
சிறிது பால் பவுடரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து பசை போல குழைத்து முகத்தை தடவி கால் மணி நேரம் ஊறவைத்து பின் முகத்தை கழுவினால் முகத்தின் நிறம் மாறும். முகம் பொலிவு பெறும்.
கடலை மாவில் தயிர் சேர்த்து கலந்து முகத்தில் தடவி நன்கு உலர்ந்த பிறகு கால் மணிநேரம் கழித்து கழுவினால் சருமத்தின் நிறம் அதிகரிக்கும். வாரம் இருமுறை இதை செய்யலாம்.
ஓட்ஸை முதல் நாள் இரவு ஊறவைத்து மறுநாள் காலையில் இதைவிழுதாக அரைத்து புளித்த தயிரில் கலக்கி இதை முகத்திலும், கழுத்திலும் தடவி 20 நிமிடம் ஊறவைத்து கழுவினால் முகம் இயற்கையான பொலிவுடன் இருக்கும். இதனை வாரம் ஒரு நாள் செய்யலாம்.
ஒரு டீஸ்பூன் கடலை மாவில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து சில துளிகள் எலுமிச்சை சாறு, ஒரு டேபிள் ஸ்பூன் பால் கலந்து பசை போல பிசைந்து முகத்தில் தடவி பத்து நிமிடம் கழித்து காய்ந்தவுடன் மிதமான சுடுநீரில் கழுவி வர முகம் மிருதுவாகும்.
பப்பாளி பழத்தை நன்றாக மசித்து அதனுடன் பால் பவுடர் சிறு தயிர் கலந்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் ஊறியதும் குளிக்கவும். இது சருமத்தின் இயற்கை நிறத்துக்கு உத்தரவாதம் தரும் சிகிச்சை.
முட்டையின் வெள்ளைக்கருவை வாரம் இருமுறை முகத்தில் பூசி 10 நிமிடம் கழித்து கழுவி வந்தால் சரும நிறம் சிவப்பாக மாறுவதோடு சருமம் மிருதுவாக ஆகும்.
சீரகம், முள்ளங்கியை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கி தனித்தனியாக தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டிய தண்ணீரில் முகத்தை கழுவினால் முகத்தில் படிந்திருக்கும் மாசுக்கள் அகன்று முகம் பிரகாசமாகத் தோன்றும்.
சந்தனப்பொடியை பால் அல்லது நீரில் கலந்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் உலரவிட்டு பேஸ் மாஸ் போல போட்டு வந்தால் சருமத்தின் நிறம் அதிகரிக்கும். இது முகத்துக்கு புத்துணர்வையும், முகப்பரு, தழும்புகள் மற்றும் கரும்புள்ளிகளையும் இது போக்கும்.