
பால், மஞ்சள் தூள் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து, முகம் மற்றும் கழுத்திற்கு தடவி, 20 நிமிடம் கழித்து பின் சுத்தமான நீரால் கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள இறந்த செல்களும் வெளியேறிவிடும்.
புருவத்தில் தினமும் சிறிது ஆமணக்கு எண்ணெய் தடவி வர, புருவம் அடர்த்தியாக வளரும்.
செம்பட்டை நிற முடி கொண்டவர்கள், தேங்காய்ப்பால் தடவி குளித்து வந்தால் நாளடைவில் செம்பட்டை முடி சரியாகும்.
வாழைப்பழத்தோலை லேசாக சூடுபடுத்தி கண்களின் மேல் வைக்க கருவளையம் குறையும்.
நகங்களில் சிதைவு ஏற்படாமலும், வெண்மையாகவும் இருக்க சூரியகாந்தி எண்ணெயை கை, கால் நகங்களில் தடவவேண்டும்.
1 டீஸ்பூன் தேனில் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊறவைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவவேண்டும். இப்படி செய்வதால், சருமம் புத்துணர்ச்சியுடனும், பொலிவோடும் மின்னும்.
உதடுகள் மென்மையாகவும், வறட்சியின்றியும் இருப்பதற்கு லிப்-பாம்களை பயன்படுத்தாமல், சிறிது நெய்யை தடவி வந்தால், உதடுகளில் வெடிப்புகள் ஏற்படாமல் தடுக்கலாம்.
1 டீஸ்பூன் தேனில் 1 டீஸ்பூன் கல் உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் முகத்தை நீரில் கழுவி, பின் அந்த கலவையைக் கொண்டு சருமத்தை வட்ட சுழற்சியில் ஸ்கரப் செய்து 10 நிமிடம் ஊற வைத்து கழுவி வந்தால், சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளைப் புள்ளிகள் அகற்றப்படும்.
எலுமிச்சை பழச்சாறு, பன்னீர் மற்றும் தயிர் சேர்த்து கலந்து முகத்தில் பூசி ஊறவைத்து, பிறகு கழுவி வந்தால் முகம் பளபளப்பாகும்.
கொத்தமல்லி மற்றும் மஞ்சள் தூள் ஆகியவற்றை அரைத்து, பேஸ்ட் செய்து முகத்தில் தடவி வந்தால் கரும்புள்ளிகள் குறையும்..
பாதாம் எண்ணெயை எடுத்து உடல் முழுவதும் தேய்த்து சிறிது நேரம் வைத்திருந்து பின்பு குளித்துவர சருமம் மென்மையாகும்.
சர்க்கரையுடன் சிறிது கிளிசரின் சேர்த்துக் தடவி வந்தால், உள்ளங்கை மென்மையாக மாறும்.
பாதாம் பருப்பை ஊறவைத்து, பால்விட்டு அரைத்து, அந்த விழுதைக் கண்களைச் சுற்றிப் பூசி வந்தால், கருவளையம் நீங்கும்.
பச்சை பசும்பாலுடன் உருளைக்கிழங்கு சாறு சேர்த்து, இக்கலவையை முகத்தில் பூசி வர, முகத்தில் கருமை நீங்கி, பளிச்சென்று ஆகிவிடும்.