இன்றைய காலத்தில் நம்முடைய உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை மோசமாக மாறிவிட்டதால், பல்வேறு விதமான உடல் உபாதைகளுக்கு ஆளாகிறோம். குறிப்பாக உடல் எடை அதிகரிப்பு மற்றும் கொலஸ்ட்ரால் பாதிப்பு பெரும்பாலானவர்களைத் தாக்கும் ஒன்றாக உள்ளது. இதற்கு நாம் பயன்படுத்தும் எண்ணெயே காரணமாகச் சொல்லப்படுகிறது. அதே நேரம் நம்மால் எண்ணெயையும் முழுவதுமாக நிறுத்தி விட முடியாது என்பதால், நமது கொலஸ்ட்ராலை குறைப்பதற்கு ஏதுவாக இருக்கும் சில எண்ணெய்கள் பற்றி நாம் தெரிந்து கொள்வோம்.
ஆலிவ் ஆயில்: இந்தியாவில் பொதுவாகவே ஆலிவ் எண்ணெயின் பயன்பாடு குறைவாகவே உள்ளது. இதுபோக இந்தியாவில் இதன் தயாரிப்பு குறைவாக இருப்பதால் வெளிநாடுகளில் இருந்து இவற்றை இறக்குமதி செய்கிறோம். எனவே இதன் விளையும் கூடுதலாக இருப்பதால், மக்கள் ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்த விரும்புவதில்லை. மற்ற எண்ணெய்களை விட ஆலிவ் எண்ணெயில் வைட்டமின் ஈ, டி, ஏ, கே போன்றவை அதிகமாக இருப்பதால், கொலஸ்ட்ராலைக் குறைக்க பெரிதும் உதவுகிறது.
ஆளி விதை ஆயில்: நம்மூரில் பலருக்கு ஆளி விதை என்றால் என்னவென்றே தெரிவதில்லை. இதில் உடலுக்கு ஆரோக்கியம் கொடுக்கக்கூடிய ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாக உள்ளது. எனவே கொலஸ்ட்ரால் அளவு அதிகம் இருப்பவர்கள் ஆளி விதை எண்ணையைப் பயன்படுத்தினால், கொலஸ்ட்ரால் மேலும் அதிகரிப்பதை கட்டுப்படுத்த முடியும்.
கடலை எண்ணெய்: நாம் அனைவருக்குமே வேர்கடலை மிகவும் பிடித்த உணவாகும். இருந்தபோதிலும் அதிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயை யாரும் பெரிதாகப் பயன்படுத்துவதில்லை. கடலை எண்ணெயைப் பயன்படுத்தி சமையல் செய்வதால் ஆரோக்கியமாக இருக்கலாம். இதில் உடலுக்குத் தேவையான விட்டமின் ஈ இருப்பதால், உடலின் கெட்ட கொழுப்புகளைக் குறைக்க கடலை எண்ணெய் சமையலுக்குப் பரிந்துரை செய்யப்படுகிறது.
இந்த எண்ணெய்களை உங்கள் சமையலில் பயன்படுத்தி, உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க முற்படுங்கள். உடலில் கொலஸ்ட்ராலை குறைப்பது மூலமாக ரத்த அழுத்தம், இதயக் கோளாறு, மாரடைப்பு போன்ற பல பிரச்சனைகளில் இருந்து நாம் விடுபட முடியும். எனவே ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்வதில் கவனம் செலுத்துங்கள்.