

இரண்டு டீஸ்பூன் தேனுடன் எலுமிச்சம் பழச்சாறு நாலு சொட்டு கலந்து குடித்து வந்தால் உடலில் தேவையற்ற கொழுப்பு சேர்வது தடுக்கப்படும்.
தயிருடன் கடலைமாவு சேர்த்து முகத்தில் புரட்டிவர முகப்பரு தொல்லை அறவே நீங்கிவிடும்.
கறிவேப்பிலையின் இளம் தளிர்களை காயவைத்து பொடியாக்கி, அதை தேங்காய் எண்ணையில் கலந்து தலையில் தேய்த்து வந்தால் தலைமுடி கரு கருவென்று வளரும்.
தினமும் காலை நேரத்தில் பழங்கள் சாப்பிடுவது இளமையை அதிகரிக்கும். குறிப்பாக ஆப்பிள், ஆரஞ்சு, பப்பாளி போன்ற பழங்கள் சாப்பிடுவது நல்லது.
அதுபோல் தினமும் காலைவேளையில் ஒன்றிரண்டு கேரட்டை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடல் வனப்பை பெறலாம்.
கடலைமாவுடன் சிறிது தயிர் சேர்த்து முகத்தில் தடவி, அரைமணி நேரம் உலரவிட்டு பின் வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவிவர முகம் பொலிவு பெறும்.
வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து, ஒருநாள் கழித்து வேகவைத்த நீரைக்கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்றுவிடும்.
பப்பாளிச்சாற்றை முகத்தில் தடவி வந்தால் வியர்க்குரு, கொப்பளங்கள் மறைந்து முகம் பளபளக்கும்.
தினமும் உணவில் கீரை, முளை கட்டிய பயறுவகைகள், உலர் திராட்சை, பேரீச்ச்சம்பழம் போன்றவற்றை சேர்த்துக்கொண்டால் முடி கருகருவென்று வளரும்.
தினமும் காலையில் மூன்று நான்கு டம்ளர் தண்ணீர் குடித்துவந்தால் அன்றைய நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். மேனி அழகும் மேம்படும்.
தினமும் படுக்க செல்லும்முன் ஒரு டம்ளர் பால் குடிக்க வேண்டும்.பாலில் கால்சியம் இருப்பதால் மேனி மெருகு பெறும்.
சருமம் எளிதில் வறண்டுபோய்விடாமல் இருக்க தினமும் இரண்டு டம்ளர் மோர் குடித்து வரவேண்டும்.
முகத்தில் எண்ணைய் வடிகிறதா? இதைப்போக்க தினசரி காலையிலும், இரவு படுக்கப்போகும்போதும் முகத்தில் எலுமிச்சம்பழத்தை அரிந்து தேயுங்கள். எண்ணெய்ப்பசை அறவே நீங்கிவிடும்.
பனிக்காலத்தில் சிலருக்கு தோலில் சில இடங்களில் வெடிப்பு தோன்றும். வெடிப்பு தோன்றிய இடங்களில் கொஞ்சம் வாஸ்லைனைத் தடவி வந்தால் வெடிப்பு குறைந்துவிடும்.
சுத்தமான நல்லெண்ணையும் சுத்தமான தேங்காய் எண்ணையும் தவிர, வேறு எதையும் தலையில் படவிடக்கூடாது.
குளித்தவுடன் உடல் முழுவதும் பவுடர் போட்டுக்கொண்டால் புத்துணர்ச்சி அதிகரிக்கும்.
இரவில் படுக்கப்போகும் முன் எருமைப்பால் ஆடையை முகப்பருவின் மீது தடவி வந்தால் முகப்பரு காணாமல் போய்விடும்.
பெண்கள் தினமும் படுக்கப்போகும்போது புருவங்களிலும், இமைகளிலும் கொஞ்சம் விளக்கெண்ணைய் தடவிக்
கொண்டால், புருவங்களிலும், இமைகளிலும் முடி நன்றாக வளரும். இதனால் அழகு அதிகமாகும்.
முகத்தை சோப்பு மட்டும் போட்டுக் கழுவிக் கொண்டிருக்கக்கூடாது.
பயித்தம்மாவு, சிகைக்காய் ஆகியவற்றையும் கொண்டு அடிக்கடி கழுவவேண்டும். இப்படிச் செய்தால் தான் முகத்தின் பளபளப்பு குறையாமல் இருக்கும்.
முகத்தில் தோல் உரிந்தால், அதைப்போக்க, சிறிது கிளிசரின், எலுமிச்சம் பழச்சாறு, சர்க்கரை ஆகியவற்றைக் கலந்து முகத்தைக் கழுவுங்கள். உரிந்த தோல் வந்துவிடும்.
பெண்கள் தக்காளிப்பழங்களை தினமும் சாப்பிட வேண்டும். தோல் சிவப்பாக மாற தக்காளி துணைபுரியும்.