உதிர்ந்த தலைமுடியையும் மீண்டும் முளைக்கவைக்கும் ஆரோக்கிய எண்ணெய்!

Hair health oil
Hair health oil
Published on

ல நூற்றாண்டுகளாக ஆயுர்வேதத்தில் தலைமுடி வளர்ச்சிக்காக பயன்படுத்தி வரும் எண்ணெய் எதுவென்று தெரியுமா? இந்த ஒரு எண்ணெய்யை மட்டும் தினமும் தலையில் தடவி வர, முடி வளர்ச்சி கட்டுக்கடங்காமல் இருக்கும். அதுதான் கருஞ்சீரக எண்ணெய். இதனுடைய பயனைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

கருஞ்சீரக எண்ணெய்யில் nigellone மற்றும் Thymoquinone உள்ளது. இதுதான் முடியின் வளர்ச்சிக்கு மிகவும் உதவுகிறது. இது முடியினுடைய வளர்ச்சிக்கு மட்டுமில்லாமல், பொடுகு, கிருமித்தொற்று, வறட்சி, பலவீனமான முடி மற்றும் நரைமுடியை சரி செய்யும் ஆற்றல் உடையது. வழுக்கையில் கூட முடி வளர உதவுவதாகச் சொல்லப்படுகிறது.

கருஞ்சீரக எண்ணெய்யில் ஃபேட்டி ஆசிட், வைட்டமின் மற்றும் மினரல் உள்ளதால் முடி வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.

இதில் உள்ள அழற்சி எதிர்ப்புப் பண்பு உச்சந்தலையில் ஏற்படும் நோய் தொற்றை போக்கி முடி ஆரோக்கியமாக வளர உதவும். இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட் ப்ரீரேடிக்கலை தடுத்து முடியை பாதிக்காமல் பாதுகாக்கிறது. இதனால், தலைமுடி ஆரோக்கியமாகவும், அடர்த்தியாகவும் வளரும்.

நம்முடைய தலை முடி சூரிய ஒளி, மாசு, அழுக்கு போன்ற பல காரணங்களால் பொலிவு இழந்து வறட்சியாகக் காணப்படுகிறது. கருஞ்சீரக எண்ணெய் தடவும்பொழுது இந்த பாதிப்புகளில் இருந்து தலைமுடியை மீட்டெடுக்கிறது. மேலும், இந்த எண்ணெய்யை தினமும் தடவி வர, தலை முடி ஈரப்பதத்துடன் இருக்க உதவுகிறது. வயதானதால் வறும் நரை முடியை கருமையாக்க உதவுகிறது. முடி அதிகமாகக் கொட்டுவதைத் தடுத்து, இயற்கையாகவே கூந்தலுக்கு பளபளப்பு கொடுக்கிறது.

இதையும் படியுங்கள்:
தினமும் ஒரு கைப்பிடி வேகவைத்த வேர்க்கடலை சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா?
Hair health oil

கருஞ்சீரக எண்ணெய் தயாரிக்க:

கருஞ்சீரகம் 50 கிராம், வெந்தயம் 50 கிராம் எடுத்து மிக்ஸியில் பொடியாக அரைத்து எடுத்துக்கொள்ளவும். இப்போது கடாயில் தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் 100 கிராம் சேர்த்து அடுப்பை மிதமான சூட்டில் வைத்து அதில் அரைத்த பொடியை சேர்த்து 2 நிமிடம் கலந்து விடவும். பிறகு அடுப்பிலிருந்து இறக்கி சூடு ஆறியதும் ஒரு பாட்டிலில் வடிகட்டி எடுத்து வைத்துக்கொண்டு பயன்படுத்தலாம். இந்த எண்ணெய்யை தினமும் தலையில் தடவி மசாஜ் செய்து வர, சில வாரங்களிலேயே முடி வளர்ச்சியை கண்கூடாகக் காணலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com