
1. 3 in 1 ஹேர் ஆயில்:
வெந்தயம், வெங்காயம் மற்றும் ரோஸ்மேரி எண்ணெயில் அதிக ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இந்த எண்ணெயை பயன்படுத்த, பயன்படுத்த, இரத்த ஓட்டம் அதிகரிக்கப்பட்டு முடி வளர்ச்சி அதிகரிக்கும். எந்தவித ரசாயனம் கலக்காத இந்த இயற்கை எண்ணெயை வீட்டிலேயே தயாரிக்கலாம்.
இதை எப்படி தயாரிப்பது
பெரிய வெங்காயம் - 1
இரண்டு டேபிள் ஸ்பூன் - வெந்தயம்
ஒரு டேபிள்ஸ்பூன் - காய்ந்த ரோஸ்மேரி இலைகள்
அரை கப் - தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் ஆயில்
கண்ணாடி குடுவை
வெங்காயத்தை அரிந்து அரைத்து சாற்றை வடிகட்டி எடுக்கவும்.
முதல்நாள் இரவே வெந்தயத்தை ஊறவைத்து மறுநாள் பேஸ்ட்டாக அரைக்கவும்.
அரை கப் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் ஆயிலை அடுப்பில் சூடவைத்து இறக்கி ரோஸ்மேரி இலைகளைச் சேர்க்கவும். 5 நிமிடம் கழித்து வெந்தயம் பேஸ்ட் சேர்க்கவும். பிறகு வெங்காய ஜுஸ் சேர்த்து கலக்கி திரும்பவும் ஐந்து நிமிடம் அடுப்பில் சுட வைக்கவும். இது நன்றாக ஆறிய பிறகு வெள்ளைத்துணியில் வடிகட்டி கண்ணாடி பாட்டிலில் எடுத்து வைக்கவும்.
இரவு இந்த எண்ணெயை விரல்களில் தலைக்கு நன்கு மசாஜ் செய்யவும். தலையை ஷவர் கேப்பால் மூடவும். மறுநாள் காலை ஷாம்பூ போட்டு அலசவும்.
இந்த எண்ணெயின் பயன்
வெங்காயத்தின் சல்ஃபர் நன்கு வேர்க்கால்களை வலுவாக்கும். ரோஸ்மேரி இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும். வெந்தயத்தில் உள்ள புரதமும், நிகோடினிக் அமிலமும் முடி மெலிதல் மற்றும் முடி உடைவதைத் தடுக்கும்.
வெங்காயத்தில் ஆன்டிமைக்ரோபியல் பண்பு உள்ளதால் பொடுகு தொற்றுப் பிரச்சனைகளைத் போக்கும். வெந்தயம் அழற்சியை போக்கும். ரோஸ்மேரி நீரேற்றத்தை அதிகமாக்கி முடி செழிப்பாக வளரும். தேங்காய் எண்ணெய் பளபளப்பை கொடுக்கும்.
ரோஸ்மேரி, வெந்தயம் மற்றும் தேங்காய் எண்ணெய் ஆகிய மூன்றின் பண்புகளும் சேர்ந்து வறண்ட முடியை பொடுகு மற்றும் முடி உடைதலை நீக்கி, ஆரோக்கிய கூந்தல் வளர்ச்சிக்கு உதவி புரியும். எந்த கெமிகலும் எந்த பின்விளைவுகளும் இல்லாத இந்த எண்ணெயை பயன்படுத்தி நல்ல முடி ஆரோக்கியம் பெறலாம்.
2. பட்டை - தேங்காய் எண்ணெய் மாஸ்க்:
தலையில் இரத்த ஓட்டத்தை சீராக்கி வலுவாக வைக்கக் கூடிய மாஸ்க் இது. முடி மெலிதலையும் தடுக்கும். ஒரு டீஸ்பூன் பட்டைப் பொடி மற்றும் ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெயும் நன்றாகக் கலந்து முடியில் நன்கு தடவி அரைமணி நேரம் கழித்து முடியை அலசவும்.
வறண்ட மற்றும் முடி உடைதலைப் போக்கும் தேங்காய் எண்ணெய், யோகார்ட், முட்டை மற்றும் எலுமிச்சை ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய், ஒரு கப் எலுமிச்சை ஜுஸ் மற்றும் ஒரு முட்டை எடுத்துக் கொள்ளவும். மேற்கூறிய எல்லாவற்றையும் ஒரு பௌலில் சேர்த்து நன்கு கலந்து இதைத் தலையில் தடவி தலை பொறுக்கும் அளவிற்கு சூடான ஈர டவல் வைத்து முடிவைச் சுற்றி வைக்கவும். 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் ஷாம்பூ போட்டு அலசவும்.