உலகிலேயே மிகப் பெரிய ‘ஜடாயு’ இந்தியாவில் எங்குள்ளது தெரியுமா?

ஜடாயு...
ஜடாயு...

ராமன் சீதையுடன் வனவாசத்தில் இருக்கும்போது சீதையைத் தனியே விட்டு விட்டு வேட்டைக்குப் போகும் போது சீதைக்குத் துணையாக இருந்தவன்தான் இந்த ஜடாயு. இந்த பறவைக்கு எதற்கு இவ்வளவு பெரிய சிலை அமைக்க வேண்டும் அதுவும் கேரளாவில்? இரண்டிற்கும் உள்ள புராண தொடர்பு என்ன என்பதை இந்த பதிவில் காணலாம்.

ஜடாயு எர்த் சென்டர்( Jadayu earth centre) அல்லது ஜடாயு பூங்கா என்று அழைக்கப்படும் இந்த பூங்கா, கேரளாவில் கொல்லம் மாவட்டத்தில் உள்ள சடாயமங்கலத்தில் உள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 1200 அடி உயரத்திலிருக்கிறது. உலகத்திலேயே மிக பெரிய பறவை சிலை இதுவேயாகும்.

இச்சிலையை வடிவமைத்தவர் ராஜிவ் அன்சல் என்பவர் ஆவார். இச்சிலை 200 அடி நீளமும், 150 அடி அகலமும், 70 அடி அகலமும் உடையது. இது 15,000 சதுரடி பரப்பளவில் அமைந்துள்ளது.

இந்த பூங்கா ஜடாயுமங்கலத்தில் அமைந்துள்ளது. ராமாயணத்தில், ராவணன் சீதையை கடத்தி செல்லும் பொழுது சீதையின் அழுகுரல் கேட்டு அவரை காப்பாற்ற ஜடாயு என்னும் கழுகு முற்பட்டது. ஆனால் ராவணன் அக்கழுகின் இறக்கையை வெட்டி வீழ்த்தி விட்டு சீதையை கவர்ந்து சென்று விடுகிறான். அந்த ஜடாயு வந்து விழுந்த இடமே ‘ஜடாயுமங்கலம்’ என்று அழைக்கப்படுகிறது. இதையறியாமல் ராமனும், லக்ஷ்மணனும் சீதையை தேடி வந்துக்கொண்டிருக்கும் போது, ஜடாயுவை பார்த்து விவரம் கேட்க, ராவணன் சீதையை தெற்கே கவர்ந்து சென்றுள்ளான் என்று ஜடாயு கூறுகிறது. ஜடாயு செய்த உதவிக்காக அதற்கு மோட்சம் வழங்குகிறார் ராமர்.

ஜடாயு சிலை
ஜடாயு சிலை

இந்த ஜடாயு பெண்களின் பாதுகாப்பையும், மரியாதையின் முக்கியத்துவத்தை உணர்த்து வதற்காகவும், ராமாயண நிகழ்வை நினைவுப்படுத்தியும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஜடாயு சிலைக்கு மேலே செல்வதற்கு மொத்தம் 826 படிகள் உள்ளது. அதற்கு நடந்தும் போகலாம் அல்லது கேபிள் காரில் ஏறி செல்லலாம். கேபிள் காருக்கு கட்டணம் உண்டு. கேமரா மற்றும் பை எடுத்து செல்லலாம். உணவு எடுத்து செல்ல கூடாது. தண்ணீர் பிளேஸ்டிக் பாட்டிலில் இல்லாமல் வேறு பாட்டில்களில் கொண்டு செல்லலாம். மலைக்கு மேலே சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் இருக்கிறது. போகும் வழியில் ஆங்காங்கே காபி கடைகள் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு செல்ல கட்டணம் ஒருவருக்கு 400 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.

ஜடாயு பூங்காவில் செய்ய வேண்டியது,

1. ஜடாயு சிலையை சுற்றி பார்க்கலாம். ஏனெனில் இது உலகத்திலேயே மிக பெரிய பறவை சிலையாகும். மலை மேலிருந்து தெரியும் இயற்கை காட்சிகளையும் ரசிக்கலாம்.

இதையும் படியுங்கள்:
Pot Water Benefits: மண்பானையில் தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா? 
ஜடாயு...

2. கேபிள் காரில் பயணம் செய்ய கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எனினும் அங்கிருந்து மலையின் அழகை ரசிப்பது புதுவித அனுபவமாக இருக்கும். 

3. இங்கே நிறைய பொழுதுபோக்குகள் இருக்கின்றது. மலையேற்றம், செங்குத்தான மலையிலிருந்து இறங்குதல் போன்ற சாகசங்களையும் முயற்சி செய்யலாம். 

4.  ஜடாயுவிலிருந்து இயற்கை அழகை ரசித்து கொண்டே நடைப் பயணம் மேற்கொள்வது அலாதியான அனுபவமாக இருக்கும். 

5. இங்குள்ள ஆயுர்வேத கிராமத்தில் ஸ்பா சிகிச்சை, மூலிகை சிகிச்சை போன்றவற்றை செய்து கொள்வது உடலுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும். 

6. ஜடாயு இயற்கை பூங்கா, குடும்பத்துடன் பிக்னிக் செல்வதற்கு ஏற்ற இடமாக இருக்கிறது. இங்கு பச்சை பசேலென்ற இடங்களும், அழகும் மனதிற்கு ரம்மியமாக இருக்கும். 

7. இங்கு சில குறிப்பிட்ட இடங்களில் ஹெலிகாப்டரில் பயணம் செய்யலாம். கழகு பார்வையிலிருந்து இந்த இடத்தை பார்ப்பது மிகவும் அழகாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

8. இங்கு உள்ள பிரம்மாண்டமான ஜடாயு சிலையையும், இயற்கை அழகையும் புகைப்படம் எடுத்து மகிழலாம். 

இந்த இடம் ஆன்மீக ரீதியாகவும் சுற்றுலாப் பயணிகளையும் கவரும் விதமாகவும் அமைந்துள்ளது. எனவே இக்கோடை வெயிலில் இருந்து தப்பிக்க இதுபோன்ற கண்களுக்கு குளிர்ச்சியான இடங்களுக்கு சென்றுவிட்டு வருவது நல்லதாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com