நீளமான கூந்தலை அள்ளி முடியலாமே!

Hair care image
Hair care image

-பி.ஆர். லட்சுமி

திகமான தலைமுடி இருக்கும் பெண்கள் அதைப் பராமரிக்க மிகுந்த சிரமப்படுகிறார்கள். இப்போதெல்லாம் தலைமுடியைக் கத்தரித்துவிடும் மனப்பாங்கு வளர்ந்துவிட்டது. கூந்தல் நன்கு வளர குழந்தைப் பருவத்தில் பல மொட்டைகள் பெண் குழந்தைகளுக்குப் போடுவதுண்டு. கூந்தல் அழகாக இருந்தால் பெண்ணிற்கு சீக்கிரம் திருமணமாகிவிடும் என்று பெற்றோர் தனது பெண் குழந்தைகளுக்குக் கூந்தலை வளர்ப்பதில் ஆர்வம் காட்டி வந்தனர்.

இக்கால சூழ்நிலை வேறு. பள்ளிக்கு, கல்லூரிக்கு எனச் செல்லும்போது அந்தப் பெண்ணினால் தலையைச் சரியாகப் பராமரிக்க முடிவதில்லை. பேன் தொல்லை, தலையில் அழுக்கு சேருதல், பொடுகு பிரச்னை போன்றவற்றினால் தலைமுடி பாதிப்படைகிறது. வெப்பமான பணியிடங்களினாலும் அதிகப்படியான தலைமுடி உதிர நேரிடலாம். நோய்க்காலத்திலும், நாம் உண்ணும் மாத்திரைகளினாலும் தலைமுடி உதிரலாம்.  ஊர்விட்டு ஊர் மாறினாலும், கவலையினாலும் முடி கொட்டும். அதிகப்படியான சூட்டில் தலைமுடியை அலசுவதாலும் தலைமுடி பாதிப்படையலாம். சீப்பு சுத்தமாக இல்லையென்றாலும் தலைமுடி உதிரலாம். ஒருவர் பயன்படுத்தும் சீப்பை மற்றவர் பயன் படுத்துவதைத் தவிர்க்கலாம். ஆள்பாதி ஆடை பாதி என்பார்கள். அந்த ஆள்பாதியில் கால்வாசி இந்த கூந்தலுக்குத்தான்.

பெண்கள் கூந்தலுக்கு இயற்கையில் மணம் உண்டு என்ற பிரமொஃபின் சிந்தனையைக்கூட உணர நேரமின்றி பெண்கள் பணி, குடும்பம் என்ற இரட்டைக் குதிரையில் உலா வருகின்றனர்.

திங்கள்முதல் சனிவரை வேலை! குழந்தைப் பராமரிப்புஞாயிறு முழுக்க குடும்பத்தினருடன் ஒரு ஜாலியான பொழுதுபோக்குஇதில் எங்கு கூந்தலைப் பராமரிப்பது என மலைக்கலாம்நமக்கே உரித்தான நேரத்தை நாம்தானே தயார் செய்துகொள்ளவேண்டும்.

சிகைக்காய் அரைகிலோ, பச்சைப்பயிறு - 100கிராம், வெந்தயம் - 250 கிராம், எலுமிச்சை காய்ந்தது இருபது, ரோஜா இதழ்கள் காய்ந்தது - 100கிராம், வேப்பிலை காய்ந்தது - 100கிராம், பூவந்திக்கொட்டை – 10. செம்பருத்தி (சிவப்பு) காய்ந்தது – 100 கிராம் இது அடிப்படை.

Hair care image
Hair care image

மீதியை நாட்டு மருந்து கடைகளில் கேட்டால் தருவார்கள். வாங்கி, மிஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொள்ளலாம். இன்று பியூட்டி பார்லர் சென்றாலும் இதை வேறுமுறையில் செய்வார்கள். நமக்கு பணம் மிச்சப்பட வீட்டிலேயே செய்யலாமே….

கடையில் கிடைக்கும் ஷாம்பு வகைகளைப் பயன்படுத்தினால் ஒரே வகைகளைப் பயன்படுத்தவேண்டும். அதில் பயன்படுத்தப்படும் வேதியியல் பொருட்கள் தலைமுடியை உதிரச் செய்யும்.

தலைமுடி பராமரிப்பு:

தலைமுடியின் அடியில் பிளவு ஏற்பட்டால் அப்பகுதியைக் கத்தரித்து விடவேண்டும்.

நல்ல நீரில் தலைமுடியை அலச வேண்டும். ஒரே நீரில் தலைமுடியை அலசவேண்டும்.

நல்ல உணவு உண்பதும் கூந்தல் வளர வழி வகுக்கும். பால், பழங்கள் போன்றவற்றைத் தினமும் உண்ணவேண்டும்.
40 வயதிற்குமேல் முடி வளர்வது குறையும். அதனால் நாம் உண்ணும் உணவுகளில் அதிக் கவனம் செலுத்த வேண்டும்.

Hair care image
Hair care image

நல்லெண்ணெய் தலைக்குத் தேய்த்து ஊறியவுடன் குளிக்கலாம். அல்லது தேங்காயெண்ணெய் தேய்த்து ஊறியவுடன் குளிக்கலாம்.

தலைக்குக் குளித்து முடித்தவுடன் முடியை ஈரத்துடன் சீப்பைப் போட்டு வாருதலைத் தவிர்க்கவேண்டும்.

நன்கு வெயிலில் முடியைக் காய வைக்கவேண்டும். ஹேர்டிரையரைப் பயன்படுத்தினால் முடி உதிரும்.

இறுகக் கிளிப்புகளைக் குத்தாமல் பின்கழுத்துப் பக்கம் தலைமுடி காயுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் கழுத்துப்பக்கம் ஈரம் அவ்வளவு சுலபமாகக் காயாது. ஈரம் அப்படியே முதுகுப்புறம் இறங்கி சிறிது காலத்திற்குப் பிறகு வேறு பல நோய்களுக்கும் வழி வகுப்பதால் பெண்கள் கவனமாக இருக்கவேண்டும்.

இதையும் படியுங்கள்:
30 பிளஸ் பெண்களுக்கான 6 விதமான சிகை அலங்காரங்கள்!
Hair care image

காலையில் எழுந்தவுடன் தலைக்குக் குளித்துவிட்டு ஈரத்துண்டுடன் வியர்வையுடன் சமையலறையில் போராடி குடும்பத்து உறுப்பினர்களுக்கு உணவு தயார் செய்துவிட்டு பணிக்கும் செல்ல தயாராகணுமே! என்ன செய்வது என யோசிப்பவரா நீங்கள்அப்படியென்றால் நமக்கென ஒர ஒருமணி நேரம் ஒதுக்கலாமேவரும்முன் காப்பதுதானே நல்லது. ஈரத்துண்டைச் சுற்றி மணிக்கணக்காய் இருந்துவிட்டு கடைசியில் உதறி கூந்தலைச் சரி செய்வதை இனியாவது மாற்றிக்கொள்ளலாம் இல்லையா!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com