
பெண்கள் அழகுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். அதிலும் முகத்தில் பருக்கள், புள்ளிகள் இருந்தால் பிடிக்காது. அவற்றை தடுக்க நிறைய முயற்சிகளையும் மேற்கொள்வார்கள். இதற்கு தீர்வாக பயன்படுத்தப்படும் பல வகையான அழகு சாதன பொருட்கள் உள்ளன சருமத்தை சுத்தப்படுத்தும் அதிசயங்களை செய்கிறது.
ஆனால் இதனால் விரும்பிய பலன்கள் கிடைக்காது. அவற்றுக்காக நிறைய செலவழிப்பதற்கு பதிலாக வீட்டிலேயே ஃபேஸ் பேக் தயாரிக்கலாம். குறிப்பாக அரிசிமாவு பயன்படுத்துவதன் மூலம் சருமத்தை ஒளிரச் செய்யலாம். இதனை வீட்டிலேயே அரிசி மாவு கொண்டு தயாரிக்கலாம். முகத்தில் கரும்புள்ளிகள் பருக்ககள் இருந்தால் அரிசிமாவு கொண்டு அவற்றை எப்படி அகற்றலாம் என்பதை பார்க்கலாம்.
விளக்கெண்ணெய் + அரிசிமாவு
ஆமணக்கில் கொழுப்பு அமிலங்கள், ஆன்டி ஆக்சிடன்ட்கள், வைட்டமின் ஈ நிறைந்துள்ளது. இது சருமத்தை சரி செய்யவும், புள்ளிகளை அகற்றவும் உதவி செய்யும். இதனை தயாரிக்க ஆர்கானிக் விளக்கெண்ணெய் ரெண்டு ஸ்பூன், அரிசி மாவு சேர்ந்து கலந்து பேஸ்ட் ஆக்கி பருக்கள், புள்ளிகள் மீதுதடவி மெதுவாக மசாஜ் செய்து 30 நிமிடங்கள் கழித்து கழுவிவிடவும். நாளடையில் பரு கரும்புள்ளி நீங்கும்.
கண்ணுக்கு கீழ் உள்ள கருவளையத்தை போக்க அரிசிமாவில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் தக்காளிசாறு சேர்த்து கருவளையம் உள்ள இடங்களில் தடவி பத்து நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால் இவை மூன்றும் சருமத்தை பளபளப்பாக்கி கருவளையத்தை போக்கும்.
ஹைப்பர் பிக் மென்டேஷன் பிரச்னைக்கு அரிசி மாவு மிகவும் பயனுள்ளது. இந்த பேஸ் பேக் தயாரிக்க அரிசி மாவு, எலுமிச்சை சாறு சில துளிகள் ரோஸ் வாட்டர் கலந்து பேஸ்ட் ஆக்கி, இந்த பேக்கை முகம் மற்றும் கழுத்தில் தடவவும் . 10 நிமிடம் கழித்து இரண்டு மூன்று முறை செய்த பிறகு கழுவினால் முகம், கழுத்து பிரகாசமாகும். பவளப்பாகும்.
வரித்தழும்பு நீங்க.
உடலில் இருக்கும் ஸ்ட்ரெச் மார்க் தழும்பை நீக்க அரிசி மாவு உதவும். பிரசவத்தினால் உண்டாகும் தழும்பு, உடல் எடை அதிகமானவர்கள் வேகமாக உடல் எடையைக் குறைக்கும்போது உண்டாகும் தழும்பு போன்றவை உடலில் எங்கு இருந்தாலும் தனியாகத் தெரியும். அதை போக்க அரிசி மாவுடன் மஞ்சள் தூள் காய்த்தாத பசும்பால் சேர்த்து பேஸ்ட் போல் குழைத்து ஸ்டெர்ச் மார்க் இருக்கும் இடங்களில் தடவி 20 நிமிடங்கள் கழித்து து வெது வெதுப்பான நீரில் கழுவவேண்டும் வயிற்றில் போடுபவர்கள் தினமும் குளிப்பதற்கு அரைமணி நேரம் முன்பு இதை தடவி குளித்து வந்தால் விரைவில் தழும்புகள் மறைந்து சருமம் சீராகும்.
மேக்கப் கலைக்க.
விழாக்கள் முக்கியமான இடங்களுக்கு சென்றுவிட்டு மேக்கப் பயன்படுத்துபவர்கள் மேக்கப்பை கலைப்பதற்கு இரவு தூங்கும் பொழுது கலைக்க வேண்டும் எனில் அரிசி மாவில் பன்னீரை குழைத்து முகத்தில் தடவி லேசாக 5 நிமிடங்கள் கழித்து கழுவி விட்டுமுகத்தைப் பார்த்தால் மேக்கப் முழுவதும் நீங் சிமுகம் பளிச்சென்று மின்னும்.
இறந்தசெல்களை நீக்க.
அரிசி மாவு முகத்தில் சரும துளைகளில் இருக்கும் அழுக்குகளை நீக்க உதவி செய்யும். முகத்தில் இறந்த செல்கள்தங்கி விடுவதால் முகப்பருக்கள் வருகிறது. அவ்வப்போது அதை வெளியேற்ற இரண்டு முறை இதனை செய்த பின் முகப்பொலிவைஅடையலாம். அதற்கு அரிசி மாவுடன் சர்க்கரை சேர்த்து உருட்டி முகத்தில் லேசாக மசாஜ் செய்யவும்.
முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள், மூக்கு நுனி, கழுத்தில் இருக்கும் கருமைகள் போன்ற இடங்களில் சற்று அழுத்தமாக ஸ்கரப் செய்து குளிர்ந் நீரில் முகத்தை கழுவிவிட்டு, பின் ஐஸ் கட்டிகள் கொண்டு முகத்துக்கு ஒத்தடம் கொடுக்கவேண்டும்.