முடி உதிர்வுக்கு முற்றுப்புள்ளி! ஆரோக்கியமான தலைமுடிக்கு சிறந்த உணவுகள்!

For healthy hair
For healthy hair
Published on

வ்வொரு நாளும் நாம் சாப்பிடும் உணவு தலைமுடி வளர்ச்சியில் நேரடி விளைவை ஏற்படுத்துகின்றன. சரியான சமநிலையான உணவு தலைமுடியை வலுவாகவும், தடிமனாகவும், ஆரோக்கியமாகவும் வளருவதற்கு உதவிபுரியும். அந்த வகையில் தலைமுடி வளர்ச்சிக்கு சிறந்த 13 உணவுகள் குறித்து இப்பதிவில் காண்போம்.

முட்டை

தலைமுடி வளர்ச்சிக்கு தேவையான முக்கிய வைட்டமின் பயோட்டின், புரதம் முட்டையில் நிறைந்துள்ளது. மேலும் வலுவான தலைமுடிக்கு தேவையான கரோட்டின் உற்பத்தியை ஊக்குவிக்கிறது.

பெர்ரி பழங்கள்

பெர்ரி பழங்களில் ஆக்சிஜனேற்ற எதிர்ப்புகள் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளதால் தலைமுடியின் நுண் குழாய்களை பாதுகாப்பதோடு இரும்புச்சத்து உறிஞ்சுதலை அதிகரிப்பதில் உதவி புரிகின்றன.

பசலைக்கீரை

தாவர அடிப்படையிலான இரும்பு சத்து நிறைந்த ஆதாரமான பசலைக்கீரையில் வைட்டமின் ஏ, போலேட், வைட்டமின் சி உள்ளதால் வேர்களுக்கு ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, உச்சந்தலை மற்றும் தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.

கொழுப்பு நிறைந்த மீன்

சால்மன், மத்தி மற்றும் கானாங்கெளுத்தி ஆகிய மீன்களில் இருக்கும் ஒமேகா 3 மற்றும் கொழுப்பு அமிலங்கள் உச்சந்தலையின் வறட்சி மற்றும் எரிச்சலை குறைத்து புதிய நுண்ணறை வளர்ச்சியை ஆதரிக்கின்றன.

சர்க்கரைவள்ளி கிழங்கு

சர்க்கரைவள்ளி கிழங்கில் உள்ள வைட்டமின் ஏ ,பீட்டா கரோட்டின், தலைமுடி மந்த நிலையை குறைத்து வளர்ச்சியை துரிதப்படுத்தி, விரைவான செல் சுழற்சியை ஊக்குவிக்கின்றன.

அவகேடோக்கள்

அவகேடோக்களில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகள் வைட்டமின் ஈ, மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் உச்சந்தலையில் ஈரப்பத சமநிலையை பராமரித்து, ரத்த ஓட்டத்தை அதிகரித்து, தலை முடியை வலிமையாகவும். பளபளப்பாகவும் ஆக்குகின்றன.

இதையும் படியுங்கள்:
வியர்க்குரு முதல் பித்தவெடிப்பு வரை: வெயிலை வெல்லும் பாட்டி காலத்து வைத்தியம்!
For healthy hair

நட்ஸ்

நட்ஸில் உள்ள வைட்டமின் பி, ஜிங்க், மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் வேர்களை வலுப்படுத்தி, முடியின் உடைப்பை குறைத்து முடியை மென்மையாகவும் பளபளப்பாகவும் மாற்றுகின்றன.

விதைகள்

ஆளி விதைகள், சூரியகாந்தி விதைகள், சியா விதைகளில் அதிகமாக உள்ள வைட்டமின் ஈ, ஒமேகா 3 உச்சந்தலையில் உரிதலை குறைத்து செல்களை பழுது பார்த்து, தலைமுடி வளர்ச்சியில் உதவி புரிகின்றன.

இனிப்பு மிளகு

இந்த வண்ணமயமான காய்கறிகளில் இருக்கும் வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் தலைமுடியை வலுவாக்கி, உச்சந்தலையில் ஆக்சிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்துப் போராட உதவி புரிகின்றன.

சிப்பிகள் (ஒய்ஸ்டர்)

விலங்கு ஆதார சிப்பிகளில் அதிகம் இருக்கும் ஜிங்க் தலைமுடி மெலிதல் மற்றும் உதிர்தலை தடுத்து, திசு வளர்ச்சி மற்றும் தலைமுடி பழுது பார்ப்பில் பயன்படுகின்றன.

இதையும் படியுங்கள்:
பருக்கள் வந்து பயமுறுத்துதா? பாட்டி காலத்து 'மஞ்சள் - புனுகு' ரகசியம் இதோ!
For healthy hair

பீன்ஸ்

பீன்ஸில் அதிகம் இருக்கும் புரதம், இரும்பு மற்றும் துத்தநாகம் வலுவான தலைமுடியை உருவாக்கி, வேர் வலிமையை ஆதரிக்கின்றன.

சோயா பீன்ஸ்

சோயா பீன்ஸில் இருக்கும் ஐசோஃப்ளேவோன்கள்,இருப்பு மற்றும் ஜிங்க் பலவீனமான சேதமடைந்த தலைமுடியை வலுப்படுத்துகின்றன.

மேற்கூறிய சரியான உணவுகளை தேர்ந்தெடுத்து உண்பதால் தலைமுடி ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com