

பெண்களுக்கு தங்கள் சருமம் நன்றாக சிவப்பாக கலராக இருக்க வேண்டும் என்ற ஆசையிருக்கும். அதற்காக நிறைய கிரீம்களை வாங்கி தடவிக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கெல்லாம் எளிதாக வீட்டிலேயே செய்யக்கூடிய கிரீம் (Body Whitening Cream) பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
இந்த ஒரு கிரீம் உங்கள் சருமத்தின் நிறத்தை நன்றாக கலராக மாற்றிக் கொடுக்கும். இந்த கிரீம் செய்ய நம் வீட்டு கிச்சனில் உள்ள பொருட்களே போதுமானதாகும். முதலில் அரிசியை 1/2 டம்ளர் எடுத்து 2 மணி நேரம் நன்றாக ஊறவைத்து எடுத்துக்கொள்ளுங்கள். இதை மிக்ஸியில் சேர்த்து நன்றாக அரைத்து அதை வடிகட்டி எடுத்துக்கொள்ளவும். அடுத்து உருளைக்கிழங்கை எடுத்துக்கொள்ளலாம். இதில் Skin lightning property அதிகமாக உள்ளது.
உருளைக்கிழங்கை நன்றாக துருவி எடுத்துக் கொள்ளுங்கள். இதில் உள்ள ஜூஸை மட்டும் பிழிந்து எடுத்துக்கொள்ள வேண்டும். அடுத்து ஒரு துணியில் தயிரை எடுத்து தண்ணீரை நன்றாக பிழிந்து எடுத்துக் கொள்ளவும். இப்போது அடுப்பில் ஃபேனை வைத்து அதில் அரிசி தண்ணீரை சேர்த்து ஒருமுறை கலந்துவிட்டுக் கொள்ளவும். அடுத்து 1/2 கிளாஸ் காய்ச்சாத பாலை சேர்த்துக் கலந்துவிடவும். பாலில் Lactic acid இருப்பதால் சருமத்தை நன்றாக Exfoliate செய்யும். தீயை குறைத்து வைத்துக் கொண்டு கிளறிவிடவும்.
நன்றாக கெட்டியாக தொடங்கும். இப்போது ஒரு பவுலில் 1 தேக்கரண்டி சோளமாவு(corn flour) சேர்த்துக் கொள்ளவும். அதில் தண்ணீர் சிறிது விட்டு கலந்துக் கொள்ளவும். இதை அடுப்பில் உள்ள அரிசி மாவு கலவையுடன் சேர்த்துக் கொள்ளவும். இதை சேர்த்து கலந்துவிட நன்றாகவே கெட்டியாக தொடங்கும். அதை ஒரு பவுலுக்கு மாற்றி அதில் தண்ணீர் வடிகட்டி வைத்த தயிரை இத்துடன் சேர்த்துக் கொள்ளவும்.
இத்துடன் உருளைக்கிழங்கு ஜூஸை சேர்த்துக் கொள்ளவும். இதை ஒரு கண்ணாடி பாட்டிலில் சேமித்து பிரிட்ஜில் பத்து நாட்கள் வரை வைத்துக்கொள்ளலாம். இந்த கிரீமை சருமத்தில் போட்டுவிட்டு 20 நிமிடம் காய விட்டுவிட்டு பிறகு கழுவி விடவேண்டும்.
இதை தொடரந்து பயன்படுத்தினால் சருமம் நிறம் நன்றாக மாறும். சருமத்தின் நிறத்தை ஒளிரச்செய்யவும், கரும்புள்ளிகள் மற்றும் சமமற்ற சரும நிறத்தை நீக்கவும் இந்த கிரீமை பயன்படுத்தலாம்.