மழைக்காலத்தில் தலைக்கு எண்ணெய் வைக்கும் முன் இத தெரிஞ்சுக்கோங்க! 

Hair Oil
Hair Oil
Published on

மழைக்காலம் எனப்படும் இனிமையான காலகட்டத்தில் நம்முடைய தலைமுடி சில பிரச்சினைகளை எதிர்கொள்ளும். அதிகப்படியான ஈரப்பதம், மாசு, பூஞ்சை தொற்று போன்றவை மழைக்காலத்தில் முடி உதிர்வு, பொடுகு, அரிப்பு போன்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். இந்த பிரச்சினைகளில் இருந்து விடுபட தலைக்கு எண்ணெய் வைப்பது ஒரு சிறந்த தீர்வாக இருக்கும். ஆனால், மழைக்காலத்தில் எத்தனை நாட்கள் தலைக்கு எண்ணெய் வைப்பது என்பதில் பலருக்கு சந்தேகம் இருக்கும்.

தலைக்கு எண்ணெய் வைப்பதன் நன்மைகள்: 

  • முடி வேர்களை பலப்படுத்துகிறது: எண்ணெய் வைப்பது முடி வேர்களுக்கு போஷாக்கை அளித்து, அவற்றை பலப்படுத்துகிறது. இதனால் முடி உதிர்வு குறைந்து, புதிய முடி வளர்ச்சி அதிகரிக்கிறது.

  • உச்சந்தலையை ஈரப்பதமாக்குகிறது: மழைக்காலத்தில் உச்சந்தலை வறண்டு போகும். எண்ணெய் மசாஜ் உச்சந்தலையை ஈரப்பதமாக்கி, அரிப்பு மற்றும் பொடுகு பிரச்சினைகளைத் தடுக்கிறது.

  • முடியை மென்மையாக்குகிறது: எண்ணெய் மசாஜ் முடியை மென்மையாகவும், மின்னலாகவும் மாற்றுகிறது.

  • ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது: எண்ணெம் உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து, முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. மேலும் இது மன அழுத்தத்தைக் குறைத்து, தூக்கத்தை மேம்படுத்துகிறது.

மழைக்காலத்தில் எத்தனை நாட்கள் தலைக்கு எண்ணெய் வைப்பது?

மழைக்காலத்தில் வாரத்தில் 2-3 நாட்கள் தலைக்கு எண்ணெய் வைப்பது நல்லது. ஆனால், இது உங்கள் முடியின் தன்மை மற்றும் உச்சந்தலையின் நிலை ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடும்.

  • வறண்ட முடி உள்ளவர்கள் வாரத்தில் 3 நாட்கள் எண்ணெய் வைக்கலாம்.

  • எண்ணெய் பசை உடைய முடி உள்ளவர்கள் வாரத்தில் 2 நாட்கள் எண்ணெய் வைக்கலாம்.

  • பொடுகுப் பிரச்சனை உள்ளவர்கள் வேப்ப எண்ணெய் அல்லது தேயிலை எண்ணெய் போன்ற ஆன்டிசெப்டிக் பண்புகள் கொண்ட எண்ணெய்களை பயன்படுத்தலாம்.

இதையும் படியுங்கள்:
உதிர்ந்த தலைமுடியையும் மீண்டும் முளைக்கவைக்கும் ஆரோக்கிய எண்ணெய்!
Hair Oil

எண்ணெய் வைப்பதால் ஏற்படும் தீமைகள்: 

அதிகப்படியான எண்ணெய் உச்சந்தலையில் எண்ணெய் சுரப்பை அதிகரிக்கச் செய்யும். இது முடி கொட்டும் பிரச்சினையை இன்னும் அதிகரிக்கலாம். மழைக்காலத்தில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால், எண்ணெய் வைத்தால் பூஞ்சை தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. அவ்வப்போது எண்ணெய் வைத்தால் முடி கனமாக இருக்கும். இதனால் முடி உடைந்து போக வாய்ப்பு உள்ளது.

மழைக்காலத்தில் தலைக்கு எண்ணெய் வைப்பது முடியை பராமரிக்க ஒரு சிறந்த வழி. ஆனால், அதிகப்படியான எண்ணெய் உச்சந்தலையை கெடுத்து விடும். எனவே, வாரத்தில் 2-3 நாட்கள் எண்ணெய் வைப்பது போதுமானது. உங்கள் முடியின் தன்மை மற்றும் உச்சந்தலையின் நிலையைப் பொறுத்து எண்ணெய் மற்றும் எண்ணெய் வைக்கும் முறையைத் தேர்வு செய்வது நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com