
முன்பெல்லாம் ஃபேஷன் என்று சொன்னால் பெண்களுக்கு பெண்மையை வெளிக்காட்டும் உடைகளும், ஆண்களுக்கு ஆண்மையை எடுத்துக் காட்டும் உடைகளையும் உருவாக்கி வந்தனர். ஆனால், தற்போது மாறிவரும் சமூகத்தில் மனிதர்களின் பண்முகத்தன்மை, சுயவெளிப்பாடு, தனித்துவம், பாரம்பரிய கட்டுப்பாடுகளை உடைத்தல் போன்றவற்றின் காரணமாக உடைகளின் மூலமாக தங்களின் எண்ணங்களை வெளிப்படுத்த தொடங்கியுள்ளனர். இது ஃபேஷன் உலகில் ஒரு புதிய மாற்றமாக பார்க்கப்படுகிறது.
ஆண்களுக்கான உடைகளை பெண்கள் அணிவதை இந்த சமூகம் ஏற்றுக்கொண்டது. ஆனால், பெண்களின் உடைகளை ஆண்கள் அணிவதை அருவெருப்பாக பார்த்தது. அந்த பார்வையைத்தான் Gender fluid fashion உடைக்கிறது. Masculinity மற்றும் Femininity க்கு இடைய இருக்கும் சிறு கோட்டை அழித்து ஆடைகள் இருவருக்குமே பொதுவானது என்று சொல்கிறது.
Gender neutral ஃபேஷனை ஆண், பெண் என்று வித்தியாசம் பார்க்காமல் ஃபேஷனில் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் சுதந்திரமாக பயன்படுத்த முடியும். இதனால் ஒருவருடைய தனித்துவத்தை தெரிந்துக்கொள்ள முடியும். இது ஆண்களுக்கானது, இது பெண்களுக்கானது என்ற கட்டுப்பாடு இதில் இல்லை.
Gender fluid fashion சமூக கட்டுப்பாடுகளை உடைக்கக் கூடியதாக உள்ளது. இது ஆணுக்கானது, இது பெண்ணுக்கானது என்பதை தாண்டி ஒரு ஆடையை ஆடையாக பார்க்கவேண்டும் என்று சொல்கிறது. அந்த ஆடை உங்களுக்கு உடுத்த கச்சிதமாக இருக்கிறதா? உங்களுக்கு பிடித்திருக்கிறதா? என்பதை பார்க்க வேண்டியதே முக்கியமானதாக கருதுகிறது. இது ஒருவருடைய உண்மையான தன்மையை வெளிக்காட்டுவதாக அமைகிறது.
Skinny jeans என்பது பெண்களுக்கானது என்று சொல்லி பெண்கள் மட்டுமே அணிந்திருந்த காலம் மாறி தற்போது அனைவருமே அணியக்கூடிய ஆடையாக மாறியிருக்கிறது. பிங்க் நிறம் பெண்களுக்கானது என்று சொன்னதுபோய் தற்போது ஆண்களும் அதை பயன்படுத்தலாம். அதில் எந்த தவறும் இல்லை என்று கூறுகிறார்கள். Gen z தலைமுறைகள் gender fluid fashion ல் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். Harry styles, Billie eilish, billy porter போன்ற பிரபலங்கள் இந்த Gender fluid fashion ஐ பின்பற்றுகிறார்கள். இதனாலும் இந்த ஃபேஷன் தற்போது பிரபலமாகிக்கொண்டு வருகிறது என்று சொல்லலாம்.
இந்த மாற்றம் தற்போது வந்ததில்லை. பழங்காலத்திலிருந்தே எகிப்து, மெஸப்படோமியா, கிரீஸ் போன்ற நாடுகளில் பாலினத்திற்கு முக்கியம் கொடுக்காமல் சமூதாய அந்தஸ்திற்கே அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். அங்கி, போர்வையால் மூடப்பட்ட ஆடைகளை ஆண், பெண் என்று இருவருமே பொதுவாக அணிந்திருந்தனர்.
எனவே, Gender fluid fashion ஒரு தற்காலிகமாக டிரெண்டாக இல்லாமல் நம்முடைய அடையாளத்தையும், தனித்துவத்தையும் எடுத்துக்காட்டுவதாக இருக்கிறது. தன்னுடைய பாலினத்தையும் தாண்டி எந்த ஆடை ஒருவருடைய தனித்துவத்தை எடுத்துக்காட்டுகிறதோ அதை உடுத்தும் சுதந்திரத்தைக் கொடுக்கிறது.