மென்மையான சருமத்திற்கு கடுகு எண்ணெய் முதல் கடலை மாவு வரை!

Beauty tips in tamil
For smooth skin...
Published on

க்காலத்தில் இருந்த பெண்களும் சரி, ஆண்களும் சரி அழகாக இருந்ததற்கு காரணம். அவர்களது உடல், சரும பராமரிப்புக்கு பயன்படுத்திய பொருட்கள் அனைத்தும் வீட்டில் இருக்கும் சமையலைறை பொருட்கள்தான். இப்பொழுது அத்தகைய சிறப்பு வாய்ந்த இயற்கை அழகு குறிப்புகளை இப்பகுதியில் பார்ப்போம்.

கடுகு எண்ணெய்:

கைகள் மற்றும் கால்களில் வளரும் முடியை எடுப்பதற்கு வாக்சிங் செய்வோம்.அவ்வாறு வலியை உண்டாக்கும் வேக்சினை செய்வதற்கு பதிலாக தினமும் காலையில் எழுந்ததும் கைகள் மற்றும் கால்களுக்கு கடுகு எண்ணெய் கொண்டு மசாஜ் செய்து பின் குளிக்க வேண்டும். இதனை தினமும் தொடர்ந்து செய்து வந்தால் கைகள் மென்மையாக முடி இன்றி இருக்கும். அதனால்தான் நமது பாட்டிகளின் கைகள் மற்றும் கால்களில் முடி இல்லாமல், இன்றும் இளமை மாறாத தோற்றத்தில் காணப்படுகின்றனர்.

எலுமிச்சை சாறு + கற்றாழை:

கற்றாழையில் உள்ள ஜெல் பகுதியை தனியாக எடுத்து அரைக்கவும். அதனுடன் அரை டீஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசி மஜாஜ் செய்து பத்து நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும். இது முகத்திற்கு முகப்பொலிவையும் முகத்தில் உள்ள சொர சொரப்பு கீறல் இவற்றை சரி செய்து முகம் பட்டுப்போல பளபளவென மின்னும்.

இதையும் படியுங்கள்:
மனதை மயக்கும் வாசனை: பயன்படுத்தும் சரியான முறை என்ன?
Beauty tips in tamil

கொத்தமல்லித்தழை + மஞ்சள் தூள்:

கொத்தமல்லி தழையை நன்கு நைசாக அரைக்கவும். அவற்றுடன் மஞ்சள்தூள் இரண்டு டீஸ்பூன் கலந்து முகத்தில் பூசி இரவு முழுவதும் அப்படியே விட்டு அடுத்தநாள் காலையில் குளிர்ந்த நீரில் கழுவவும். இவ்வாறு செய்தால் கொத்தமல்லியில் உள்ள காஸ்டிக் என்பவை அழுக்குகளை நீக்கி கரும்புள்ளிகளை நீக்கும்.

தக்காளி + தேன் + எலுமிச்சை + சர்க்கரை:

முதலில் தக்காளிசாறுடன் தேன் கலந்து முகத்திற்கு பூசி பத்து நிமிடங்கள் கழித்து கழுவவும். அடுத்து ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு ஒரு டீஸ்பூன் சர்க்கரை கலந்து முகத்தில் பூசி மசாஜ் செய்து 10 நிமிடத்திற்கு பின் கழுவவும் இதனால் முகம் வெண்மையாக மாறி அழகு பெறும்.

பால் + தயிர் + கடலை மாவு:

இது முற்றிலும் எளிமையான வழி. முதலில் தயிருடன் கடலை மாவைக் கலந்து உடலில் பூசி குளிக்கலாம். வறண்ட சருமத்திற்கு ஏற்றது. கடலை மாவுடன் பால் கலந்து உடல் தேய்த்து குளித்தால் சருமம் மிருதுவாகும். இது வேதிப்பொருட்கள் அதிகம் கலந்த சோப்புக்கள் தேய்ப்பதற்கு மாற்று வழியாக இந்த பாட்டி கால அழகு குறிப்புகளை பயன்படுத்தி அழகு பெறலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com