பார்லர் போகாமலேயே முகத்தை பளிச்சென்றாக்குவது எப்படி?

skin care Image
skin care ImageImage credit - pixabay.com

கொளுத்தும் வெயிலில் வெளியில் சென்று விட்டு வீடு வந்தால் முகம் சுட்ட கத்திரிக்காய் போல காட்சி அளிக்கும். இதற்காக பணம் செலவழித்து பார்லர் போகத் தேவையில்லை. வீட்டில் இருக்கும் இந்த ஆறு பொருட்களை வைத்து முகத்தை எப்படி பளிச்சென்று ஆக்குவது என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

வெயிலில் சென்று விட்டு வீட்டுக்கு வந்ததும் உடனே முகம் கழுவாமல் சிறிது நேரம் ஃபேனுக்கடியில் அமர்ந்து வியர்வை வடியும் வரை  இளைப்பாறவும். பின்பு முகத்தை வெறும் தண்ணீர் கொண்டு கழுவி விட்டு பின்வரும் ஆறு பொருள்களில் ஏதாவது ஒன்றை தினம் தினம் முகத்தில் தடவிக்கொள்ளலாம். 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி வந்தால் முகக்கருமை நீங்கி பொலிவு பெறும். பிரகாசமாக திகழும்.

இதையும் படியுங்கள்:
உருட்டி விட்டான் பாறை, தோல் உரிச்சான் மேடு, தொங்க விட்டான் குகை இதெல்லாம் உள்ள கோட்டை எங்குள்ளது தெரியுமா?
skin care Image

1. தேன் மற்றும் மஞ்சள்;

ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் சுத்தமான தேன் மற்றும் அரை ஸ்பூன் மஞ்சளை கலந்து கொள்ளவும் இந்த கலவையை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் வைத்திருக்கவும் தேன் சருமத்துளைகளைத் திறந்து முகத்தில் மிகுதியாக உள்ள எண்ணெய்யை நீக்கிவிடும். மேலும் முகக் கருமையும் நீக்கும். முகத்தை ஈரப்பதத்துடன் வைக்க தேன் உதவும். அதன் பின்னர் முகத்தை குளிர்ச்சியான தண்ணீர் கொண்டு கழுவி விடவும். 

2. எலுமிச்சை; இதில் உள்ள விட்டமின் சி பாக்டீரியாவை எதிர்க்கும் தன்மை கொண்டது. முகத்தில் எண்ணெய் வழிவதை தடுத்து முகக் கருமையும் நீக்குகிறது. எலுமிச்சைச் சாறை சிறிதளவு நீருடன் கலந்து பஞ்சில் நனைத்து முகத்தில் தடவவும். முகத்தில் பருக்கள் இருந்தால் அந்த இடத்தை விட்டுவிட்டு மீதி இடங்களில் தடவும். 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி விட்டால் முகம் பளிச் சென்றாகி விடும். 

3. தக்காளி; முகக்கருமையை அகற்றுவதில் தக்காளி முக்கியமான இடத்தை பிடித்திருக்கிறது. தக்காளியை நன்றாக கழுவி இரண்டாக வெட்டி அதை முகத்தில் தடவவும். கீழிருந்து மேலாக மசாஜ் செய்வது போல தடவவும். 20 நிமிடங்கள் கழித்து சோப்பு போட்டு முகம் கழுவி விடலாம். 

தக்காளி
தக்காளிskinkraft.com

4. முட்டையின் வெள்ளை கரு; இதில் புரதம் மற்றும் விட்டமின்கள் நிறைந்துள்ளன. முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் எடுத்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி விடலாம். இது சருமத்தை சுத்தம் செய்வதுடன் பளிச்சென்று வைக்கும். 

5. கற்றாழை; கற்றாழையை எடுத்து மேல் தோலை சீவி விட்டு பக்கவாட்டில் இருக்கும் முட்களையும் அகற்றி விட்டு உள்ளிருக்கும் ஜெல் போன்ற அமைப்பை வெட்டி எடுத்துக் கொள்ளவும். இதை மிக்ஸியில் அடித்து கூழ் போல செய்து கொள்ளவும்.

கற்றாழை
கற்றாழை

முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவி விடவும். இது முகத்தில் உள்ள சரும துளைகளை அடைத்து முகத்தை பளிச்சென்றாக்கும்.

6. ஓட்ஸ்; சிறிதளவு ஓட்ஸை தண்ணீருடன் கலந்து பேஸ்ட் போல செய்து கொள்ளவும். முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடங்கள் கழித்து கழுவி விட்டால் முகம் பளிச்சென்று காட்சியளிக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com