பலரும் சன்ஸ்கிரீன் என்பது வெயில் காலத்தில் மட்டும் புற ஊதக்காதிர்களின் அபாயத்தில் இருந்து சருமத்தை பாதுகாக்க பயன்படுத்துவது என்று நினைக்கின்றனர். குளிர் காலத்தில் சூரிய ஒளி குறைவாக இருப்பதால் சன்ஸ்கிரீன் தேவையற்றது என்றும் நினைக்கின்றனர். ஆனால், சன்ஸ்கிரீன் பயன்பாடு கோடை காலத்தில் எவ்வளவு முக்கியமோ அதே அளவு குளிர்காலத்திலும் முக்கியமானது.
குளிர்காலத்தில் ஒவ்வொரு 3 மணி நேரத்திற்குப் பிறகும் சன்ஸ்கிரீனை மீண்டும் பயன்படுத்துவது அவசியம். குளிர்காலத்தில் சூரியன் கடுமையாக இல்லாவிட்டாலும் கூட லேசாக வெயில் இருக்கிறது. இதனால் சூரிய கதிர்கள் தங்கள் சருமத்தினை பாதிக்காது என்று பலரும் நினைக்கின்றனர். பொதுவாக சரும மருத்துவர்கள் குளிர்காலத்தில் கூட சன்ஸ்கிரீன் உடலில் தடவுவது அவசியம் என்கின்றனர்.
குளிர்காலத்தில் சூரியனின் வெப்பம் குறைவாக இருக்கலாம்; ஆனால், புற ஊதாக் கதிர்கள் தாக்குவதில் இருந்து பின்வாங்குவதில்லை என்பதை உணர வேண்டும். UV கதிர்கள் வெப்பநிலையைப் பொருட்படுத்தாமல் ஆண்டு முழுவதும் இருக்கும். குளிர்காலத்தில் UVB கதிர்கள் பலவீனமாக இருக்கும் போது, UVA கதிர்கள் ஆழமாக ஊடுருவி, முன்கூட்டிய வயதான மற்றும் சரும சேதத்தை ஏற்படுத்துகின்றன.
குளிர்காலத்தில், மேகமூட்டமான நாட்களிலும் கூட புற ஊதா கதிர்கள் தாக்குதல் தொடரும் போது சரும சேதம், முன்கூட்டிய முதுமை மற்றும் சரும புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும். UV கதிர்வீச்சு, UVB கதிர்வீச்சு, அகச்சிவப்பு (IR) கதிர்வீச்சு மற்றும் நீல ஒளி ஆகியவை பருவத்தைப் பொருட்படுத்தாமல் ஆண்டு முழுவதும் இருக்கும். இந்த தீங்கு விளைவிக்கும் கதிர்களிலிருந்து சருமத்தைப் பாதுகாக்கவும், அது விரைவில் தாக்குதலில் இருந்து தப்பிக்கவும் சன்ஸ்கிரீன் பாதுகாப்பு மிகவும் அவசியம்.
எப்போதும் சன்ஸ்கிரீன் செயல்திறன் பொதுவாக 3 மணி நேரம் மட்டுமே தாக்கு பிடிக்கும். அதற்கு பிறகு ஒவ்வொரு 3 மணி நேரத்திற்கும் ஒருமுறை முகத்தினை கழுவி விட்டு சன்ஸ்கிரீன் மீண்டும் தடவ வேண்டும். இவ்வாறு செய்வதால் தொடர்ச்சியாக சருமம் பாதிக்கப்படாமல் இருக்கும். தொடர்ச்சியான பாதுகாப்பை உறுதிசெய்ய, காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நீங்கள் வெளியில் இருந்தால், குறிப்பாக காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையிலான மிக அதிக வெப்ப நேரங்களில் சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது அவசியம்.