வயதானால் தோல் சுருக்கம் ஏற்படுவது இயற்கைதான் என்றாலும், அதைத் தடுக்க முடியும். தேங்காய் எண்ணை 1டீஸ்பூன், பாதாம் பௌடர் 1டீஸ்பூன், கடலைமாவு 1டீஸ்பூன்,கஸ்தூரி மஞ்சள் 1டீஸ்பூன்,பால் 4 டீஸ்பூன் இவற்றைக் கலந்து முகத்திலிருந்து பாதம்வரை தேய்த்துக் குளிக்கவும். ஒருநாள் விட்டு ஒருநாள் இதைச் செய்ய உங்கள் சுருக்கம் நீங்கி சருமம் பொன்னாக மின்னும்
சுத்தமான நல்லெண்ணையுடன் சிறிது தண்ணீர் சேர்த்து தேய்க்க நுரைத்து வரும். இதை முகத்தில் தடவி கழுவி வர சுருக்கம் நீங்கி முகம் மின்னும்.
பொன்னாங்கண்ணி கீரையை அரிந்து நெய்யில் வதக்கவும். உப்பு மிளகு சேர்த்து துவையலாக அரைத்து சுடு சாதத்தில் பிசைந்து சாப்பிடவும். ஒரு மண்டலம் சாப்பிட்டு வர உடல் பொன் போல் ஆகும்.
நல்ல பிஞ்சுக் கடுக்காய் பாக் வாங்கி அதை மிக்சியில் தூளாக்கி ஒரு மண் பாத்திரத்தில் நீர்விடடு கலக்கவும். அதை மெல்லிய துணியால் மூடி இரவு முழுவதும் நிலா வெளிச்சத்தில் வைக்கவும். ஷமறுநாள் ஜில்லென்று இருக்கும் இந்நீரை முகம், கை, கால், கழுத்து, நெற்றி பகுதிகளில் பூசி வர சருமம் மினுமினுப்பாக இருக்கும்.
ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறுடன், 1டேபிள் ஸ்பூன் வெள்ளரிதுருவல், 2டேபிள்ஸ்பூன் பயத்தமாவு மற்றும் அரை டீஸ்பூன் பாதாம் மாவு கலந்து குழைத்து முகத்தில் பூசுங்கள். சருமம் இயற்கையாகவே இளமையாக இருக்கும்.
ஒரு டீஸ்பூன் பயத்தமாவுடன் 5துளி எலுமிச்சைசாறு கலந்து கொள்ளுங்கள் அதனுடன் தயிர் சேர்த்து சுருக்கம் உள்ள பகுதிகளில் தடவி சூடான நீரில் உடனே கழுவுங்கள். சுருக்கம் நீங்கி தோல் பளபளப்பாகும்.
தக்காளி விழுது பாதாம் விழுது, தலா அரை டீஸ்பூன் எடுத்துக் கலந்து இதை முகத்தில் தடவிக் கழுவ சுங்கம் மறையும்.
கொதிக்கிற நீரில் எலுமிச்சையை பிழிந்து ஆவி பிடியுங்கள். பிறகு ஐஸ்கட்டி ஒத்தடம் கொடுங்கள். பிறகு தயிருடன் கடலை மாவை கலந்து பேக் போட்டு பத்து நிமிடங்கள் கழித்துத் கழுவ சுருக்கம் நீங்கி சருமம் பொன் போல் மின்னும்.