நீளமான மற்றும் ரம்மியமான தலைமுடி வேண்டுமா? அப்போ இந்தாங்க சூப்பர் டிப்ஸ். 

How to Achieve Long and Luscious Hair.
How to Achieve Long and Luscious Hair.

பழங்காலம் முதலே இந்தியப் பெண்களின் கூந்தல் ரம்யமான வசீகரிக்கும் அழகு கொண்டதாக பார்க்கப்படுகிறது. பல புராணங்களில் பெண்களின் குந்தலை வர்ணிக்கும் பாடல்கள் இடம் பெற்றுள்ளன. ஆனால் இன்றைய காலத்தில் மோசமான வாழ்க்கைமுறை காரணமாக பெண்களின் கூந்தல் மோசமாக மாறிவிட்டது. ஆனால் இதையும் சில இயற்கை வழிகளைப் பயன்படுத்தி நாம் சிறப்பாக மாற்ற முடியும். சரி வாருங்கள் மோசமான கூந்தலை சிறப்பாக மாற்றும் ரகசியத்தைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

உள்ளே இருந்து ஊட்டச்சத்து: நாம் அனைவருமே முடி பராமரிப்பு என்றதும் அதை மேலிருந்து செய்வதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். ஆனால் ஆரோக்கியமான கூந்தலுக்கு உள்ளிருந்து ஊட்டச்சத்து கிடைக்க வேண்டியது அவசியம். உங்கள் தினசரி உணவுகளில் பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், புரதம் போன்றவற்றை சேர்த்துக்கொள்வது மூலமாக, கூந்தலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும்.

பண்டைய கால பராமரிப்பு: இன்றைய நவீன யுகத்தில் பல்வேறு விதமான முடி பராமரிப்பு ப்ராடக்டுகள் வந்துவிட்டது. ஆனால் இவை அனைத்தையும் விட இயற்கையான ஆயுர்வேத முறையே நல்லது. முடிக்கு பொருத்தமான ஆயுர்வேத மூலிகைகள் மற்றும் எண்ணெயைகளைப் பயன்படுத்துவது மூலமாக, முடியின் ஆரோக்கியத்தை மீட்டெடுக்க முடியும். எனவே பிராமி, பிரிங்கராஜ் மற்றும் செம்பருத்தி போன்ற ஆயுர்வேத மூலிகைகளை முடிக்குப் பயன்படுத்துங்கள்.

உச்சந்தலை பராமரிப்பு: ஆரோக்கியமான உச்சந்தலை என்பது, ஆரோக்கியமான தலைமுடிக்கு அடித்தளமாகும். எனவே முறையாக அவற்றை பராமரிக்க அவ்வப்போது மசாஜ் செய்யுங்கள். இதனால் ரத்த ஓட்டம் தூண்டப்பட்டு மயிர்கால்கள் ஊட்டம் பெறுகிறது. 

இதையும் படியுங்கள்:
கொலஸ்ட்ராலைக் குறைக்க விரும்புபவர்களுக்கு ஏற்ற எண்ணெய்கள்! 
How to Achieve Long and Luscious Hair.

சீயக்காய் பயன்படுத்துங்கள்: பாரம்பரிய இந்திய முறைப்படி, தலைமுடிக்கு சீயக்காய், நெல்லிக்காய் போன்ற இயற்கையான பொருட்களைப் பயன்படுத்துங்கள். இவை ரசாயனம் நிறைந்த ஷாம்பூக்கள் போடலாமல், உச்சந்தலையை எவ்வித பாதிப்புகளும் இன்றி சுத்தப்படுத்த உதவும். 

பாதுகாப்பு அவசியம்: உங்கள் தலைமுடியின் நீளம் மற்றும் ஆரோக்கியத்தை பராமரிக்க அவற்றை வெளிப்புற சேலத்திலிருந்து பாதுகாக்க வேண்டியது அவசியம். அதிகப்படியான வெப்பத்தைப் பயன்படுத்தி ஸ்டைலிங் செய்வது, கடுமையான ரசாயனம் போன்றவற்றின் பயன்பாட்டால், கூந்தல் உடைந்து சேதமாகிறது. அதே நேரம் இறுக்கமான சிகை அலங்காரத்தை தவிர்க்கவும். அதற்குப் பதிலாக லூஸ் ஹேர், அதிகம் வெப்பம் பயன்படுத்தாத ஸ்டைலிங் போன்றவற்றை தேர்வு செய்யுங்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com