
ஒரு பொழுதுபோக்கை வருமானமாக மாற்ற முதலில் இடத்தையும் இலக்கு பார்வையாளர்களையும் அடையாளம் காணவேண்டும். நம்முடைய திறமைகளை வெளிப்படுத்தும் வலுவான போர்ட்ஃபோலியோவை உருவாக்க வேண்டும். அத்துடன் ஆன்லைன் இருப்பையும் உருவாக்க வேண்டும். கடைசியாக வாடிக்கையாளர் களை அடைவதற்கு சந்தைப்படுத்த வேண்டியது மிகவும் முக்கியம்.
பொழுதுபோக்கை பணமாக்குவதற்கு முதலில் நம் திறமைகளை அடையாளம் காணவேண்டும்; அதாவது நம்முடைய தனித்துவமான திறமைகள். அதனை பணமாக்க முயற்சிக்கும் பொழுது யாரெல்லாம் வாடிக்கையாளர்களாக அமைவார்கள் என்பதையும் தீர்மானிக்க வேண்டும். அத்துடன் வாடிக்கையாளர் களுக்கு நம் திறமையை எடுத்துக்காட்டும் நம்பகத்தன்மையை நிலைநாட்டும் ஒரு தொழில்முறை போர்ட்ஃபோலியோவை உருவாக்க வேண்டும். நம்முடைய படைப்புகளை காட்சிப்படுத்தவும், பகிர்ந்துகொள்ளவும் வாடிக்கையாளர்களுடன் இணையவும் ஒரு ஆன்லைன் வலைதளம் மற்றும் சமூக ஊடக இருப்பை உருவாக்க வேண்டும்.
எழுத்து, கிராஃபிக் வடிவமைப்பு, இசை, புகைப்படம் எடுப்பது, ஓவியம் போன்ற படைப்பு பொழுது போக்குகள், கைவினை பொழுதுபோக்குகளான நகை தயாரித்தல், மெழுகுவர்த்தி தயாரிப்பது மற்றும் DIY போன்றவை லாபகரமான பொழுதுபோக்கை வருமானமாக மாற்ற உதவும்.
சமையல், பேக்கிங், இயந்திர பழுது பார்ப்பது போன்றவையும், யோகா மற்றும் உடற்பயிற்சி வழிமுறைகளை வழங்குவதையும், விருப்பமான மொழிப்பாடங்களை வழங்குவது போன்ற நம் ஆர்வங்களை பற்றி வலைப்பதிவு செய்து அல்லது youtube வீடியோக்களாக உருவாக்கி, பாட்காஸ்டிங் செய்வது லாபகரமான பொழுதுபோக்கை வருமானமாக மாற்ற பயனுள்ளதாக இருக்கும்.
ஒரு பொழுதுபோக்கை பணம் சம்பாதிக்கும் முயற்சியாக மாற்றுவதற்கு நேரமும், முயற்சியும், அர்ப்பணிப்பும் மிகவும் தேவை. பொழுதுபோக்கு வணிகத்தை மகிழ்ச்சியாக சோர்வின்றி பராமரிக்க மெதுவாக, நிதானமான வேகத்தில் தொடங்கினால் வளர்ச்சி கிடைக்கும்.
பணமாக்கும் முறையை தேர்வு செய்வது மிகவும் முக்கியம். அதற்கு யூடியூப் சேனலை தொடங்கலாம்; பாட்காஸ்ட்களை உருவாக்கலாம். விளம்பரங்கள் அல்லது சந்தாக்கள் மூலம் வருமானம் ஈட்ட வலைப் பதிவுகளை உருவாக்கலாம்.
டிஜிட்டல் தயாரிப்புகளான டெம்ப்ளேட்கள், மின் புத்தகங்கள் அல்லது ஆன்லைன் படிப்புகள் போன்ற டிஜிட்டல் தயாரிப்புகளை உருவாக்கி விற்பனை செய்யலாம்.
கைவினைப் பொருட்கள், மறுசுழற்சி செய்யப்பட்ட தளபாடங்கள் போன்ற உறுதியான பொருட்களை தயாரித்து விற்கவும் செய்யலாம். புகைப்படங்கள் எடுப்பது, உடற்பயிற்சி கொடுப்பது போன்ற பொழுதுபோக்கு தொடர்பான பயிற்சிகள் போன்ற பிற சேவைகளையும் வழங்கலாம்.
பொழுதுபோக்கிற்காக தயாரிக்கப்படும் பொருட்களை வருமானமாக மாற்ற விளம்பரப்படுத்துதல் என்பது இன்றைய காலகட்டத்தில் மிகவும் அவசியமான ஒன்று. அவற்றை சமூக ஊடகங்கள் மூலம் விளம்பரப்படுத்தும் பொழுது நிறைய ரீச் கிடைக்கும்.
இது ஒரு சிறந்த வேலை வாய்ப்பாகவும் அமையும். பொழுதுபோக்கை ஒரு முழுமையான வணிகமாக வளர்க்கவும், லாபகரமான முயற்சியாக மாற்றவும் திட்டமிடுவதும், சந்தைப்படுத்துவதும் அவசியம்.
பொழுதுபோக்கை லாபகரமான வருமானத்தை ஈட்டும் வழியாக மாற்ற வாழ்த்துக்கள்!