
புகைப்படம் எடுக்க எல்லோருக்குமே பிடிக்கும். ஆனால், நாம் எடுக்கும் புகைப்படத்தில் நமக்கு டபுள் சின் (Double chin) இருந்தால் அது நம் அழகையே கெடுத்துவிடும். அதை சரிசெய்ய ஒரு சுலபமான மற்றும் இயற்கையான வழி உள்ளது. அது தான் Mewing Technique. இதைப்பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.
Mewing Technique என்பது நம்முடைய நாக்கை நாம் பேசாமல் அல்லது சாப்பிடாமல் இருக்கும் சமயத்தில் அது சாதாரணமாக இருக்கும் நிலையை மாற்றி நம் வாயுடைய மேற்ப்பகுதியில் (Tongue roof) படும்படி வைக்க வேண்டும். இதுப்போல எவ்வளவு நேரம் நம்மால் வைக்க முடிகிறதோ அதைப்பொருத்து நம் முக அமைப்பு மாறத் தொடங்கும். நாம் பார்ப்பதற்கு அழகாக மாறத் தொடங்குவோம்.
நம்முடைய முகத்தில் உள்ள, Jawline bones மற்றும் Cheeksஐ சமச்சீராக வைத்துக் கொண்டாலே முகம் அழகாக மாறும். நம்முடைய நாக்கை அவ்வாறு tongue Roofல் வைப்பதனால் நிறைய ஆரோக்கிய நன்மைகளும் இருக்கிறது.
நம்முடைய முக அமைப்பு சாதாரணமாக இருப்பதை விட வித்தியாசமாக இருந்தால் அதற்கு Mouth Breathing செய்வதும் ஒரு காரணமாக இருக்கும். மூக்கால் மூச்சி விடுவதைக் குறைத்துக் கொண்டு நிறைய பேர் வாய் மூலமாக மூச்சி விடுவார்கள். இதனால் முகத்தின் அழகு மாறிவிடும். Mewing Technique செய்வது மூலமாக சிறந்த சுவாசமும் மற்றும் குறட்டை பிரச்சனையை சரி செய்ய முடியும். தூக்கத்தில் ஏற்படும் மூச்சுத்திணறல் மற்றும் சைனசிடிஸிலிருந்து (Sinusitis) நிவாரணம் பெற முடியும்.
நிறைய பேருக்கு Double chin பிரச்னையிருப்பதற்கு முக்கிய காரணம் உடலில் Body fat Percentage அதிகமாக இருப்பது தான். உடல் எடையைக் குறைப்பது மூலமாக உங்களுடைய உண்மையான Face structure வெளியில் தெரிய ஆரம்பிக்கும். Body fat குறைவாக இருந்தும் முக அமைப்பு சீராக இல்லையென்றால் Mewing process ஐ பயன்படுத்த வேண்டும். இதனுடைய பலன் உடனே தெரியாது. அது தெரிய சிறிது காலம் எடுக்கும்.
Mewing technique எப்படி செய்வது?
முதலில் ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்கவும். அப்போது நம் நாக்கு வாயினுடைய மேற்ப்புறத்தை தொடும் அதுவே சரியான Mewing Position ஆகும். சூயிங் கம் (Chewing gum) சாப்பிடுவது கூட நம் முகத்திற்கு Define Jawline ஐ கொடுக்கும். நிறைய பேர் நம்முடைய முக அமைப்பை மாற்ற முடியாது அது Genetics என்று நினைக்கிறார்கள்.
ஆனால், நம் முகத்தில் வைக்கக்கூடிய Postures மற்றும் Position ஐ சரியாக வைத்தால் நம் முக அமைப்பு முடிந்த அளவு சீரானதாக மாறும். Mewing செய்வதால் முக அமைப்பு அழகாக மாறுவது மட்டுமில்லாமல் வாயினால் சுவாசிக்கும் பழக்கத்தையும் தவிர்த்து ஆரோக்கியமாக வாழலாம்.