Lip balms
Lip balms

இயற்கையான லிப் பாம்களை வீட்டிலேயே செய்வோமா?

Published on

சிலருக்குக் கடையில் அழகுப் பொருட்கள் வாங்குவது என்பதே பிடிக்காதவையாக இருக்கும். ஏனெனில் அவர்கள் இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தி பயனடையவே விரும்புவார்கள். உதடுகளின் வறட்சியைப் போக்க உதவும் இந்த லிப் பாம்களில் சிறிதளவு செயற்கைப் பயன்படுத்தினாலே சிலருக்கு அலர்ஜி ஏற்பட்டுவிடும். அதனால் இயற்கையான லிப் பாம்களையே பயன்படுத்த விரும்புவார்கள்.

அந்தவகையில் லிப் பாம்களை வீட்டில் எப்படி செய்வது என்பதைப் பார்ப்போம்.

பட்டை லிப் பாம்:

பட்டை எண்ணெயுடன் கோகோ வெண்ணெய் சேர்த்து நன்குக் கலக்க வேண்டும். பின் அதனை ஃப்ரிட்ஜில் வைத்துக் கட்டியாக்கினால் பட்டை லிப் பாம் ரெடி. இதனை நீங்கள் தேவைப்படும்போதெல்லாம் எடுத்துத் தேய்த்துவிட்டு மீண்டும் ஃப்ரிட்ஜில் வைத்துக்கொள்ளலாம்.

மாதுளை லிப் பாம்:

மாதுளைப் பழத்தை இடித்தோ அல்லது மிக்ஸியில் போட்டு அரைத்தோ எடுத்துக்கொள்ள வேண்டும். பின் அதில் உள்ள சாறைப் பிழிந்துத் தனியாக எடுக்க வேண்டும். இந்த சாறுடன் தேங்காய் எண்ணெய் கலந்து ஃப்ரிட்ஜில் வைத்தால் மாதுளை லிப் பாம் தயார்.

ஆரஞ்சு லிப் பாம்:

ஆரஞ்சு ஜூஸைப் பிழிந்து அதனை நன்றாகக் கொதிக்க வைக்க வேண்டும். பின் உருகவைத்த தேன் மெழுகு மற்றும் ஷீ வெண்ணெயை அதனுடன் சேர்க்க வேண்டும். இறுதியாக தேங்காய் எண்ணெயை கலந்து நன்றாகக் கொதிக்கவிடவும். கெட்டியாகும் வரை அடுப்பில் வைக்க வேண்டும். பின் இறக்கி சூடு தணிந்ததும் டப்பாவில் வைத்து அடைத்துவிட வேண்டும். தேவைப்படும்போது மட்டும் திறந்துப் பயன்படுத்திவிட்டு மீண்டும் மூடி வைக்க வேண்டும்.

பீட் ரூட் லிப் பாம்:

பீட் ரூட்டை நன்றாக சீவி அதிலிருக்கும் சாறைப் பிழிந்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து ஃப்ரீசரில் வைத்துக் கெட்டியாக்க வேண்டும். பின் அதனை தேவைப்படும்போது பயன்படுத்திக்கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்:
ஒரு முறை Ice Water Facial செஞ்சு பாருங்க... வேற லெவல் ரிசல்ட் கிடைக்கும்! 
Lip balms

தேன் லிப் பாம்:

தேன் மெழுகை ஊறவைத்து அதில் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாகக் கொதிக்க வைக்க வேண்டும். பின் அதனுடன் சிறிது தேன் மற்றும் தேவையென்றால் வாசனைத் திரவியங்கள் சேர்த்து கெட்டியாகும் வரை கலக்கவும். ஆறியதும் அதனை டப்பாவில் அடைத்து பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஷீ வெண்ணெய் லிப் பாம்:

ஷீ வெண்ணெய் மற்றும் தேன் மெழுகு ஆகியவற்றை உருக வைத்து அதனுடன் தேன் மற்றும் வாசனை திரவியம் சேர்த்து நன்றாகக் கொதிக்கவிடவும். ஆறியதும் அதனைத் தனியாக எடுத்து வைத்து பயன்படுத்திக்கொள்ளலாம்.

logo
Kalki Online
kalkionline.com