
ஒரு தேக்கரண்டி ஓட்ஸ், இரண்டு தேக்கரண்டி தக்காளிச்சாறு, இரண்டு தேக்கரண்டி கேரட் சாறு ஆகியவற்றைக் கலந்து முகத்தில் தடவி, அரைமணி நேரத்துக்கு பின் கழுவவும். முகம் பளபளக்கும்.
இரண்டு கேரட்டை எடுத்து அதனை வேகவைத்து, மசித்து, முகத்திற்கு தடவவேண்டும். பின்னர் அதனை காயவைத்து, முகத்தில் இருந்து உரித்து எடுக்க வேண்டும். அதன் பின் வெதுவெதுப்பான நீரால் முகத்திற்கு ஒத்தடம் தரவேண்டும். இவ்வாறு வாரத்திற்கு இருமுறை செய்தால், முகம் நன்கு பொன்னிறமாக மின்னும்.
தோல் நீக்கிய திராட்சையை முகத்தில் தடவி சிறிது நேரம் சென்ற பின் கழுவுவதும் முகத்துக்கு பொலிவைத்தரும்.
சம அளவு கேரட் சாறு, ஆரஞ்சு பழச்சாறு, எலுமிச்சை பழச்சாறு மற்றும் பன்னீர் ஆகியவற்றை எடுத்து அதனுடன் தயிர் சேர்த்து நன்றாக கலந்து முகம் மற்றும் கழுத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவி வந்தால் முகம் பளபளப்பாகும்.
முகம் பளபளக்க நன்றாக பழுத்த நாட்டு வாழைப் பழத்தை ஆலிவ் ஆயில் சேர்த்து பிசைந்து முகத்தில் தடவி 1 மணி நேரம் கழித்து முகம் கழுவி வரலாம்.
முகத்திலுள்ள பருக்களை நீக்க ஒரு பல் பூண்டு அல்லது துண்டு கிராம்பை அரைத்து அதை விரல் நுனியில் தொட்டு பரு மீது வைத்தால், அது அப்படியே அமுங்கிவிடும்.
அடிக்கடி முகத்தை கழுவுவதனால், முகச் சருமத்தின் இயல்பு மாற்றமடையக்கூடும். குறிப்பாக சோப்பு உபயோகித்து இப்படிக் கழுவுவதால், சோப்புகளில் உள்ள காரத்தன்மை சருமத்தை வறட்சிக்குத் தள்ளிவிடும்.
நெல்லிக்காய்களின் கொட்டைகளை எடுத்துவிட்டு, எலுமிச்சம் பழச்சாறு விட்டு அம்மியில் வைத்து அரைத்து, மாதம் ஒரு தடவை தலையில் தேய்த்துக் குளித்து வந்தால், முடிஉதிர்வது நின்றுவிடும். இளநரை இருந்தாலும், சில நாட்களில் மறைய ஆரம்பிக்கும்.
எண்ணெய் சருமம் உடையவர்கள் முகம் கழுவும்போது பச்சைப் பயறு மாவு உபயோகிப்பது நல்லது. இரவு உறங்கச்செல்லும் முன்னர் முகத்தை சுத்தமாகக் கழுவுவது நல்லது. எண்ணெய்ப் பசை உள்ள சருமத்தில், முகப் பருக்கள் ஏற்பட சாத்தியம் அதிகம். தினமும் அல்லது அடிக்கடி முருங்கைக்கீரை உணவுடன் சேர்த்துக்கொள்ளவேண்டும். பொரித்த மற்றும் வறுவல் உணவுகளைத் தவிர்க்க வேண்டும். கட்டாயம் முகம் கழுவ சோப்பை உபயோகிக்கக்கூடாது. பயத்தமாவு அலல்து கடலைமாவு உபயோகித்து முகம் கழுவவேண்டும்.
அரிசிமாவு, பால், கஸ்தூரி மஞ்சள் போன்றவற்றை கலந்து முகத்தில் பூசிக்கொள்வதால், முகத்தில் வறட்சியைத் தடுக்கலாம்.
குளித்து முடித்ததும் ஒரு மாய்ச்சரைஸர் உபயோகித்து உடல் முழுவதும் மசாஜ் செய்வது வறண்ட சருமத்துக்கு நல்லது.