தலைப்பருக்களைப் போக்க சில எளிய வழிகள்!

Head pimple
Head pimple
Published on

தலை சீவும்போதும் பலருக்கும் இடைஞ்சலாக வலியாக இருக்கும் ஒரு விஷயம் தலையில் ஏற்படும் பருக்கள். அந்தவகையில் அவற்றை சரி செய்ய என்ன வழிகள் என்பதைப் பார்ப்போம்.

இந்த பருக்கள் உச்சந்தலையில், காதுகளுக்கு பின்னால், பின் கழுத்திற்கு மேல், நெற்றியில் போன்ற இடங்களில் உண்டாகும். இது அரிப்பு அல்லது வலியை ஏற்படுத்தும்.

தலைப்பருக்கான காரணங்கள்:

1.  அதிக எண்ணெய் சுரப்பு: அதாவது ஹார்மோன்களின் ஏற்ற இறக்கத்தினால், மாதவிடாய், கர்ப்பக்காலம் போன்ற காலங்களில் எண்ணெய் அதிகமாக சுரக்கும். முகத்தில் சுரப்பது போலவே உச்சந்தலையில் சுரக்கும். அப்போது இந்த பருக்கள் ஏற்படும்.

2.  சில ஷாம்புகள், கண்டிஷனர் மற்றும் ஸ்டைலிங் பொருட்களைப் பயன்படுத்துவதால் தலையில் அரிப்புகள் மற்றும் பருக்கள் ஏற்படும்.

3.  சர்க்கரை மற்றும் பால் ஆகியவை எடுத்துக்கொள்பவர்களுக்கு தலையில் பருக்கள் வரலாம்.

4.  உங்கள் தலையை தவறாமல் சுத்தம் செய்ய வேண்டும். அழுக்குகள் இருக்கும் சிலருக்கு பருக்கள் வரும்.

5.  மன அழுத்தம் ஹார்மோன் மாற்றங்களைத் தூண்டும். இது எண்ணெய் உற்பத்தி மற்றும் முகப்பருவை அதிகரிக்க வழிவகுக்கும்.

தலைப்பருக்களை போக்குவதற்கான வழிமுறைகள்!

1.  சாலிசலிக் அமிலம் கொண்ட ஷாம்புவை பயன்படுத்துங்கள். ஏனெனில் இது எவ்வளவு பெரிய முகப்பருக்களாக இருந்தாலும், அவற்றை எதிர்த்துப் போராடும்.

2.  கற்றாழை ஜெல்லை பருக்கள் உள்ள இடங்களிலெல்லாம் வைய்யுங்கள். இது வீக்கத்தை குறைத்து குணப்படுத்தும்.

3.  ஹேர் ஜெல் போன்ற கெட்டியாக இருக்கும் ப்ராடக்ட்டுகளை பயன்படுத்துவதை தவிர்க்கவும்.

4.   நிறைய தண்ணீர் குடியுங்கள். தண்ணீர், பழங்கள் மற்றும் காய்கறிகள் எடுத்துக்கொள்வதால் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் சீராக இருக்கும். இதுபோன்ற பருக்கள் வருவதையும் குறைக்கும்.

இதையும் படியுங்கள்:
இளமை வேண்டுமா? அப்ப இத கவனிக்க வேண்டுமே!
Head pimple

5.  மன அழுத்தம் கொள்ளாமல் இருங்கள். யோகா, தியானம் அல்லது ஆழ்ந்த மூச்சுப் பயிற்சிகள் போன்ற நினைவாற்றல் பயிற்சிகளை உங்கள் வழக்கத்தில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

6.  பருக்களை தொடுவதைத் தவிருங்கள்.

7.  தேங்காய் அல்லது ஜோஜோபா எண்ணெய் போன்ற கேரியர் எண்ணெயுடன் சில துளிகள் தேயிலை மர எண்ணெயைக் கரைத்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவவும். கழுவுவதற்கு முன் சுமார் 30 நிமிடங்கள் அதை விட்டு விடுங்கள். 

இவற்றை வழக்கமாக செய்து வந்தாலே தலைப் பருக்களை எளிதில் போக்கிவிடலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com