குழந்தைகளின் சரும பராமரிப்பில் தவிர்க்க வேண்டிய பொருட்கள்!

Children Care
Children Care
Published on

குழந்தைகளுக்கான பொருட்களை வாங்குவதில் நாம் எப்போதும் கவனம் செலுத்துவது மிகவும் அவசியம். குறிப்பாக அவர்களுக்காக வாங்கும் பவுடர் போன்ற அழகு சாதனப் பொருட்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

குழந்தைகளின் சருமம் மிகவும் மென்மையாக இருக்கும் என்பதால், எளிதில் சரும பிரச்சனைகள் ஏற்பட்டுவிடும். அதாவது, எரிச்சல், அலர்ஜி, தோல் வறட்சி ஆகியவை ஏற்பட்டுவிடும். ஆகையால் கவனத்துடன் குழந்தைகளின் பராமரிப்பு பொருட்களை வாங்க வேண்டும். குழந்தைகளுக்கென்று தனியாக நிறைய அழகுசாதனப் பொருட்கள் சந்தையில் இறங்கிவிட்டன. குழந்தைகளுக்காக தயாரிக்கப்படுவதால், அவர்களும் கவனமாகத்தான் தயாரிப்பார்கள்.

ஆனால், ஒரு பெற்றோர் என்ற முறையில், தவறுதலாக கூட எந்த ஆபத்தும் உங்களைத் தாண்டி குழந்தைகளுக்கு செல்லக்கூடாது. அந்த வகையில் தயாரிப்புகளில் இந்தப் பொருட்கள் இருந்தால், உடனே எடுத்த இடத்தில் வைத்துவிடுங்கள்.

Phenoxyethanol:

குழந்தைகளுக்காக வாங்கும் அழகு சாதனப் பொருட்களில் இந்த Phenoxyethanol என்ற பொருள் சேர்க்கப்பட்டிருக்கிறதா என்று பார்த்து வாங்கவும். இந்த ரசாயனப் பொருள் பெரியவர்களுக்கு ஒத்துப்போனாலும், குழந்தைகளுக்கு சேராது. ஆகையால், இந்த ரசாயன பொருள் இல்லாத அழகு சாதனப் பொருட்களை வாங்குங்கள்.

Sulphates:

இந்த Sulphates உள்ள பொருட்கள் குழந்தைகளின் உடம்பில் இயற்கையாக இருக்கும் எண்ணெய் பசையை நீக்கிவிடும். இதனால், ஒவ்வாமை, எரிச்சல் ஆகியவை ஏற்படும். ஆகையால், இந்த Sulphates இல்லாத ஷாம்பு, பாடி வாஷைத் தேர்ந்தெடுங்கள். இது நுரைக்காக அந்தப் பொருட்களில் சேர்ப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Trobolone:

இந்த Trobolone சருமத்தில் பாக்டீரியா மற்றும் பூஞ்சை வளர்ச்சியை தடுப்பதற்காக பயன்படுத்துவது. இருப்பினும், இது சென்ஸிட்டிவ் ஸ்கின் உள்ள நபர்களுக்கு மற்றும் குழந்தைகளுக்கு தோல் எரிச்சல் மற்றும் ஒவ்வாமை எதிர்வினைகளை ஏற்படுத்தும்.

இதையும் படியுங்கள்:
Gold Facial வீட்டிலேயே செய்வதற்கான வழிமுறைகள்!
Children Care

Ethanol and Ethyl Alcohol:

இவை குழந்தைகளுக்கு பயன்படுத்தக்கூடாது. ஏனெனில், இதனால், தோல் உரிதல், தோல் வெடிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும். எனவே, குழந்தைகளுக்கு பயன்படுத்தும் பேபி கேர் புராடெக்ட்ஸில் எத்தனால் இருந்தால், அந்த புராடெக்ட்ஸை பயன்படுத்த வேண்டாம்.

Parabens:

பாக்டீரியா வளர்ச்சியை தடுக்க உதவும் இந்த Parabens ஹார்மோன் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். ஆகையால், குழந்தைகளுக்கு இந்த மாதிரியான பிரச்சனைகள் வரக்கூடாது என்றால், பராபென்ஸ் தயாரிப்புகளைத் தவிர்க்கும்.

இந்த ஐந்துப் பொருட்கள் இல்லாத தயாரிப்புகளை வாங்கி குழந்தைகளுக்கு பயன்படுத்துங்கள். சரும அழகுடன் அவர்களின் ஆரோக்கியத்தையும் பராமரியுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com