கண்களுக்கு கீழ் வரும் கருவளையத்தைக் குறைக்க பயனுள்ள 6 டிப்ஸ்!

கண்கள் கருவளையம்...
கண்கள் கருவளையம்...pixabay.com

* ‘கோல்டு மில்க்’  பால் வாங்கியவுடனே அதனை காய்ச்சாமல் குறிப்பிட்ட சில நேரம் ஃபிரிட்ஜில் வைத்து பின்பு குளிர்ந்த பதத்தில், காட்டன் துணி பயன்படுத்தி கருவளையம் இருக்கும் பகுதியில் அதனை ஒத்தி எடுக்க வேண்டும். பத்து நிமிடங்களுக்கு பிறகு குளிர்ந்த நீரால் கண்களைக் கழுவ வேண்டும். பொதுவாகவே பாலில் ‘பொட்டாசியம்’ மற்றும் ‘லெக்டிக் ஆசிட்’ நிறைந் திருக்கிறது. இவை இரண்டும் நம்முடைய முகத்தில் ஈரப்பதத்தை தக்கவைக்க உதவுகிறது. முகத்தில் ஈரப்பதம் குறைவாக இருப்பதுதான் கருவளையம் ஏற்படக் காரணாமாக இருக்கிறது. அதனால், வாரத்திற்கு இரண்டுமுறை தொடர்ந்து இதனை செய்துவருவது நல்ல தீர்வாக இருக்கும். 

இதையும் படியுங்கள்:
உலகிலேயே மிகப் பெரிய ‘ஜடாயு’ இந்தியாவில் எங்குள்ளது தெரியுமா?
கண்கள் கருவளையம்...

 காற்றாழை: கருவளையதிற்குக் கற்றாழை ஒரு நல்ல மருந்து. கற்றாழையில் உள்ள அந்த வழுவழுப்பான தன்மை நிறைந்த ஜெல்லை எடுத்து தண்ணீரில் கழுவி பின்பு அதனை நன்றாக அரைத்து கருவளையம் இருக்கும் இடத்தில் பூசிக்கொள்ள வேண்டும். 15 முதல் 20 நிமிடங்களுக்குப் பிறகு குளிர்ந்த நீரால் கண்களைக் கழுவ வேண்டும். காற்றாழை முகத்தில் ஏற்படும் வறட்சியைக் குறைத்து ஈரப்பதத்தை தக்கவைக்கும் தன்மை கொண்டது.

* வெள்ளரிக்காய்:  கண்களில் ஏற்படும் கருவளையத்திற்கு வெள்ளரிக்காய் மிகவும் நல்லது. வெள்ளரிக்காயில் வைட்டமின் சி மற்றும் சிலிக்கான் சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. இந்த வெள்ளரிக்காயை தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் இரண்டு ஸ்லைசாக நறுக்கி கண்களில் வைத்துக்கொள்ளலாம். கோடை நாட்களில் இவ்வாறு செய்வது நம்முடைய கண் சார்ந்து ஏற்படும் அனைத்து பிரச்னைகளுக்கும் சிறந்த தீர்வாக இருக்கும்.

வெள்ளரிக்காய்...
வெள்ளரிக்காய்...pixabay.com

* எட்டு மணிநேரத் தூக்கம்:  ஒவ்வொருவருமே எட்டு மணிநேரத் தூக்கத்தைக் கட்டாயப்படுத்திக்கொள்வது நல்லது. தற்போது பெரும்பாலானோர் போன் மற்றும் லேப்டாப் அதிக நேரம் பயன்படுத்துவதால் தூக்க நேரத்தை குறைத்துக்கொள்கின்றனர். இதனால் சிறுவயதிலேயே முகமானது வயதான தோற்றத்தை அடைகிறது.

இதையும் படியுங்கள்:
உலகிலேயே மிகப் பெரிய ‘ஜடாயு’ இந்தியாவில் எங்குள்ளது தெரியுமா?
கண்கள் கருவளையம்...

கண்மை: பொதுவாகவே கண்களுக்கு மை பயன்படுத்தும் பெண்கள் தூங்கும் முன்பாக அதனை சரிவர வைப்ஸ், எண்ணெய் அல்லது நீரால்  துடைத்து நீக்கிவிட்டு பின்பு தூங்க வேண்டும். ஏனெனில் நாம் பயன்படுத்தக்கூடிய கண் மைகளில் ஏராளமான கெமிக்கல்கள் நிறைந்திருக்கின்றன. இதுவும்கூட கருவளையம் ஏற்படக் காரணமாக இருக்கலாம். 

*  வைட்டமின் இ: கண்களுக்கு ‘வைட்டமின் இ’ நிறைந்த காப்சூல் அல்லது எண்ணெய் இரண்டுமே மிகவும் நல்லதுதான். கடைகளில் கிடைக்கும் வைட்டமின் இ எண்ணெய்யை இரவில் தேய்த்துக்கொண்டு உறங்கினால், மறுநாள் முகத்தில் புத்துணர்ச்சி ஏற்படும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com