
மருதாணி வைத்துக்கொண்டு அது காயும்வரை காத்திருந்து மறுநாள் கலைத்துவிட்டு பார்க்க அதன் நிறத்தையும், வாசனையையும் பார்த்து பார்த்து மகிழ்ந்த காலங்கள் இப்போது இல்லை. நகங்களுக்கு நெயில் பாலிஷ் போடும் வழக்கம் வந்த பின் அனைவரின் சாய்ஸ்ம் இதுதான் என்றாகிவிட்டது.
நம் ஆரோக்கியத்தையும், அழகையும் எடுத்துக் காட்டுவது நகங்கள் தான். அதை அழகாக ஆரோக்கியமாக பராமரிக்க வேண்டியது அவசியம். நகங்களுக்கு பாலிஷ் போடும் முன் அதை நன்கு சுத்தம் செய்தல் வேண்டும்.
பிசுபிசுப்பு, எண்ணைத் தன்மை இருந்தால் பாலிஷ் போட்ட இரண்டு நாட்களிலேயே உரிந்து வந்துவிடும். நெயில் பஃபர் கொண்டு நகத்தில் இருக்கும் எண்ணெய் தன்மையை நீக்கவேண்டும்.
இதன் மூலம் நகங்கள் பளபளப்பாகும்.நெயில் பாலிஷ் போட்டாலும் எளிதில் உரிந்து வராது. நகத்தினை பஃபர் செய்த பின் நெயில் பாலிஷ் ஆல் கோட்டிங் கொடுக்க வேண்டும். அது நன்கு காய்ந்த பிறகு நெயில் பாலிஷ் மற்றொரு கோட்டிங் கொடுக்க வேண்டும். இப்படி முறையாக போட பாலிஷ் பளபளப்பாக நீண்ட நாள் இருக்கும்.
சரும நிறத்திற்கேற்ப நெயில் பாலிஷ் நிறங்களை தேர்வு செய்து போடவேண்டும். காரணம் நகங்கள்தான் அடுத்தவரிடம் பேசும்போது நம் அழகை எடுத்துக் காட்டக்கூடியது. கருமை நிறமுடையவர்கள் லைட் நிறங்களை தேர்வு செய்யலாம். குறிப்பாக டஸ்கி நிறமுள்ளவர்கள் லைட் கலர் நெயில் பாலிஷ் போட அழகாக இருக்கும்.
மேலும் அடர் நிறங்களை விட லைட் நிறங்களில் ரசாயனமும் குறைவு. அடர்த்தியான ஷேட்கள் மேலும் சருமத்தை கருப்பாக காட்டும். நகங்களை மாதம் ஒருமுறை பெடிக்யூர் அல்லது மெனிக்யூர் செய்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு செய்ய முடியாத பட்சத்தில் நக இடுக்குகளில் உள்ள அழுக்குகள் மற்றும் நக அடிப்பாகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கவேண்டும்.
நம் நகத்தின் இயல்பிற்கேற்ப நகத்தை ஷேப் செய்து நெயில் பாலிஷ் போட அழகாக இருக்கும்.நெயில் பாலிஷை ரிமூவர் கொண்டு நீக்க வேண்டும். நெயில் ஆர்ட் என வந்துவிட்டது. பங்ஷனுக்கேற்ப, வயதிற்கேற்ப நிறங்களை தேர்ந்தெடுத்து போட்டுக்கொள்ள சிறப்பாக இருக்கும். ஃபார்மால்டிஹைடு மூலக்கூறுகள்தான் பாலிஷ் உடனே காய உதவி புரிகிறது.
நெயில் பாலிஷ் வாசனை நரம்பு மண்டலத்தை பாதிக்கும் தன்மை கொண்டது என்கின்றனர். ஆகவே குழந்தைகளுக்கு போடாமல் தவிர்ப்பது நலம். அப்படி போட வேண்டுமெனில் பேபி நெயில் பாலிஷ் கடைகளில் கிடைப்பதை காணலாம் போடலாம்.
நல்ல சத்தான உணவு, கை, நகங்களை சுத்தமாக பராமரித்தலே. நகங்களுக்கான பாதுகாப்பு. நெயில் பாலிஷை வலது கையில் எப்போதும் போட்டு பின் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. பாலிஷ் போட்டு நகங்களை கடிப்பதும் நல்லதல்ல. நகங்களை பராமரிப்போம். ஆரோக்கியம் காப்போம்.