
தற்போது உள்ள காலக்கட்டத்தில் பெண்கள் ஸ்கின்கேர் பொருட்களை வாங்க அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள். சரும பளபளப்பு, கிளாஸ் ஸ்கின் என்று நிறைய வழிமுறைகளை பின்பற்றத் தொடங்கிவிட்டார்கள். சரும அழகை மேம்படுத்த தவறாமல் ஸ்கின்கேர் ரொட்டீனை கடைப்பிடிக்கிறார்கள். அதில் சீரம், கிரீம், சன் ஸ்கிரீம், டோனர், கிளென்ஸர் என்று நிறைய அடங்கும். இந்த கட்டுரையில் டோனரை எதற்கு பயன்படுத்துகிறோம். எந்த டோனரை பயன்படுத்துவதால் சரும பளபளப்பு அதிகரிக்கும் என்பதைப் பற்றி விரிவாகக் காண்போம்.
டோனர் பார்ப்பதற்கு தண்ணீர் போன்று இருக்கும். இதில் நம் சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் சேர்க்கப்பட்டிருக்கும். இதைப் பயன்படுத்துவதன் மூலமாக சருமத்தின் PH ஐ சமன் செய்ய உதவுகிறது. மேலும் சருமத்தில் உள்ள இறந்த செல்கள், அழுக்குகளை நீக்கி பளபளப்பை தருகிறது.
கிளைக்கோலிக் அமிலத்தை Alpha hydroxy acids என்றும் கூறுவர். இது கரும்பில் இருந்து எடுக்கப்படுகிறது. கிளைக்கோலிக் அமிலத்தை தினமும் டோனராக பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி காண்போம்.
1. கிளைகோலிக் அமிலம் சருமத்தில் ஊடுருவி இறந்த செல்கள், அழுக்குகளை அகற்ற உதவுகிறது. இதனால் புதிய செல்கள் உருவாவதோடு சருமமும் பளபளப்பாகும். மேலும் இது கொலாஜென் உற்பத்தியை அதிகரித்து சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்க உதவுகிறது. முகத்தில் உள்ள சுறுக்கங்கள், கோடுகள் வராமல் தடுக்கிறது.
2. கிளைக்கோலிக் அமிலத்தை Humectant என்று சொல்வார்கள். அதாவது இது சருமத்தில் ஈரப்பதத்தை அதிகரிக்க உதவுகிறது. இதனால் சருமம் எந்நேரமும் புத்துணர்ச்சியுடன் காணப்படும்.
3. கிளைக்கோலிக் அமிலத்தில் முக்கிய வேலை இறந்த செல்களை நீக்குவது. இதனால் சருமம் பளபளப்பாகவும், Baby soft ஆகவும், பார்ப்பதற்கு மிருதுவாகவும் இருக்கும்.
4. சருமத்தில் உள்ள கரும்புள்ளி மற்றும் பிக்மெண்டேஷனை போக்க கிளைக்கோலிக் அமிலம் பயன்படுகிறது. இது முகத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்கி புது செல்கள் உருவாக உதவுகிறது. இதனால் சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கி Even tone பெற உதவுகிறது. இதற்கு கண்டிப்பாக கிளைகோலிக் அமிலத்தை தினமும் பயன்படுத்த வேண்டியது அவசியம்.
5. மற்ற ஸ்கின் கேர் பொருட்களை பயன்படுத்துவதற்கு முன் கிளைகோலிக் அமிலத்தை சருமத்தில் பயன்படுத்த வேண்டியது அவசியமாகும். இதன் மூலம் சருமத்தில் உள்ள அழுக்கு, இறந்த செல்களை நீக்கி மற்ற ஸ்கின்கேர் பொருட்கள் சருமத்தில் ஊடுருவி நன்றாக செயல்பட்டு நல்ல பலனை தருவதற்கு இது உதவுகிறது.
6. நம்முடைய சருமத்தில் சுவர் போன்ற ஒரு அமைப்பு ஈரப்பதத்தை தக்க வைத்து, அழுக்கு போன்ற விஷயங்களை உள்ளே செல்லவிடாமல் தடுத்து நிறுத்துகிறது. அதைத்தான் Skin lipids என்று கூறுவோம். இது சருமத்தில் இருக்கும் ஒரு ஆரோக்கியமான ஃபேட்டி ஆசிட் ஆகும். கிளைக்கோலிக் அமிலம் சருமத்தில் உள்ள லிப்பிடின் அளவை சரியாக பராமரிக்க உதவுகிறது. அப்பறம் என்ன? இனி, உங்க ஸ்கின் கேர் ரொட்டீனில் கண்டிப்பாக கிளைக்கோலிக் ஆசிட் டோனர் இருக்கும்படி பார்த்துக்கோங்க.