குளூட்டதியோன்(Glutathione) பயன்கள் பற்றித் தெரியுமா உங்களுக்கு?

Glutathione Injection
Glutathione full guideImage Credits: Issuu
Published on

குளூட்டதியோன் நம்முடைய உடலிலேயே உருவாகக்கூடிய ஆன்டி ஆக்ஸிடன்ட் ஆகும். இது உருவாவதற்கு மூன்று அமினோ ஆசிட்கள் பயன்படுகின்றன. அவை cysteine, Glutamate and glycine ஆகியவையாகும். இது ஆன்டி ஆக்ஸிடென்டாக செயல்பட்டு உடலில் உள்ள ப்ரீ ரேடிக்கல்ஸ், சருமத்திற்கு பாதிப்புகள் உருவாக்கும் Molecules போன்றவற்றை எதிர்த்துப் போராட உதவுகிறது.

மாமிசம், அவகேடோ, பிரக்கோலி, கீரைகள் ஆகியவற்றில் இயற்கையாகவே குளூட்டதியோன் இருக்கிறது. சருமத்தில் ஏற்படும் வயதான தோற்றம், கரும்புள்ளி, முகச்சுருக்கம் போன்றவற்றை குளூட்டதியோன் சரிசெய்கிறது.

இது சருமத்தில் உள்ள கோலோஜன் உற்பத்தியை அதிகரித்து ஈரப்பதத்தை தக்க வைப்பது மட்டுமில்லாமல் சருமத்திற்கு நெகிழ்ச்சித்தன்மையை வழங்குகிறது. இதனால் சருமம் புத்துணர்ச்சியாகவும், மென்மையாகவும், சருமத்தில் ஏற்பட்ட வயதான தோற்றம் குறையும்.

குளூட்டதியோன் நம் சருமத்தில் இருக்கும் மெலானினை குறைத்து சருமத்தில் மேலும் நிறத்தை கூட்டுவதாக சொல்லப்படுகிறது. இதை சினிமாத்துறையில் உள்ளவர்கள் மற்றும் தற்போதுள்ள இளைஞர்களும் அதிகமாக பயன்படுத்துகின்றனர். குளூட்டதியோன் மிகவும் பிரபலமடைந்ததால் சோப், கிரீம், சீரம் போன்றவற்றிலும் தற்போது சேர்க்கிறார்கள்.

குளூட்டதியோன் சருமத்தின் நிறத்தை மாற்றுவதற்காக இன்ஜெக்‌ஷனாக பயன்படுத்துகிறார்கள். பொதுவாக 600-1200 மில்லி கிராம் ஒருவாரத்திற்கு இரண்டுமுறை 1 டோசேஜ் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. இவை அனைத்துமே சிறிது காலம்தான் என்பதால், டாக்டரின் பரிந்துரைப்படி மறுபடியும் எடுக்க வேண்டிவரும். 6-8 வாரத்தில் இதனுடைய முடிவு தெரியவரும். இந்தியாவில் இந்த ஊசியின் விலை ரூபாய் 13,000 முதல் 40,000 வரையுள்ளது.

குளூட்டதியோன் இன்ஜெக்‌ஷன் பயன்படுத்திய பிறகு நம் சருமத்தை எவ்வாறு பராமரிக்கிறோம் என்பதை பொருத்து இருக்கிறது. வெயிலில் அதிகமாக செல்வதை தவிர்க்க வேண்டும், கெமிக்கல், மாசு அதிகமாக இருக்கும் இடத்திற்கு செல்வதை தவிர்க்க வேண்டும். இது முகத்தில் உள்ள கரும்புள்ளி, பிக்மெண்டேஷன், ஆக்னி, முதுமையான தோற்றம், சுருக்கம், கோடுகளை போக்கி சருமத்தை வெண்மையாகவும், பொலிவாகவும் மாற்றும். சருமத்திற்கு மட்டுமில்லாமல் முடி வளர்ச்சிக்கும் இது பெரிதும் பயன்படுகிறது.

இதையும் படியுங்கள்:
வயதான தோற்றத்தை விரைவில் ஏற்படுத்தும் பழக்கங்கள் எவை தெரியுமா?
Glutathione Injection

குளூட்டதியோன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் வயிற்று பிரச்னை, ஆஸ்துமா போன்ற பாதிப்புகள் ஏற்படும். அதனால் சருமத்தை பொலிவாக்க வேண்டும் என்று நினைத்தால், அதிக குளூட்டதியோன் இருக்கும் இயற்கையாக உருவாகும் காய்கறி, பழங்களில் இருந்து எடுத்துக்கொள்வது சிறந்தது. காலிபிளவர், கிவி, ஸ்ட்ராபெர்ரி, மீன், இறைச்சி போன்றவற்றை உண்பது உடலில் குளூட்டதியோனை அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com