இந்த வீட்டு வைத்திய முறைகளை பின்பற்றினால் கழுத்து கருமை விரைவில் குணமடையும்! 

Black Neck
Black Neck
Published on

சிலருக்கு கழுத்துப்பகுதியில் மட்டும் கருப்பாக இருப்பதை கவனத்து இருப்பீர்கள். இது அவர்களின் தன்னம்பிக்கையைக் குறைத்து தோற்றத்தை பாதிக்கிறது. இந்த கருமை பல்வேறு காரணங்களால் ஏற்படலாம். இது வெறும் சருமம் சார்ந்த பிரச்சனையாக மட்டும் இல்லாமல், சில சமயங்களில் உடல்நலக் குறைபாடுகளின் அறிகுறியாகவும் இருக்கலாம். 

கழுத்து கருமை ஏற்படுவதற்கான காரணங்கள்: 

கழுத்து பகுதியில் சிலருக்கு தொடர்ச்சியாக உராய்வு ஏற்படுவது காரணமாக சருமம் கருமை ஆகலாம். இது பொதுவாக அதிகமாக வியர்வை வருவது, தவறான வகை துணிகள் அணிவது அல்லது தவறான தூக்கம் முறை போன்ற காரணங்களால் ஏற்படலாம். 

சூரிய ஒளியில் உள்ள புறஊதாக் கதிர்கள் சருமத்தில் மெலனின் உற்பத்தியை அதிகரித்து கருமையை ஏற்படுத்தும். பெண்களுக்கு கர்ப்ப காலம், மாதவிடாய் மற்றும் பிற ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக கழுத்துப் பகுதியில் கருமை ஏற்படலாம். 

சிலர் நீண்ட காலமாக மருந்துகளை உட்கொள்ளும்போது இந்த பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். சருமத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளாமல் இருப்பது இறந்த செல்கள் சருமத்தில் அப்படியே தேங்கி கருமையை ஏற்படுத்தும். மேலும், நீரிழிவு நோய், பாலிசிஸ்டிக் ஓவரி சின்றோம் போன்ற சில உடல்நலக் குறைபாடுகள் கழுத்து கருமையை ஏற்படுத்தக்கூடும்.‌

வீட்டு வைத்திய முறைகள்: 

எலுமிச்சை சாற்றை கழுத்து பகுதியில் தடவி 15 நிமிடங்கள் ஊற வைத்த பின்னர், குளிப்பது நல்ல பலனைக் கொடுக்கும். எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் இறந்த சரும செல்களை நீக்கி கருமை கொஞ்சம் கொஞ்சமாக குறைய உதவும். இதேபோல, தேனை கழுத்துப் பகுதியில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால், தேனில் உள்ள ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் மற்றும் ஈரப்பதம் மட்டும் பண்புகள் சருமத்தை மென்மையாக்கி கருமையைக் குறைக்கும். 

தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் இறந்த சரும செல்களை நீக்கி சருமத்தை பொலிவாக்கும். எனவே, தயிரை நேரடியாக கழுத்துப் பகுதியில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவுவது நல்ல பலனளிக்கும். அல்லது ஓடஸை தண்ணீரில் ஊற வைத்து, பேஸ்ட் போல செய்து கழுத்து பகுதியில் தடவி மசாஜ் செய்து வந்தால், விரைவில் கருமை நிறம் மாற ஆரம்பிக்கும். 

இதையும் படியுங்கள்:
ஒழுக்கம் என்னும் ஒரு பண்பு போதும். ஓராயிரம் படிகள் நம்மை உயர்த்துவதற்கு!
Black Neck

உருளைக்கிழங்கில் உள்ள ப்ளீச்சிங் பண்புகள் கழுத்து கருமையை நீக்க உதவும். உருளைக்கிழங்கை துருவி அதன் சாற்றை கழுத்துப் பகுதியில் தடவ வேண்டும். அதேபோல, கற்றாழையின் குணப்படுத்தும் பண்புகள் சருமத்தை சமன்படுத்தி கருமையைக் குறைக்க உதவுகிறது. இதை தினசரி கழுத்தில் தடவுவது மூலமாக கழுத்து கருமையை விரைவில் சரி செய்யலாம். 

இந்த வீட்டு வைத்திய முறைகளைத் தொடர்ந்து பின்பற்றுவதன் மூலம், கழுத்து கருமையைக் குறைத்து பொலிவான சருமத்தைப் பெறலாம்.‌ இருப்பினும், இந்த வீட்டு வைத்திய முறைகள் அனைவருக்கும் ஒரே மாதிரியாக பலன் தராது. எனவே, இவற்றை முயற்சிப்பதற்கு முன் ஒரு சரும நிபுணரை அணுகி ஆலோசனை பெற்ற பின் முயற்சிப்பது நல்லது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com