வாரம் ஒருமுறை நெல்லிக்காயில் அரைத்து சாறு எடுத்து காய்ச்சி கறிவேப்பிலை விழுதுடன் சேர்த்து தலைமுடியில் தேய்த்து வர இளநரை குறைந்து முடி பளபளக்கும்.
வெந்தயக் கீரையை சாறு எடுத்து அதே அளவு நல்லெண்ணெய் எடுத்துக் காய்ச்சவும். புகை வந்ததும் ஒரு டீஸ்பூன் வால் மிளகு நான்கு பிஞ்சுக் கடுக்காய்களைத் தட்டிப்போட்டு இறக்கி வடிகட்டவும். இந்த தைலத்தை தினமும் தலையில் தடவிவர கரிய கூந்தல் மின்னும்.
சிறிய வெங்காயத்தை இரண்டாக நறுக்கி அதன் சாற்றை தலையில் அழுத்தி தேய்த்துவர முடி வளரும். ஊறாமல் 5நிமிடத்துள் கழுவி விடவும்.
முன் வழுக்கை உள்ளவர்கள் பாலில் அதிமதுரத்தை கலந்து ஊற வைத்து மசிய அரைத்து தலையில் தேய்த்து வர முடி கொட்டுவது, வழுக்கை விழுவது கட்டுப்படும்.
நெல்லிக்காய்சாறு அதே அளவு தேங்காய் எண்ணை எடுத்து இரும்புக் கடாயில் புகை வரக் காய்ச்சவும். இதை வடிகட்டி தலையில் தேய்த்துவர இளநரை, முடி உதிர்தல், கண் எரிச்சல் போன்றவை நீங்கும்.
நெல்லித் தூளுடன் மருதாணி தூள் சேர்த்து நீரில் கலக்கவும். தலைமுடியை கடைசியில் இந்த நீரால் அலசுகங்கள். இது ஒரு சிறந்த கண்டீஷனர் ஆகும் தலைமுடி மின்னும்.
ரோஜா மலரை அடிக்கடி சூடிக்கொண்டால் மனச்சோர்வு நீங்கும். தலைவலி, மன அழுத்தம், களைப்பு போன்ற பல நோய்களுக்கு ரோஜா எண்ணை நல்லது.
அரைக்கீரை விதை100 கிராம், தேங்காய் எண்ணை அரைலிட்டர் எடுத்துக் கொள்ளவும். அரைக்கீரை விதையைப் பொடியாக்கி அதை தேங்காய் எண்ணையில் கலந்து காய்ச்சவும் இரும்பு வாணலி பயன்படுத்தவும் இதை ஒருநாள் முழுவதும் ஊறவிட்டு வடிகட்டி பாட்டிலில் வைக்கவும் இதை தினமும் தலைக்குத் தடவி வர முடி அடர்த்தியாக வளரும். செம்பட்டை நிறம் மாறும்.
தாமரைத் தண்டை எடுத்து சாறு எடுக்கவும். சமஅளவு நல்லெண்ணெய் சேர்த்து அடுப்பில் காய்ச்சவும். தைலம் தனியே மிதக்கும். இதை தடவி வர முடி கருகருவென்று வளரத் தொடங்கும்.