ஒளிரும் சருமம் வேண்டுமா? இதோ சிறந்த குறிப்புகள்!

beauty tips
Glowing skin
Published on

ண்ணும் உணவு அனைத்து சத்துகளும் கொண்ட சரிவிகித உணவாக இருந்தால் சருமம் பாதிப்புகளின்றி பொலிவு பெறும்.

சருமத்தின் அழகு ரகசியம் நாம் அருந்தும் நீரிலேயே உள்ளது . தினம் சுமார் மூன்று லிட்டர் அளவு நீரை அவ்வப்போது கண்டிப்பாக அருந்தவேண்டும்.

சருமத் துவாரங்களில் சேரும் அழுக்குகள் பருக்களை உண்டாக்கும். இதைத் தவிர்க்க தினம் நான்கைந்து முறை முகத்தைக் கழுவவேண்டும்.

மஞ்சள் பூசிக் குளித்தால் சருமம் தேவையற்ற முடிகள் நீங்கி பளபளப்புடன் அழகு தரும்.

சிறுசிறு கொப்புளங்களுக்கு வேப்பிலைக் கொழுந்துகளை நீரில் காய்ச்சி வடிகட்டி கொப்புளங்கள் மீது தடவலாம். இயற்கையான டோனர் இது.

வாரத்தில் மூன்று நாட்கள் பொன்னாங்கண்ணிக் கீரையை உணவில் சேர்த்தால் இயற்கையாகவே சருமம் பளபளப்பு பெறும்.

நீர் அருந்துதல், உடலை நீரேற்றமாக வைத்திருப்பது சருமத்தின் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க உதவுகிறது.

வினிகர் ஒருபங்கு நீர் ஒருபங்கு கலந்து உடலில் தடவிக் குளித்தால் பாதிப்பேற்படுத்தும் கிருமிகளில் இருந்து தப்பிக்கலாம்.

சுத்தமான ஆலிவ் எண்ணெய் சருமத்திற்கு பூசி சிறிது நேரம் மிதமான சூரிய ஒளியில் இருந்து குளித்தால் சருமம்.

இரவு தூங்கும்முன் பால் அருந்துவது சருமத்துக்கு மெருகைத் தரும்.

இதையும் படியுங்கள்:
வறண்ட சருமமா? இதோ தீர்வு: மருத்துவர்கள் பரிந்துரைக்கும் கூழ்ம ஓட்மீல்!
beauty tips

சருமம் இயற்கையாகவே மிருதுவானதால் செயற்கை பொருள்களை பயன்படுத்தாமல் இயற்கையான முறையில் பராமரிப்பது நல்லது.

சமச்சீரான உணவு, பழங்கள், காய்கறிகள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த உணவுகளை உண்ணுங்கள். இவை சருமத்திற்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com