இனிமை தரும் கொய்யா: முதுமையைத் தள்ளிப் போடும் இயற்கை மருந்து!

Sweet Guava:
Natural medicine that delays aging!
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

பொதுவாகவே பெண்களுக்கு தங்களது சருமத்தை அழகாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை அதிகமாகவே இருக்கும். ஆனால் அதற்கு எதிராக அவர்களுக்கு பல அசௌகரியங்கள் ஏற்படும்.

உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால் வயதாகிய வுடன் ஒருவருடைய முகத்தில் சுருக்கங்கள் ஏற்படும். அதை எப்படி தவிரப்பது என்று தெரியாது. ஆகவே ஒரு கொய்யா பழத்தை வைத்து எப்படி முகத்தில் உள்ள சுருக்கத்தை போக்கலாம் என   தெரிந்துக்கொள்வோம்.

கொய்யா சுவையாக இருப்பதைத் தவிர ஆரோக்கியமான பல ஊட்டச்சத்துக்களையும் தருகின்றது. கொய்யாவில் குறைந்த கிளைசெமிக் இன்டெக்ஸ் உள்ளது. இது இரத்த சர்க்கரையை நிர்வகிக்க உதவுகிறது. இது தவிர ஹார்மோன் சமநிலையை பராமரிக்க உதவுகிறது.

சுருக்கத்தை எப்படி தடுக்கும்?
கொய்யா வைட்டமின் சி மற்றும் லைகோபீன் இருப்பதால் இது இளமையான சருமத்தைப் பெற உதவுகிறது. கொய்யாவில் குறிப்பாக வைட்டமின்-சி அதிகம் உள்ளதால் சருமத்தில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது. கொலாஜன் நமது சருமத்தை மென்மையாகவும், சுருக்கமில்லாமல் வைத்திருக்கவும் காரணமாகிறது.இது சருமத்தின் நீர் சமநிலையை பராமரிக்க உதவுகிறது.  

இதையும் படியுங்கள்:
சும்மா ஜொலிக்க... தேவையற்ற முடிக்கு பை-பை சொல்லுங்க!
Sweet Guava:

கொய்யாப்பழத்தில் வைட்டமின்-ஏ, வைட்டமின்-சி மற்றும் கரோட்டின், லைகோபீன் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. இது சருமத்தில் ஏற்படும் சேதத்தை தடுக்கும். ஆகவே தினமும் ஒரு கொய்யப்பழம் சாப்பிட்டு வருவது நல்லது.

logo
Kalki Online
kalkionline.com