மங்கு (Melasma) மறைய நிரந்தர தீர்வு: வீட்டு வைத்தியங்களும் பராமரிப்பு வழிகளும்!

Beauty tips in tamil
solution to fade melasma
Published on

ருமத்தில் பழுப்பு அல்லது நீல சாம்பல் நிற திட்டுக்களாகத் தோன்றும். இது பொதுவாக முகத்தில் ஏற்படும். மெலஸ்மா, ஹைபர் பிக்மண்டேஷன் என்றும் அழைக்கப்படும் இது சூரிய ஒளி, ஹார்மோன் மாற்றங்கள், பருக்கள் அல்லது கர்ப்பம் போன்ற காரணங்களால் சருமத்தின் நிறத்தை உருவாக்கும் செல்கள் அதிக நிறமிகளை உற்பத்தி செய்வதால் ஏற்படுகிறது. இது தீங்கு விளைவிக்காது; ஆனால் அழகியல் ரீதியாக கவலை அளிக்கலாம்.

மங்கு மறைய வீட்டு வைத்தியம்:

ஜாதிக்காய் முகத்தில் ஏற்படும் கருப்பு திட்டுக்கள் மறைய உதவும் என்று சித்த மருத்துவ குறிப்புகள் தெரிவிக்கின்றன. ஜாதிக்காயை பிற பொருட்களுடன் சேர்த்து ஃபேஸ் பேக்காக போடும்போது அது சருமத்தின் நிறத்தை மேம்படுத்தி கரும்புள்ளிகள் மற்றும் தழும்புகளை நீக்க உதவும்.

ஜாதிக்காய் கலவை:

ஜாதிக்காய், சந்தனம், சிறிது வேப்பங் கொழுந்து மூன்றையும் சிறிது நீர் விட்டு நன்கு அரைத்து பசை போல் செய்து கொள்ளவும். இதனை கருப்பு திட்டுகள் உள்ள பகுதிகளில் தொடர்ந்து சில நாட்கள் தடவி வர பலன் கிடைக்கும்.

ஜாதிக்காயுடன் சந்தனம் கலந்து அல்லது ஜாதிக்காயுடன் தேன் மற்றும் மஞ்சள் பொடி கலந்து தடவி 20 நிமிடங்கள் கழித்து முகத்தைக் குளிர்ந்த நீரில் கழுவி வர நல்ல பலன் கிடைக்கும்.

மஞ்சள் மற்றும் சந்தனம்:

மஞ்சள் பொடி மற்றும் சந்தன பவுடரை சிறிதளவு எடுத்து பன்னீரில் கலந்து பசை போல செய்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவி வர மங்கு மறையும்.

இதையும் படியுங்கள்:
உறவுகளில் ஒளிந்திருக்கும் நிழல்கள்: வஞ்சகமும் வேதனையும்!
Beauty tips in tamil

பப்பாளிப்பழக் கூழ்:

பப்பாளியில் பாப்பைன் (papain) போன்ற என்சைங்கள் உள்ளன. இவை இறந்த சரும செல்களை அகற்றவும், நிறமிழப்பை குறைக்கவும் உதவும். பப்பாளி பழத்துண்டு இரண்டெடுத்து நன்கு மசித்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவலாம்.

தேன் மற்றும் ஆரஞ்சு சாறு:

தேனுடன் சிறிதளவு ஆரஞ்சுச்சாறு கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து சற்று வெதுவெதுப்பான நீரில் கழுவி வர பலன் கிடைக்கும்.

கற்றாழை ஜெல்:

சுத்தமான கற்றாழை ஜெல்லை நேரடியாகவே முகத்தில் தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்து அரைமணி நேரம் கழித்து கழுவி வரலாம்.

வெள்ளரிக்காய் சாறு:

வெள்ளரிக்காயை அரைத்து அதன் சாற்றை முகத்தில் பூசி, நன்கு காய்ந்த பிறகு கழுவி வர சிறந்த பலன் கிடைக்கும்.

எலுமிச்சை சாறு:

இது இயற்கையான பிளீச்சிங் பண்புகளைக் கொண்டவை. அவற்றின் சாற்றை மங்கு பகுதிகளில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவி வரலாம்.

முக்கிய குறிப்பு:

எந்த ஒரு புதிய சரும பராமரிப்பு முறையையும் தொடங்குவதற்கு முன்பு நம் சருமத்தின் ஒரு சிறிய பகுதியில் தடவி ஒவ்வாமை எதுவும் ஏற்படுகிறதா என்பதை சோதித்துப் பார்த்து பயன்படுத்துவது நல்லது.

இதையும் படியுங்கள்:
உங்கள் Comfort Zone-தான் உங்கள் வாழ்க்கையின் மிக மோசமான எதிரி! ஏன் தெரியுமா?
Beauty tips in tamil

அத்துடன் சூரிய ஒளியில் நேரடியாக செல்வதைத் தவிர்க்கவும். வெயிலில் செல்லும் பொழுது சன் ஸ்கிரீன் அல்லது தொப்பி அல்லது குடையை பயன்படுத்தவும். இரவில் தூங்குவதற்கு முன்பு மேக்கப்பை முழுவதுமாக சுத்தம் செய்து நீக்கிவிட்டு சிறிது மாய்ஸ்சரைசரை பயன்படுத்தலாம்.

ஆரோக்கியமான மற்றும் சத்தான காய்கறி, பழங்களை எடுத்துக் கொள்ளவும். குறிப்பாக விட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்த சிட்ரஸ் பழங்கள், தக்காளி, கேரட் போன்ற உணவுகளை உட்கொள்வது சரும ஆரோக்கியத்திற்கு உதவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com