

தலைமுடி என்பது பிறந்த குழந்தை முதல் பெரியவர் வரை அனைவராலும் விரும்பப்படுகிறது. அக்காலத்தைபோல இப்போதெல்லாம் முடிக்கு நேரம் ஒதுக்கி அதை பராமரிக்க முடிவதில்லை. விளைவு, இளம்வயதிலேயே முடி உதிர்தல், இளநரை, கூந்தல் பளபளப்பின்மை, வழுக்கை என பல பிரச்னைகள் தோன்றி கவலையைத் தருகிறது.
ஆண், பெண் இருபாலரும் தம் கேசத்திற்கென சிறிய மெனக்கெடலை தந்தாலே கூந்தல் என்பது அழகாக, ஆரோக்கியத்தை பிரதிபலிக்கும். சில விஷயங்களை செய்தல் கூந்தலின் வளர்ச்சிக்கு உதவுகிறது.
வாராந்திர எண்ணெய் குளியலை வழக்கமாக்கி கொள்ள முடியின் ஈரப்பதம் காக்கப்படும். உடற்சூட்டை குறைப்பதால் முடி வளர்ச்சி தூண்டப்பட்டு முடி உதிர்தலை தடுக்கிறது.
வல்லாரை இலையை அரைத்து தலைக்கு தடவி சிறிது நேரம் கழித்து குளிக்க தலை அரிப்பு நீங்கும்.
எண்ணெய் குளியலுக்கு சீயக்காய் உபயோகிக்க பிசுக்கை போக்குவதுடன் முடியின் எண்ணைகத் தன்மையை பாதுகாக்கிறது.
கற்றாழைசாறை தடவி குளித்துவர தலையில் ஏற்படும் அரிப்பு, புண் இவற்றை சரிசெய்யும்.
கரிசிலாங்கண்ணி இலையை அரைத்து சாறு எடுத்து அதை தலைக்கு தேய்த்து குளித்து வர கண்ணுக்கு குளிர்ச்சி தருவதுடன் கருமையை பாதுகாத்து, முடி வளர்ச்சியைத் தூண்டும்.
தேங்காய் பால் எடுத்து முடியின் வேர்கள் கால்களில் தடவி வைத்து சிறிது நேரம் கழித்து குளிக்க முடி உதிர்வது கட்டுப்படுத்துவதன், முடி வளர்ச்சியை அதிகரிக்கும்.
முட்டையின் வெள்ளைக்கரு முடியின் போஷாக்கை அதிகரித்து கூந்தல் வளர்ச்சிக்கு உதவும்.
மருதாணி இலை, பூலாங்கிழங்கு போன்றவை முடிக்கு வலு தந்து முடி உதிர்வை தடுக்கும்.
அவுரி இலையை அரைத்து தலைக்கு தேய்த்துக் குளிக்க செம்பட்டை முடி நிறம் கருமை அடைவதுடன் கேசத்தின் வளர்ச்சிக்கு உதவும்.
மஞ்சிட்டா, ஆலிவ் எண்ணெய் தேய்த்துக் குளித்து வந்தால் முடி வறட்சியை போக்கி செழித்து வளர உதவும்.
கடுக்காயை அரைத்து தலைக்கு தடவி பின் குளிக்க முடி உதிர்வது நிற்கும். கருமை தந்து முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
கருவேப்பிலை, வெந்தயம் போன்றவையும் கூந்தல் வளர்ச்சிக்கு உதவுகிறது.
இவ்வாறு நம் வீட்டில் இருக்கும் மூலிகை குணம் கொண்ட பொருட்களை வைத்து கூந்தலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
இவை அனைத்தும் என் அம்மா அடிக்கடி எனக்கு சொல்லி நான் தெரிந்துகொண்டது.