
சிறிய விதைகளான சியா விதைகள் நல்ல ஆரோக்கியமான, பளபளப்பான முடிவளர்ச்சிக்கு மிகச்சிறந்தது. முடி வளர்ச்சி அதிகரிக்க இதை எப்போது உட்ககொள்ள வேண்டும் தெரியுமா?
சியா விதையில் உள்ள ஒமேகா கொழுப்பு அமிலம் வேர்க்காவில் முடி வளர்ச்சியைத்தூண்டி, முடியின் பிளவைத் தடுத்து நெகிழ்வுத் தன்மையை ஏற்படுத்துகிறது. இதில் உள்ள கெராடின் என்ற புரதச்சத்து முடி வலுவாக வளர உதவி புரிகிறது. சுற்றுச் சூழலிலிருந்து பாதூகாக்கிறது. இதன் துத்தநாகம் மற்றும் செம்புச் சத்து தலைமுடியின் கருப்பு நிறத்தைத் தக்கவைக்கிறது.
இது மல்டிவிடமினுக்கு நிகரான சத்தைப் பெற்றது. இந்த விதையை காலையில் உட்கொள்வதால் இதனுடைய ஊட்டச்சத்துக்கள் நன்றாக வேலையை செய்ய ஆரம்பிக்கும். மேலும் ஒமேகா கொழுப்பு அமிலம் மற்றும் புரதமும் முடியை சரிசெய்யும்.
காலை வேளைகளில் தயிர், ஸ்மூத்தி மற்றும் இரவு ஊறவைத்த ஓட்ஸ் இவற்றில் ஊறிய சியா விதைகளை சேர்த்து உட்கொள்ள முடி வளர்ச்சியை அபரிமிதமாக ஊக்ககுவிக்கும். இது பெர்ரி பழங்கள் மற்றும் கொட்டைகளோடும் சேர்த்து உட்கொள்ளலாம்.
இதில் நார்சத்து அதிகம் உள்ளதால் ரத்தச் சர்க்கரையை கட்டுப்படுத்தும். இதனால் இன்சுலின் அளவு சீராக்கப்பட்டு முடியிழப்பைக் குறைக்கும்.
காலைவேளை உட்கொள்ளும் விதம்
இரவு ஊறவைத்த சியா விதைகளை எலுமிச்சை சாறு சேர்த்து அருந்தலாம். பாதாம் பாலில் சேர்த்து அருந்தலாம். அவகேடோ பழச்சாறுடன் சேர்த்து உட்கொள்ளலாம்.
இரவு சாப்பிடும் முறை
இரவு நேரத்தில் சியா விதைகளை உட்கொள்வதால் நீங்கள் தூங்கும் நேரத்தில் அதன் ஊட்டச்சத்துக்கள் தலைமுடியை வலுவாக்கும் வேலையை நன்கு சேர்கிறது.
மேலும் சியா விதைகள் செரிமான சக்தியை சீராக்குவதால் உடல் உப்புசம் மற்றும் வயிற்றுப் பிரச்னைகள் எதுவுமின்றி நல்ல தூக்கத்திற்கு வழி செய்கிறது இதனால் தலைமுடிக்கு நல்ல நீரேற்றம் கிடைத்து வறண்ட நன்மையைத் தடுக்கிறது.
தலைமுடி வளர்ச்சிக்காக தலைமுடிக்கான மாஸ்க்குகளை இரவு நேரம் பயன்படுத்துபவர்கள் இரவு நேரத்தில் சியா விதைகளை உட்கொள்ளும்போது இது முடி வளர்ச்சியைத் தூண்டுகிறது சியா விதையை இரவு உட்கொள்வது சிறந்தது.
சியா விதைகளை காலை மாலை இரண்டு வேளையும அருந்தலாம். அதாவது இரண்டு டேபிள் ஸ்பூன் விதையில் ஒரு டேபிள் ஸ்பூன் காலையிலும் இரவு இன்னொறு டேபிள் ஸ்பூன் அருந்தி நல்ல முடி ஆரோக்கியம் பெறலாம்
சியா விதையின் ஆரோக்கிய பயன்பாடு
ஊறவைத்த சியா விதைகளே சிறந்த செரிமான சக்தி தரும். சுமார் 30நிமிட நேரமாவது ஊறவைக்க வேண்டும்
இதில் சி சத்து நிறைந்த எலுமிச்சை, கிவி, ஸ்ட்ராபெர்ரி அல்லது ஆரஞ்சு சேர்க்கவேண்டும். இவைகளை ஸ்மூத்திகளாக தயாரித்து சேர்க்கலாம்.
வாரத்தில் 3 அல்லது 4நாட்கள் எடுத்துக்கொள்ளலாம். அதிக அளவு உட்கொண்டால் வயிறு உப்புசம் ஏற்படும்.
சியா விதை உட்கொள்வதோடு தலைக்கு ஆயில் மசாஜும் மற்றும் ஊட்டச்சத்துள்ள உணவு முடி ஆரோக்கியத்துக்கு நல்லது பலனைத்தரும்.
சியா முடி மாஸ்க்
இரண்டு டேபிள் ஸ்பூன் சியா விதையை ஊறவைக்கவும் அரைமணி நேரம் கழித்து அது ஜெல் போன்று உருவாகும் இதை ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் பால் அல்லது ஆலோவேரா ஜெல்லுடன் சேர்த்து நன்றாகக் கலந்து தலையில் நன்கு மசாஜ் செய்யவும். அரைமணி நேரம் கழித்து வாஷ் செய்யவும் வாரத்தில் ஒருமுறை இப்படிச்செய்ய அடர்த்தியான வலுவான முடி வளர்ச்சியைப் பெறுவீர்கள். முடி நல்ல பளபளப்பாகவும் இருக்கும்.