
கோடை காலத்தில் அணிந்துகொள்ள வசதியான காட்டன் புடவைகள் 12 வகைகள் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
1. மங்களகிரி காட்டன் புடைவைகள்
மங்களகிரி காட்டன் புடைவைகள் ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் உள்ள மங்களகிரி என்ற நகரத்திலிருந்து வருகின்றன. இந்தப் பகுதி அதன் வளமான ஜவுளி பாரம்பரியத்திற்கு பெயர் பெற்றது. இந்தப் புடைவைகள் பெரும்பாலும் கோடுகள் கட்டங்கள் மற்றும் மலர் வடிவங்கள் உள்ளிட்ட எளிமையான ஆனால் நேர்த்தியான வடிவமைப்புகளை கொண்டுள்ளன. இதனால் வெப்பத்தை உறிஞ்சிக் கொண்டு குளிர்ச்சித்தன்மையை அளிக்கின்றன. இதை அணிந்து கொள்ள மிகவும் மென்மையாக, லைட் வெயிட்டாக இருக்கும் நீடித்து உழைக்கும் தன்மையுடையது.
2. காதி காட்டன் புடைவைகள்
காதி என்பது கையால் நூற்கப்பட்டு நெய்யப்படும் ஒரு துணி வகை. இவை அவற்றின் எளிமை மற்றும் வசதிக்காக அறியப்படுகின்றன. அணிந்து கொண்டால் மிகவும் குளிர்ச்சியாக உணரவைக்கும். ஈரப்பதத்தை நன்றாக உறிஞ்சி காற்றோட்டத்தை அனுமதிக்கிறது. வெப்பமான கால நிலைக்கு ஒரு சிறந்த தேர்வாகும்.
3. சந்தேரி காட்டன் புடைவைகள்
மத்திய பிரதேசத்தில் உள்ள சந்தேரி என்ற நகரத்திலிருந்து வருகிறது இந்தப் புடைவைகள். இவை இலகு ரகமானவை, சிக்கலான வடிவமைப்புகளை கொண்டுள்ளன. பெரும்பாலும் தங்கம் அல்லது வெள்ளி ஜரிகை வேலைப்பாடுகளுடன் இருந்தாலும் பருத்தித் துணியால் நெய்யப்படுவதால் கோடைகாலத்தில் அணிந்துகொள்ள ஏற்றவை.
4. மகேஸ்வரி காட்டன் புடைவைகள்
மத்திய பிரதேசத்தில் உள்ள மகேஸ்வர் நகரத்திலிருந்து வருகின்றன. இவை பருத்தி மற்றும் பட்டு நூல்களின் தனித்துவமான கலவைக்கு பெயர் பெற்றவை. நல்ல நேர்த்தியாகவும், இலகு ரகமாகவும், அழகான வடிவங்களைக் கொண்டதாகவும் கோடை காலத்திற்கு அணிவதற்கு ஸ்டைலான வகையிலும் வசதியாகவும் இருக்கும்.
5. கோட்டா காட்டன் புடைவைகள்
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோட்டாவில் இருந்து வரும் தனித்துவமான சேலை வகைகளாகும். மென்மையாகவும் இலகுவாகவும் இருக்கும். இவற்றில் சிறிய செதில்கள்போல அல்லது கோடுகளைக் கொண்டிருக்கும். நல்ல காற்றோட்டத்தை அனுமதிப்பதன் மூலம் துணியை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகின்றன.
6. பிரிண்டட் காட்டன் புடைவைகள்;
இவை இலகு ரக பருத்தியாலானவை. பாரம்பரிய மையக்கருக்கள், வடிவங்கள் சுருக்க வடிவமைப்புகள் உள்ளிட்ட டிசைன்களைக் கொண்டவை. பராமரிக்க எளிதானவை. மலிவு விலையில் கிடைக்கின்றன
7. லினன் காட்டன்;
உயர்தர பருத்தி மற்றும் கைத்தறி ஆகியவற்றை இணைத்து மென்மையான சுவாசிக்க கூடிய வகையில் இருக்கின்றன. இவற்றின் காற்றோட்டமான தன்மை காரணமாக கோடைகாலத்திற்கு அணியை ஏற்றவை.
8. செட்டிநாடு காட்டன் புடைவைகள்
இவை அடர் நிறங்கள், கண்கவர் கட்டங்கள், கோடுகளுக்கு பெயர் பெற்றவை. நீடித்து உழைக்கக் கூடியவை. தினசரி அணிய ஏற்றவை. இவற்றில் உள்ள வடிவங்கள் ஒரு தனித்துவமான காட்சி அமைப்பை கொண்டு அணிந்திருப்பவர்களுக்கு ஒரு ஸ்பெஷல் ஈர்ப்பை தருகின்றன.
9. கட்வால் காட்டன் புடைவைகள்
தெலுங்கானாவில் இருந்து வரும் இந்த புடைவைகள் பட்டு பார்டருடன் கையால் நெய்யப்படும் பருத்தி உடலைக் கொண்டுள்ளன. அணிவதற்கு வசதியாகவும் ஆடம்பரமான தோற்றத்தையும் தருகிறது. இவற்றை சாதாரண மற்றும் சிறப்பு விசேஷங்களுக்கும் அணிந்துகொள்ளலாம். இவற்றின் சிக்கலான வடிவமைப்புகள் கண்களை கவரும் வண்ணம் இருக்கும்.
10. கலம்காரி காட்டன்
துடிப்பான வண்ணங்கள், செழுமையான வடிவமைப்புகளுக்கு பெயர் பெற்ற இவை பண்டிகை காலங்களில் அணிய ஏற்றவை. பாரம்பரிய கைவினைத் திறனின் எடுத்துக்காட்டாக விளங்குகின்றன. சாதாரண நிகழ்வுகளுக்கும் அணிந்துகொள்ளலாம்.
11. போச்சம்பள்ளி காட்டன்
இக்காட் வடிவமைப்புக்கு பெயர் பெற்ற இந்த சேலைகள் பெரும்பாலும் கையால் நெய்யப்படுகின்றன. இவை இலகுரகமானவை வசதியானவை கோடை காலத்திற்கு அணிய மிகவும் ஏற்றவை.
12. ஹேண்ட் பிளாக் பிரிண்டட் காட்டன் புடைவைகள்
இவை மரத் தொகுதிகளில் செதுக்கப்பட்டு கையால் அச்சிடப்பட்ட சிக்கலான வடிவமைப்பை கொண்டுள்ளன. இவற்றின் துடிப்பான வண்ணங்கள் மற்றும் தனித்துவமான வடிவங்கள் காரணமாக கோடைகால பண்டிகை நிகழ்வுகளுக்கு ஏற்றவை.