on

பார்க்க கரடு முரடான தோலுடன் இருக்கும் அன்னாசியில் அழகுக்கு அழகு சேர்க்கும் பல அருமையான பலன்கள் உள்ளன. விட்டமின் சி நிறைந்த இந்த பழம் சருமத்திற்கு பளபளப்பை கொடுக்கிறது. மேலும் அது தரும் பலன்களை பார்ப்போம்.

ருமத்தை பளபளப்பாக்குவதில் அன்னாசி பெரிய பங்கு வகிக்கிறது.அன்னாசி பழச்சாறுடன் அரை‌டீஸ்பூன் ஜாதிக்காய், மாசிக்காய் சம அளவு கலந்து , முகத்தில் நன்றாக தேய்த்து கழுவுங்கள்.இப்படி செய்து வந்தால் முகம் மாசு மருவின்றி பளபளப்பாக இருக்கும்.

தடுகள் அடிக்கடி வறண்டுபோய் விடுகிறதா,? அன்னாசி பழச்சாறு, பீட்ரூட் சாறு இரண்டையும் தலா ஒரு டீஸ்பூன் எடுத்து இதனுடன் சில துளிகள் எலுமிச்சை சாறு கலந்து வைத்துக் கொண்டு இந்தச்சாறை பஞ்சில் தொட்டு உதட்டில் தடவி வர, வெடிப்பு, எரிச்சல் மறைவதுடன் இதழ்களும் ஈரப்பதத்துடன் பளபளப்பாக இருக்கும்.

சோற்றுக் கற்றாழை ஜெல்லுடன் 2 டேபிள் ஸ்பூன் அன்னாசி பழச்சாற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இதை சோப்பு தேய்ப்பது போல முகத்தில் தேய்த்துக்கழுவ முகத்தில் உள்ள கருமை, தேமல், பருக்கள் மறையும். திரும்ப அவை வராமலும் தடுக்கும்.

இதையும் படியுங்கள்:
Eye shadow palette: உடைந்து சிதறிய ஐ-ஷேடோ... நோ டென்ஷன்! கிரீம் பிளஷ் ரெடி!
Natural beauty tips

சிலருக்கு வயதாவதால் முகத்தில் சுருக்கம் விழ ஆரம்பிக்கும். இதற்கு 2டீஸ்பூன் தேங்காய்ப் பாலுடன், 1டீஸ்பூன் அன்னாசி பழச்சாறு கலந்து ஒரு நாள் விட்டு ஒருநாள் முகத்தில் பூசி கழுவினால் முகம் பளிச்சென்று சுருக்கமின்றி இருக்கும்.

இரண்டு அன்னாசி பழத்துண்டுகளுடன் ஒரு முட்டையின் வெள்ளைக் கருவை சேர்த்து கலந்து அந்த விழுதை கழுத்துப் பகுதியில் மேலிருந்து கீழாக பூசி சிறிது நேரம் கழித்து கழுவினால் சுருக்கங்கள் மறைந்து, சங்கு போல் கழுத்து மின்னும்.

அரை கப் தேங்காய் துருவலுடன் 2டீஸ்பூன் வெந்தயம் பவுடர், 2டீஸ்பூன் அன்னாசி பழச்சாறு கலந்து தலையில் தேய்த்து வர பளபளப்பாக இருப்பதுடன் கூந்தல் வளர்ச்சிக்கு ம் உதவும்.

முடி வெடிப்பு, வறட்சியைப் போக்க அன்னாசி பழச்சாறு, 2டீஸ்பூன் தயிர், 2டீஸ்பூன், பயத்தம் மாவு இவற்றை தேங்காய்ப் பால் கொஞ்சம் சேர்த்து நன்கு கலந்து தலையில் தேய்த்து குளித்து வர வெடிப்பு நீங்கி கூந்தல் பளபளக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com