முடி உதிர்வு? இதோ அதற்கான தீர்வு!

தலைமுடி பராமரிப்பு...
தலைமுடி பராமரிப்பு...

பொதுவாகவே ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருமே  தலை முடி பராமரிப்பில் ஆழ்ந்த அக்கறை கொண்டவர்களாகத்தான் இருக்கின்றனர். கருகருவென்ற, பொடுகுத்தொல்லையற்ற நீளமான மற்றும் அடர்த்தியான கூந்தலைத்தான் அனைவரும் விரும்புவார்கள். நவீன உலகில் ரசாயனங்கள் நிறைந்த ஷாம்பூக்கள் மற்றும் கன்டிஷனர்களின்எண்ணிக்கை என்பது ஏராளம். ஆனால் அவையெல்லாம் நமது அன்றாடம் எடுத்துக்கொள்ள வேண்டிய இயற்கை  தரும் சத்தான உணவிற்கு ஈடாகாது.

நெல்லிக்காய்:

னிதனின் வாழ்நாளை நீட்டிக்கும் சக்தி கொண்டது நெல்லிக்கனி என்பர் நம் முன்னோர். தினமும் காலையில் நெல்லிக்காயை கற்றாழையோடு சேர்த்து அரைத்து ஜூஸாக அருந்திவர நரைமுடி மற்றும் பொடுகுப் பிரச்சினையிலிருந்து எளிதில் தீர்வு காணலாம். மேலும் இது முடிக்கு மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.

கறிவேப்பிலை:

ருவேப்பிலையில் உள்ள இரும்புச்சத்தானது, முடி உதிர்வைக் குறைக்கும் நரைமுடி வராமல் தடுக்கும். தினமும் காலையில் வெறும் இலையாகவோ அல்லது அரைத்து  ஜூஸாகவோ எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது.

தலைமுடி பராமரிப்பு...
தலைமுடி பராமரிப்பு...pixabay.com

எள் மற்றும் சீரகம்:

கால்சியம் மற்றும் மெக்னீசியம் நிறைந்தவை இவை  இரண்டுமே. ஊட்டச்சத்துகளை அதிகம் உருஞ்சும்  இவ்விரு பொருட்களையும் உணவில் அதிகமாக சேர்த்துக்கொண்டே வருவது கூந்தலுக்கு மிகவும் நல்லது.

வெந்தயம்:

வெந்தயத்தில் பைட்டோ ஈஸ்ட்ரோஜன் அதிகளவில்  நிறைந்துள்ளது. இதன் சக்தியானது முடி சேதமாகாமல் பாதுகாக்கும். மேலும் இதனை ஒரு தம்ளர் தண்ணீரில் ஊறவைத்து அரைத்து ஒரு நாளைக்கு ஒரு முறை எடுத்துக்கொள்ளலாம்.

சாலியா விதைகள்:

கேல்சியம், இரும்புச் சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் இ, நிறைந்தது, இந்த சாலியா விதைகள். தினமும் காலையில் ¼ டீஸ்பூன் விதைகளை தண்ணீரில் ஊறவைத்து சாப்பிட்டு வருவது  நமது  கூந்தலுக்கு அதீத சக்தி கொடுக்கும்.

கேரட்:

கேரட்டில் பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இதைப் பச்சையாகவோ அல்லது சமையலில் கூட சேர்த்து சாப்பிடலாம். இது முடியின் வேர்ப்பகுதியை வலுவாக்கி, உதிர்வைத் தடுத்து  வளர்ச்சியை அதிகரிக்கும்.

இதையும் படியுங்கள்:
மூட்டு வலி, வீக்கத்தைக் குறைக்க வீட்டிலேயே செய்யலாம் மூலிகை டீ!
தலைமுடி பராமரிப்பு...

வால் நட்ஸ்:

வால்நட்ஸில் பயோட்டின், வைட்டமின் ஏ, வைட்டமின் பி, மெக்னிசியம் போன்ற சத்துகள் நிறைந்துருக்கின்றன.  இதனை தினமும் கைப்பிடி அளவு எடுத்துவர தலைமுடி  உதிர்வைத் தடுத்து வளர்ச்சியை அதிகரிக்கும். அதோடு  முடியின் வேர்கால்களுக்கும் வலு சேர்க்கும்.

முருங்கைக் கீரை:

முருங்கைக்கீரையில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிகமாக நிறைந்திருக்கின்றன. தினமும் சமையலில் இந்தக் கீரையை பொடியாகவோ அல்லது காய்கறியோடோ சேர்த்துக்கொள்ளலாம். இவ்வாறு தொடர்ந்து சாப்பிட்டு  வருவதன் மூலம்  குறுகிய  காலத்திலேயே  முடியின் வளர்ச்சியும், அடர்த்தியும் அதிகரிக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com