அக்குள் கருமையைப் போக்கும் வீட்டு வைத்திய முறைகள்!

 Underarm Blackness
Home Remedies for Underarm Blackness
Published on

அக்குள் பகுதி கருமையாக இருப்பது பல நபர்களுக்கு கவலையை ஏற்படுத்தும் ஒன்றாக உள்ளது. இதனால் அவர்களின் தன்னம்பிக்கை சுயமரியாதை வெகுவாக பாதிக்கப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக இந்த அக்குள் கருமையை போக்குவதற்கு பல வீட்டு வைத்திய முறைகள் உள்ளன. அவை அக்குளில் உள்ள கருமை நிறத்தை போக்கி இயற்கையான நிறத்தை மீட்டுக் கொண்டுவரும். அத்தகைய வீட்டு வைத்திய முறைகள் பற்றி இப்பதிவில் பார்க்கலாம். 

எலுமிச்சை சாறு: எலுமிச்சை சாறு அதன் இயற்கையான ப்ளீச்சிங் பண்புகளுக்கு பெயர் பெற்றது. இது அக்குள் கருமையைக் குறைக்க உதவும். எலுமிச்சை சாறு பிழிந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவி சுமார் பத்து நிமிடம் அப்படியே விட்டு கழுவி விடவும். வாரத்திற்கு மூன்று முறை இப்படி செய்து வந்தால், அக்குள் கருமை கொஞ்சம் கொஞ்சமாக மறையத் தொடங்கும். 

உருளைக்கிழங்கு: உருளைக்கிழங்கில் லேசான அமிலத்தன்மை உள்ளதால் அது ப்ளீச்சிங் ஏஜென்டாக செயல்பட்டு, அக்குள் கருமையை நீக்கும். உருளைக்கிழங்கை மெல்லியதாக வெட்டி உங்கள் அக்குளில் சில நிமிடங்கள் தேய்க்கவும். பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவிவிடவும். இப்படி தினசரி செய்து வந்தால், அக்குள் கருமைக்கு நல்ல பலன் கிடைக்கும். 

பேக்கிங் சோடா: பேக்கிங் சோடா சருமத்தில் உள்ள இறந்த சரும செல்களை அகற்ற உதவும். இது அக்குளில் உள்ள கருமையை போக்கி ஒளிரச் செய்யும். பேக்கிங் சோடாவை தண்ணீர் கலந்து பேஸ்ட் போல உருவாக்கி அதை உங்கள் அக்குளில் தேய்த்து ஊற விடுங்கள். இப்படி வாரம் மூன்று முறை பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். 

வெள்ளரிக்காய்: வெள்ளரிக்கு சருமத்தை ஒளிரச் செய்யும் பண்புகள் உள்ளன. எனவே வெள்ளரிக்காயை மிக்ஸியில் போட்டு அரைத்து அந்த பேஸ்ட்டை, அக்குளில் தடவினால் அதன் கருமை குறைந்து ஆரோக்கியமானதாக மாறிவிடும். 

தேங்காய் எண்ணெய்: தேங்காய் எண்ணெய் அதன் ஈரப்பதம் மற்றும் ஊட்டமளிக்கும் பண்புகளுக்கு பெயர் பெற்றது. அக்குள் கருமை பாதிப்பு உள்ளவர்கள் குளித்த பிறகு உங்கள் அக்குளில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் தடவவும். பின்னர் லேசாக மசாஜ் செய்யவும். இதை தொடர்ச்சியாக செய்து வந்தால், அக்குள் கருமை பாதிப்பிலிருந்து விரைவில் விடுபடலாம். 

இதையும் படியுங்கள்:
டைனோசர்களுக்கு முன்னர் இந்த உலகம் எப்படி இருந்தது தெரியுமா? 
 Underarm Blackness

அக்குள் கருமையை போக்குவதற்கு சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதிகப்படியான வியர்வை மற்றும் மோசமான சுகாதாரத்தால் அக்குள் கருமை ஏற்படும் என்பதால், அந்த பகுதியை எப்போதும் சுத்தமாகவும் வறண்டதாகவும் வைத்திருக்க வேண்டியது அவசியம். சருமத்தை எரிச்சலடையச் செய்யும் ஸ்பிரேக்களைத் தவிர்க்கவும். 

இந்த இயற்கை வழிமுறைகளைப் பின்பற்றி நீங்கள் விரைவாக அக்குள் கருமை பாதிப்பிலிருந்து விடுபடலாம். ஒருவேளை உங்களுக்கு மருத்துவ உதவி தேவைப்பட்டால் உடனடியாக தகுந்த நிபுணரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com