பாதங்களை அழகாக வைத்துக்கொள்ள சில எளிய வழிகள்!

Foot Maintaining
Foot Maintaining

பொதுவாக அனைவரும் தங்கள் முகம் அழகாக இருக்க வேண்டுமென்று மட்டுமே நினைப்பார்கள். பாதங்களை கவனிப்பதேயில்லை. முழு உடம்பையும் தாங்கி நிற்கும் பாதத்தை அழகாக வைத்துக்கொள்வது அவசியமாகும்.

பாதங்களைப் பராமரிப்பது அழகுக்காக மட்டுமல்ல, அது உங்கள் ஆரோக்கியத்திற்கும் சம்பதப்பட்டது. குளிக்கும்போது பாதங்களைத் தேய்த்து குளிப்பதோடு சரி, அதன்பின்னர் அவற்றைப் பராமரிப்பதே கிடையாது. உண்மையில், முகத்தை எவ்வாறு பராமரிக்கிறோமோ? அதே அளவு பாதங்களையும் பரமாரிக்க வேண்டும்.

அந்தவகையில், பாதங்களைப் பராமரிப்பதற்கான சில எளிய வழிகளைப் பற்றி பார்ப்போம்.

1. குளிக்கும் போது உங்களுடைய பாதம், குதிகால் போன்றவற்றில் உள்ள அழுக்குகளை நன்றாகத் தேய்த்துக் கழுவ வேண்டும். 

2.  பித்த வெடிப்புகளை முறையாக கவனிக்காவிடில் நடப்பதற்குக் கூட வலி ஏற்படும். இதிலிருந்து தப்பிக்க வேண்டும் என்றால், சுடு தண்ணீரில் உப்புக் கலந்து பாதங்களை அதில் 15 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். பின்னர் ப்ரஷ் பயன்படுத்தி அழுத்தித் தேய்த்து கழுவினால், அழுக்குகள் நீங்கும்.

3.  ஒரு பங்கு வினிகருடன் இரண்டு பங்கு நீரைச் சேர்த்து நன்றாக சுத்தம் செய்வதன் மூலம் பாதங்களில் ஏற்படும் பாக்டீரியா பாதிப்புகளை பெருமளவில் குறைக்கலாம்.

4.  வெளியில் சென்று வந்தவுடன் பாதங்களை ஒழுங்காக சுத்தம் செய்ய வேண்டும். அதேபோல் ஒவ்வொரு நாளும் தூங்கச் செல்வதற்கு முன்னதாக பாதங்களைத் தண்ணீரால் நன்கு கழுவிக் கொள்ளவும். 

5.  பாதங்களை பாதுகாக்க 4 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவை வெதுவெதுப்பான நீரில் கலந்து, அதில் சிறிது ஷாம்பு சேர்த்து கலந்து, அந்த கலவையில் கால்களை 15 நிமிடங்கள் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி செய்தால் கருமை நீங்கிப் பொலிவு பெறும்.

6.  சரியான அளவில் செப்பல்களை உபயோகிக்கவும். இதன் மூலமும் உங்களுக்கு ஏற்படக்கூடிய பாத வலியை நீங்கள் எளிதில் சரி செய்ய முடியும்.

7.  பெண்களிள் கால்களில் பித்த வெடிப்புகள் அதிகமாக இருக்கும் சமயத்தில், மருதாணியை அரைத்துக் கால்களில் தடவவும். இது வெடிப்புகளை சரி செய்து, அழகாகவும் மாற்றும்.

8. செத்த செல்களை நீக்க, சுடு நீரில் உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து, அந்தத் தண்ணீரில் பாதத்தை சிறிது நேரம் வைக்க வேண்டும். பின்னர் சொரசொரப்பான ப்ரஷ் மூலம் அதனைத் தேய்த்தால், செத்த செல்கள் நீங்கும்.

இதையும் படியுங்கள்:
சுய மருத்துவம் செய்துக்கொண்ட குரங்கு!
Foot Maintaining

9.  பாதங்களிலிருந்து வெளியேறும் துர்நாற்றத்தைப் போக்குவதற்கென்றே உள்ள  பவுடர்கள், ஸ்ப்ரேக்கள், வாசனை திரவியங்கள் போன்றவற்றைப் பயன்படுத்துங்கள்.

10. அதேபோல் சத்துமிக்க உணவுகளை டயட்டில் எடுத்துக்கொள்ளுங்கள். புகைப்பிடித்தல் மற்றும் மது பழக்கங்கள் இருந்தால், அதனைக் குறைப்பதன் மூலம் உங்கள் பாதங்கள் எளிதில் சோர்வடையாமல் தவிர்க்கலாம்.

இந்தப் பத்து வழிகளைப் பின்பற்றினாலே, உங்கள் பாதம் ஆரோக்கியமாகவும் அழகாகவும் மாறும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com