Hair Sunscreen
Hair Sunscreen

Hair Sunscreen: முடிக்கு சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது அவசியமா?

Published on

சூரிய ஒளியிலிருந்து நமது சருமத்தை பாதுகாக்க வேண்டும் என்று நாம் பல முயற்சிகளை செய்கிறோம். சருமத்தை பாதிக்கும் சூரிய ஒளி, முடியை பாதுகாக்குமா என்ன? இதுபற்றி நீங்கள் எண்ணியதில்லையா?

சூரியனின் யூவி ரேஸ் உங்கள் முடியையும், உச்சந்தலையையும் பாதிக்க நிறைய வாய்ப்புகள் உள்ளன. சூரியன் நம்மை சுட்டெரிக்காமல் இருக்க, தொப்பி, ஸ்கார்ஃப் போன்றவை பயன்படுத்துவோம். இது ஓரளவு நமது முடியின் அமைப்பையும் காப்பாற்றுகிறது. ஆனால், நமது முடியை முழுவதுமாக காப்பாற்றுவதற்கு ஒரே தீர்வு சன்ஸ்கிரீன்தான்.

இந்த ஹேர் சன்ஸ்கிரீன் என்பது ஆன்டிஆக்ஸிடன்ட்கள், மாய்ஸ்சரைசர்கள் மற்றும் சன் ப்ரொடெக்ஷன் பாக்டர் ( Sun Protection Factor-SPF) ஆகியவற்றின் கலவையாகும். நமது தலையில் உள்ள சருமத்தைப் பாதுகாக்கவே இது முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல் முன்னதாக, முடியின் சேதத்தைத் தடுக்கவும், முடியின் நிறம் மங்கியவர்களுக்கும் இது பெரும்பாலும் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் இப்போது அது அனைவருக்கும் பரிந்துரைக்கப்படுகிறது. 

பொதுவாக இந்த யூவி ரேஸ், முடி வறட்சியை ஏற்படுத்தி பின் உதிர்தலுக்கு வழி வகிக்கிறது. அதாவது முடியின் நிறத்தை மங்கச் செய்து, கீழ் முடியில் வெடிப்பை ஏற்படுத்துகிறது. குறைந்த முடி உள்ளவர்களின் உச்சந்தலையில் சூரிய ஒளி படுவதால், தோல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் கூட உள்ளதாம்.

ஆகையால், முகத்திற்கு சன்ஸ்கிரீன் எவ்வளவு முக்கியமோ, அதேபோல் முடிக்கும் அவசியம். ஹேர் சன்ஸ்கிரீனுக்கான சரியான வகையைத் தேர்ந்தெடுத்து, சூரியனின் தீங்கு விளைவிக்கும் கதிர்களிலிருந்து உங்கள் உச்சந்தலையைப் பாதுகாக்க அதை வழக்கமாக பயன்படுத்துங்கள். கூடுதலாக, உங்கள் தலைமுடி மற்றும் உச்சந்தலையை சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க தொப்பி, ஸ்கார்ஃப் அல்லது குடை போன்றவற்றைப் பயன்படுத்தவும்.

அதேபோல் இது குறைந்த அளவு பயன்படுத்த வேண்டும் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று. அதிகமாக பயன்படுத்தினால், விளைவு மோசமாக மாறவும் வாய்ப்புள்ளது.

இதையும் படியுங்கள்:
குழந்தைகளின் சரும பராமரிப்பில் தவிர்க்க வேண்டிய பொருட்கள்!
Hair Sunscreen

முடிக்கான சன்ஸ்கிரீன்கள் மூன்று வகைகளில் கிடைக்கின்றன. அதாவது, பவுடர், ஸ்ப்ரே, லோஷன் அல்லது சீரம். உங்களுக்கு வசதியானதைப் பார்த்து வாங்கிக்கொள்ளுங்கள்.

அதாவது எண்ணெய் நிறைந்த உச்சந்தலை உள்ளவர்கள் பவுடர், உலர் உச்சந்தலை கொண்டவர்கள் லோஷன் அல்லது சீரம், மற்றும் ஸ்ப்ரே அடிப்படையிலான சன்ஸ்க்ரீனை அனைவரும் பயன்படுத்தலாம்.

logo
Kalki Online
kalkionline.com